...

23 views

வீணையடி நானுனக்கு...
வீணையடி நானுனக்கு
எனை மேவும்
விரலாய் நீயெனக்கு...

வேங்குழலடி நானுனக்கு
எனை உயிர்ப்பிக்கும்
மூச்சுக்காற்றாய் நீயெனக்கு...

எழுதுகோலடி நானுனக்கு
என்னுள் கலந்து கிடக்கும்
உதிரமாய் நீயெனக்கு...

காகிதமடி நானுனக்கு
என்னுள் நிறைந்துகிடக்கும்
கவிதையாய் நீயெனக்கு...

வான்பார்த்த பூமியடி நானுனக்கு
எனை செழிக்கவைத்திடும்
மழையாய் நீயெனக்கு...

சாமரமடி நானுனக்கு
எனை வருடும்
காற்றாய் நீயெனக்கு....

பிரபஞ்சமடி நானுனக்கு
என் பிரபஞ்சத்தின்
யாதுமாய் நீயெனக்கு...!

© நித்திலன்...🎭