பேருந்து பயண உறவுகள் 01
இருக்கைக்கு இடம்பிடிக்க
போட்டியிட்டு உள்ளே செல்கையில்
இருக்கைகள் எல்லாம்
இடம்பிடிக்கப்பட்டது.....😐
முன்னே வந்தவனுக்கு முன் எப்படி ?🥺
தலையில் பழங்களை சுமந்தவளின்
பாத்திரமும்.....🙂
அவசரமாக அலைந்து
ஓடிவரும் அலுவலக ஊழியரின்
பையும் .....😊
தன்னில் கால்எடையில்லா
பையை தூக்கி வா என்று
காதலி கொடுத்த பையும் ....😀
கணவனை வேலைக்கு அனுப்பி
காலை உணவை உண்ண நேரமின்றி...
ஓடிச்சென்று.......மதிய உணவை
வேண்டாவெறுப்பாக உண்டு...
பிள்ளை வந்து சாப்பிடவான
என்றவாறு மீதவைத்த
உணவு பையும்...😔
வயதாகி கன்னம்சுருங்கியிருப்பின்
தன்னவளுக்காக உழைக்கும்
தாத்தாவின் துணிப்பையும்...🥰
கைக்குத்துணையாக கல்லூரிக்கு
எடுத்துச்சென்ற ஒற்றை குறிப்பேடும்....😂
கோவிலில் அக்காமகளுக்கும்..
தங்கைமகனுக்கும் வாங்கிய
பொம்மைகள் ஒருஇருக்கையும்...🤩
இருக்கையின்றி நிற்கிறேன்!
ஓராயிரம் உறவோடு
இருக்கிறேன்! 😇
*********..............
© Nuradhaag