தாயம்மா ...
உயிராக தானே உலகிற்கு வந்தேன் உத்தம நோக்கங்கள் உணர்த்தியவள் நீயே
சுதந்திரம் இல்லாமல் நான் சுகமாக இருந்ததெல்லாம் உன் கருவறையில் மட்டும்தான் அம்மா
உலகம் உருண்டை என்று நான் பிறக்கும் முன்பே அறிவேன்
நான் முளைத்த கருவறையை தொட்டுப்பார்த்தே அதை நான் உணர்ந்தேன்
ஊர் வேர்த்து நின்னாலும் நீ ஒதுக்கி போனதில்லை
கேட்காமல் வரும் சோறும்
விக்கலுக்கு முன் வரும் தண்ணீரும்
நீ இருக்கும் வரை தான் என்று நான் அறிவேன் அம்மா
இருந்தும் என் ஆசையெல்லாம்
நீ இருக்கும் வரை இருக்க வேண்டும்
நீ இறக்கும் முன்பே நான் இறக்க...