...

1 views

பக்திக்குப் பயந்த பதுமையே…
சுட்டிக்காட்டிய
சுடர்விழி
சுவாசம் சேர்ந்திடும்
சொல் மொழி
மெட்டி போட்டிட
மேயா’மான்
மெட்டு போட்டே
பொழியும் வான்
கட்டி இழுக்கும்
கட்டழகில்
கொட்டி தீரும்
பே’மழை
அவள்
புன்னகை,

மழை
பூமி தொட்டதும்
துளிரும் இலை
சீவி வடித்த
கார்குழல் தலை
தாவி
அணைக்குமோ
தவம்
கண்ட சிலை
பிணக்கம்
இல்லாத
உறவே பிழை
உறக்கம்
தொலையுதே
கிரக்கம் விலை
சலிக்குமோ
வாசகம் களிக்கவே
காம கலை
பழிக்காதே
பாவையே
குளிக்கின்ற நிலை
தெளிக்கின்ற
தூறலில்
விழிக்கின்றேன்
என்றும்
மோட்சமே
எமக்குண்டு,

முந்தானை
மூடாதே
வெந்தாகுதே
என் வேடம்
பந்தாடவே
பார்க்கின்ற
பாவியானேன்
சிந்தாமணியே
சிறகடிக்கும்
கிளியே
வந்ததாகுமோ
வரவே
சந்தாகவே
சமயம்
சாய்ந்திடுமே
இமயம்
விந்தாகுமே
காமம்
மறவாது ஓதவே
உன் நாமம்
மண்ணோடு
மறையவே
விண்ணோடு
விரையவே
கண்ணோடு
கரையவே
கனவாகக் கலையவே

இரவே
இரவின் உருவே
உறவே
உருவின் கருவே
மறைவே
மருவின் திருவே
சிதறும்
நினைவே
சீண்டல்
திணையே
சில்மிஷ
துணையே
தத்தளிக்கும்
தனிமையே
பித்துக்கொள்ளும்
உரிமையே
செத்துக்கிடக்கும்
இளமையே
சீக்கிரம் தொட்ட
முதுமையே
புத்திக்கு எட்டாத
புதுமையே
பக்திக்குப் பயந்த
பதுமையே

#தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழ்கவிதைகள் #தமிழ்கவிதை #தமிழ்வரிகள் #aaram_viral #tamilquotes

© aV ​✍🏾