...

7 views

உனக்காக நான்
தலையாட்டி சிரிக்கும் மலர் போல
தலை சாய்த்து நீ சிரிக்கும் அழகிலே
மொத்தமும் மயங்கி போனேனடா
உன்னை கண்டால் என்னுள்
எழும் உணர்வுக்கு பெயர்
என்னவோ
கலங்கி நீ நிற்கும் போது என்
மனமும் கலங்குதடா
இந்த உணர்வுக்கு பெயர் என்னவோ
யாருமில்லை என நீ சொல்லும் போது உனக்காக நான்
இருக்கிறேன்
என சொல்ல துடிக்கிறது உதடுகள்
இனம் புரியா இந்த உணர்வுக்கு பெயர் என்னவோ
தெரியவில்லை என்ற போதும்
சுகமாய் ரசிக்கிறேன் இந்த உணர்வை

© All Rights Reserved