...

2 views

DOMESTIC VOILANCE AGAINST WOMEN
##STOP DOMESTIC VOILANCE AGAINST WOMEN

பெண்ணாக பிறந்ததற்கு
எந்நாளும் வருந்தவில்லை,
உன் கரம் எனை
எந்தன் பெற்றோரும்
சேர்க்கும்வரை..

ஏன் பிறந்தேன்
பெண்ணினமாய் என
நானும் எண்ணுகிறேன்
ஆணென நீ உன்னை
என்னிடம் காட்டுகையில்..

ஆண் வர்கத்தின் அழகாக
பக்கங்கள் படித்தது
போதுமென்று மறு பக்கம்
படிக்க நடந்ததென் திருமணமோ..?

பக்கங்களை கிழித்தெறிந்து
மீண்டும் அந்த அழகிய
பக்கங்களை படித்திடத்தான்
எனக்கொரு வாய்ப்பு வருமோ..

சண்டைகளற்ற வாழ்க்கை என்று
இங்கேதுமில்லை,நன்கறிவேன்..
சண்டைகள் மட்டுமே வாழ்க்கையா
என்பதே எனக்கான கேள்வியிங்கே..

நியாயங்களெல்லாம் என்னிடம்
இருந்திட வலுவான தேகம் நீ
கொண்டு வலி செய்தல் நியாயமோ..

வலி கூடி வலி கூடி உச்சகட்டம்
வந்தெனக்கு வலிமறந்து மரத்துத்தான்
போனதெந்தன் தேகமோ..

அழகானவள் வேண்டுமென்றென்னை
அடைந்த உனக்கன்று விளங்காத ஒன்று
அழிந்திடுமிந்த அழகென்று..

இன்று மெள்ள என் இளமையாவும்
உறிஞ்சிவிட்டு அலுத்துவிட என்
குற்றம் இங்கென்ன..நானறியேன்..

தேவையெனும்போது
நானும் உடை களைத்து
நிற்கவேண்டும்..

போதுமென நீ சொன்னால்
ஒதுங்கி நானும்
செல்லவேண்டும்..

உடல் உனக்கு
போதுமெனில் எனை
ஏன் நீ அடைந்தாயோ..

வேசி அவள் போதும்
உனக்கு..அதை நீயும்
மறந்தாயோ..

வலி தாங்க முடியாமல் நானும்
சற்று அழுதிடவே,அழுகுறளும்
உன் காதில் தாலாட்டாய் கேட்கிறதோ..

ஒதுங்கி நானும் ஓரமாய் அமர்ந்திருக்கும் பொழுதுகூட மனஅழுத்தம் குறைத்திட நீ எனை கசக்கி பிழிகின்றாய்..

சுமைதாங்கி கல் அதுவும் சுமை அதையும் தாங்கும் போல,அடிதாங்கி கல்லாய்
உன் கண்ணில் நான் தெரிகின்றேன்..

நான் வளர்ந்த விதம் அதையே நானும்தான் நினைத்தபடி எனக்குள்ளே
நானும் எந்நாளும் எரிகின்றேன்..

என்றேனும் ஒரு நாள் நிச்சயமாய் வந்திடுமே..அன்று நீ அறிந்திடுவாய்
பெண் அவளின் ரௌத்திரத்தை..

இன்று ஏன் காட்டவில்லை
என்ற கேள்வி உனக்கிருந்தால்
உனக்கான பதில் இதுவே..

*எரிமலை வெடித்திட வருடம்
ஆகிடும்..எரிந்துவிட்டால்
எதுவும் மிஞ்சாது*





© பினோய் பிரசாத்