...

7 views

தொற்றுக்கு வைப்போம் முற்று
உலகை உலுக்கும் கிருமி
ஒருநாள் இறக்கும் பொறு நீ!

தொலைவில் இருந்து பழகு;
தொற்றை விட்டு விலகு!

கை கழுவ படாதே சோம்பல்;
நாளை ஆகிவிடுவாய் சாம்பல்!

பிணத்தை புதைக்க இடமில்லை;
உன் இனத்தைப் பார்க்க இது நேரமில்லை!

காக்கி சட்டை போட்ட கடவுளே;
தெருதோறும் நிற்கிறாய் காவல் தெய்வமாக!

சுகத்தை மறந்து சுத்தம் செய்கிறார்கள்;
நீ சுகமாய் வாழ துப்பரவாளர்கள்!

கடவுளைப் பார்க்கிறோம் சிகிச்சை அறையில்;
மருத்துவர் எனும் உருவில்!

குழந்தைகளோடு விளையாட கற்றுக்கொள்;
இதுதான் இன்பம் ஒத்துக்கொள்!

மனதில் நம்பிக்கை எனும் ஒளியை ஏற்றுவோம்;
கொரோனா எனும் இருளை போக்குவோம்!

பொறுப்போம் சற்று;
வைப்போம் முற்று; தொற்றுக்கு!