...

11 views

புது வரவாய் வந்தவளே
புதுவரவாய் வந்தவளே
உன் வருகைக்கு நல்வரவும்மா
புதுவுலகை ஆளவரும் அரசியம்மா
நீ புதுவுலகை ஆளவரும் அரசியம்மா

நான் சொல்லுவதை கொஞ்சம் கேளம்மா
விசித்திரம் நிறைந்த உலகின் நிலையை கொஞ்சம் கேளம்மா...

ஏலேலோ ஐலசா, ஏலேலோ ஐலசா, ஏலேலோ ஐலசா

வான்மகள் மலருகிறாள்
பூமித்தாய் ஒளிருகிறாள்
ஆங்காங்கே அழகான நட்சத்திரம் மின்னுதம்மா
அது பிறந்து பலகோடி ஆண்டு ஆகுதம்மா
அது பிறந்து பலகோடி ஆண்டு ஆகுதம்மா...

ஏலேலோ ஐலசா, ஏலேலோ ஐலசா, ஏலேலோ ஐலசா

ஆதவன் வந்துபோகும் வீடம்மா
அவனுக்கு கிழக்கும் மேற்கும் எல்லையம்மா
பகலுக்கும் இரவுக்கும் அவனே பொறுப்பம்மா
அவன் தயவால் வாழ்வது பலகோடி உயிரம்மா
அவன் தயவால் வாழ்வது பலகோடி
உயிரம்மா....

ஏலேலோ ஐலசா, ஏலேலோ ஐலசா, ஏலேலோ ஐலசா

நம் வாழ்க்கையொரு கல்லம்மா
அதில் காலமொரு சிற்பியம்மா
வலி தாங்கினால் நீயும் கடவுளம்மா
வலுவிழந்தால் எல்லாம் பயனற்று போகும்மம்மா...

ஏலேலோ ஐலசா, ஏலேலோ ஐலசா, ஏலேலோ ஐலசா

மூடத்தனத்தை ஒழிக்க
அறிவெனும் மூலதனம் வேண்டும்மம்மா
முட்டாளாய் இருந்துவிட்டால்
நீயொரு கோழையம்மா
சமுதாய வரலாறு பழிக்கும் நாளையம்மா...

ஏலேலோ ஐலசா, ஏலேலோ ஐலசா, ஏலேலோ ஐலசா

எப்போதும் சோம்பலும் வேண்டாம்மம்மா
எதிலும் தாமதமும் ஆகாதம்மா
ஆழ்ந்த உறக்கமும் கூடாதம்மா
அயராத உழைப்பே வாழ்க்கையை வெல்லும்மம்மா...

ஏலேலோ ஐலசா, ஏலேலோ ஐலசா, ஏலேலோ ஐலசா

தன்னை அறிந்துவிட்டால்
எல்லாமே சுபம்மம்மா
புலங்களை அடக்கிக்கொண்டால்
வெற்றி ரொம்ப சுலபம்மம்மா
வாழ்வில் வெற்றி ரொம்ப சுலபம்மம்மா...

ஏலேலோ ஐலசா, ஏலேலோ ஐலசா, ஏலேலோ ஐலசா

மனதில் வலிமை பிறக்கனும்மம்மா
செயலில் உறுதியை வளர்க்கனும்மம்மா
காரியத்தை கச்சிதமாய் முடிக்கனும்மம்மா
காலத்தை கண்போல் மதிக்கனும்மம்மா...

ஏலேலோ ஐலசா, ஏலேலோ ஐலசா, ஏலேலோ ஐலசா

உடல் அழகென்பது ஒருகேடம்மா
உள்ளத்தின் அழகே சிறந்ததம்மா
நல்லறிவை கற்று அறிந்தால் மேதையம்மா
முன்னோரின் அறிவுரை தினம் கேளம்மா
முன்னேற்றம் தானாக உன்னை நாடும்மம்மா...

ஏலேலோ ஐலசா, ஏலேலோ ஐலசா, ஏலேலோ ஐலசா

இறப்புக்கும் பிறப்புக்கும் இடைதனில் வாழ்க்கையம்மா
வாழ்க்கையின் காலம் ரொம்ப சிறிதம்மா
அதிலே சாதிப்பது எல்லோருக்கும் பொறுப்பம்மா
அதிலே சாதிப்பது எல்லோருக்கும்
பொறுப்பம்மா...

ஏலேலோ ஐலசா, ஏலேலோ ஐலசா, ஏலேலோ ஐலசா

சரித்திரம் படைக்க வேண்டுமெனில்
தரித்திரத்தை தூரமாய் விலக்கனும்மம்மா
பிறர் வாழ வழிவகையும் செய்யுனும்மம்மா
யாருக்கும் துன்பம் தராமல் வாழனும்மம்மா
யாருக்கும் துன்பம் தராமல்
வாழனும்மம்மா.

ஏலேலோ ஐலசா, ஏலேலோ ஐலசா, ஏலேலோ ஐலசா

- சங்கத்தமிழன்