...

4 views

மழையில் மிதந்த முத்துக்கள்
கொட்டும் மழையில்...
நின்றேன் மரத்தின் நிழலில்.
சற்றே நிமிர்ந்தேன்....
சலசலவென்று கூச்சலிட்டு வந்து..... வழி தேடி என் விழி முன்னால் நின்றாய்.

நேரமோ என் பயணம் தொடர-ஆனால்
தொடர்ந்தோ எங்கள் நட்பு.

யார் அறிவார்?..
ஈர மண்ணால் முளைப்பது விதைமட்டும்ல்ல... ஓர் உறவு மென்று..

கவலைகள் மறந்து கதைகள் பேச...
சலிக்காமல் சண்டைகள் போட....
நண்பனாய் வந்தாய் நீ.

என் நாட்கேளா!!!
தோன்றி மறைந்தது உன் நினைவால்..

பாடத்தை மனப்பாடம் செய்யும்
- பருவத்தில்
உன்னை மனப்பாடம் செய்தேன்.

காரணமோ.....
என்னுள் தோன்றிய
பரிணாம வளர்ச்சி- ஆம்
முள்ளாய் என் இதயத்தை நெருடியது
"ஒரு சிறு காதல்"
© _Sri@ja_ official