...

3 views

ஏவுகனை நாயகன்
19 ம் நூற்றாண்டின் பட்டறிவு பகலவன்,
தமிழ்நாடு கண்ட தங்கமகன்,
ராமேஸ்வரத்தில் உதித்த ராக்கெட் நாயகன்..
படகு சொந்தக்காரரின் ஐந்தாம் மகன்,
"ஐந்தை பெற்றால் அரசனும் ஆண்டி" என்பது பழமொழி…
ஐந்தாவதாய் அறிவாளனை பெற்று அரசனானான் இவன் தந்தை…
சாதாரணமான பள்ளி மாணவன்,
பின்னாளில் சரித்திர நாயகன்,
பட்டபடிப்பு எம். ஐ. டி இல்,
பாதுகாப்பு ஆராய்ச்சிஇல் முதன்மை அறிவியலாளன்..
இந்திய ராணுவத்திற்கு ஹெலிகாப்டர் செய்தவன் ..
விக்ரம் சாராபாய் குழுவின் அங்கமிவன்..
எஸ். எல். வி -3 ன் திட்ட நாயகன்..
புன்னகைக்கும் புத்தன் திட்டத்திற்காக ராஜா ராமன்னாவால் அழைக்கப்பட்டவன் ..
அக்னி, ப்ரித்வியின் நாயகன்..
அளப்பரியா சாதனைகளின் தாயகமிவன்…
தாயகத்தின் தலைவனாகவும் சில ஆண்டுகள் வாழ்ந்தவன்,
தன்னிகரில்லா "ஏவுகனை நாயகன் "
மண்ணிற்கு உரமானான்….
விதைத்துள்ளோம்,
நம் அறிவியல் நாயகனை…
மீண்டெழுவான் அவன் கனவு பாரதமாக…


© ❤நான் வாணி ❤