...

1 views

அவளதிகாரம்
சிந்தனையில் என்ன ஓட்டம் நதி போல் சென்று கொண்டு இருக்க,
கார்மேகம் சூழ்ந்த மதிய வேளையில், சூரியன் மெதுவாய் மேக கூட்டம் களைந்து வெளி வர நினைக்கயில் அவளின் பொற்பாதம் தீண்ட,
வான் மேகம் முதல் பூலோகம் வரை ஒரு நிமிடம் தன் நினைவை இழந்து விட்டதோ,
மீண்டும் மேகம் நடுவே ஒளிந்து கொண்ட சூரியன் யோசிக்கிறது,
இரவின் நிழலில் தானே நிலவை காண்பேன் என.
ஏனோ யாவும் குழப்பம் கொண்ட பொழுதில் அவளும் சிரிப்பும் ஒன்றாய் எழுதிய அவளத்திகராத்தின் முதற் கவிதை.

© அருள்மொழி வேந்தன்

Related Stories