...

4 views

காதல்
கத்தியின்றி யுத்தம் ஒன்று நடந்திடும் மனதுக்குள்ளே
சுவாசிக்க காற்றிருந்தும் சுவாசிக்க ஏங்க வைத்திடும்
வாசமில்லா மலரிலும் வாசம் தந்திடும்
அறியா மொழியையும் பேசிட வைத்திடும்
சிறகில்லாது வானில் பறந்திட
செய்திடும்
காய்ந்த மலரையும் ரசிக்க செய்திடும்
இரவில் நிலவில்லா வானையும்
ரசிக்க வைத்திடும்
பட்டாம்பூச்சியாய் மனதை மாற்றிடும்
பிரிவு என்ற ஒன்றை தந்து உயிர் பிரியும் வலியையும் தந்திடும் காதல்..‌‌


© All Rights Reserved