...

6 views

வணிகவியல் ஆசிரியரோடு.......
வணிகவியல் ( Commerce teacher)


இப்பொழுதெல்லாம்
எதாவது பேசினால்
அது தொடர்பாக
ஒரு நபரோ.... அல்லது
ஒரு நிகழ்வோ ..... பள்ளியில் இருந்து
நினைவு வந்திடும் உடனே.....
நிஜம் இங்கிருந்தாலும்
நினைவெல்லாம் அங்கு தானே....
எண்பது நாள் பயணம் எளிதில்
மறக்குமா..... நினைவோ ஒரு பறவை
அது பறந்து கொண்டு தானே இருக்கும்
இறக்கும் வரைக்கும் .....

சரி நினைவுக்கு வருவோம்....

அம்மாவும் அப்பாவும் வரவு செலவு
எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தனர்....
எப்போதும் போலவே வரவு எட்டணா .... செலவு பத்தணா.....
பற்றாக்குறைக்கு என்ன செய்வது என்ற விவாதம்.....


என் நினைவோ உடனே நான் முதன் முதலாக
கவனித்த எங்கள் வணிகவியல் ஆசிரியரின் ( Commerce teacher) கணக்குப் பதிவியல் ( Accountancy) வகுப்பில் போய் நின்றது......


நான் ஆசிரியர் பயிற்சிக்கு போன நாள் முதல் தமிழ் ஆசிரியர் விடுப்பு எடுத்த நாட்களில் ஒவ்வொரு ஆசிரியரின் வகுப்பிற்கும் செல்வேன் அப்படி ஒருநாள் இவர்களிடம் வணிகவியல் வகுப்பிற்கு நானும் வருகிறேன் என்னை கூப்பிடுங்கள் பாடம் எடுக்கும் போது என்று சொல்லியிருந்தேன்....


பள்ளி நாட்களிலேயே ஒரு வகுப்பேனும் Commerce teacher class போகனும் என்று நினைத்துள்ளேன் ஆனால் நாம் படிக்கும் பிரிவில் இருந்து இன்னொரு பிரிவு வகுப்பறைக்கு போய் பார்த்து வருகிறேன் என்றால் இதை நீ ஒழுங்கா படி அப்பறமா அதைப் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்ற பயம்.....🤣🤣 அதனால் கேட்டதே இல்லை....



வணிகவியல் பாடம் தான் அவர்களிடம் படிக்கவில்லையே தவிர அவர்களை எனக்கும் என்னை அவர்களுக்கும் என் ஆறாம் வகுப்பில் இருந்தே நன்றாகத் தெரியும்....


பெரும்பாலும் முழு ஆண்டுத் தேர்வு சமயத்தில் எல்லாரும் பொதுத் தேர்வுப் பணிக்கு செல்லும் சமயத்தில் முழு நேரம் அவர்களின் கண்காணிப்பில் இருக்கும் வாய்ப்புக் கிடைக்கும்.... பெரிய வகுப்பிற்கு போகும் ஆசிரியர் சிறிய வகுப்புகளுக்கு வரும்போது புதிய ஆசிரியர் என்பதால் பயம் கலந்த பரவசம் இருக்குமல்லவா! எனக்கும் அப்படித்தான்......😍☺️
எனக்கும் அவர்களுக்கும் அன்பின் தொடர்பு ...... அப்போதிலிருந்தே..... நான் அடிக்கடி பள்ளி நாட்களில் காயம் செய்து கொள்வேன் உடனே அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்று களிம்பும் மருந்தும் வைத்துவிட்டு காயம் ஆற்றி தேற்றுவார்கள் என்னை.... பெரும்பாலான நேரங்களில் எனக்கு மருத்துவராக மாறிய ஆசிரியர்கள் Commerce teacher & English teacher ம் தான்......☺️
எப்படியெல்லாம் எல்லாரையும் தொல்லை பண்ணிருக்கேன் பாருங்களே......😅😊


ஒவ்வொரு முழு ஆண்டு முடிவிலும் எனக்கு நினைவு தெரிந்து ஒரு எட்டாவது வரை விடுமுறை விடும் சமயத்தில் என்னிடம் சொல்லி அனுப்புவார்கள் இந்த விடுமுறை முடிந்து டீச்சரை (என்னை) பார்க்க வரும் நடந்திருக்கனும் சரியா .... முத்துரம்யா என.......🥰🥰 நானும் சரிங்க டீச்சர் சரிங்க டீச்சர் என தலையை தலையை ஆட்டி வருவேன் ....🙁 (எ) ன்றும் நெஞ்சிலிருந்து நீங்கா தருணங்கள்.... அதே சமயம் அதை செய்து அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லையே நான் என்றொரு குற்ற உணர்ச்சி இப்போது வரையில்.....


7,8 வகுப்புகளில் முழு ஆண்டுத் தேர்வு விடுமுறை மற்றும் டீச்சர் விடுப்பில் இருந்த காலங்களில் எல்லாம் அழைப்பு விடுத்து பேசியதுண்டு ....... இளங்கன்றுக்கு பாசம் தானே தெரியும் பயம் அறியாதல்லவா!


மேல் வகுப்பு போகப் போக வளர்ந்து விடுவதால் எல்லாவற்றிற்கும் யோசித்து யோசித்து அப்படியே விட்டுவிடுவோம் தானே .... அது அந்த வயதிற்கே உரிய மனோநிலை .... அப்படித்தான் நானும் மேல்நிலை வகுப்பில் அறிவியல் பிரிவு எடுத்ததால் இவர்களை எப்போதாவது வெளியில் பார்த்துப் புன்னகைப்பதோடும்..... டீச்சர்.... என்றொரு வார்த்தையோடும் எங்களின் அன்புப் பரிமாற்றம் முடிந்து போனது..... பள்ளியை விட்டு வந்ததில் இருந்து அழைப்பில் கூடப் பேசவில்லை.....🙁 பலமுறை மனதில் நினைத்ததோடு நிறுத்தியிருக்கிறேன் .... நாம தான் ரொம்ப நாளா பேசாம விட்டுவிட்டோமே என.....


அந்தக் குறையை எல்லாம் நிவர்த்தி செய்தது இந்தப் ஆசிரியர் பயிற்சியின் எண்பது நாட்கள்.....



முந்தைய நாள் நான் வகுப்பிற்கு வருவதாக சொல்லியிருந்ததை தவறாமல் நினைவு வைத்திருந்து பக்கத்து வகுப்பில் எங்கள் தமிழ் வகுப்பில் டீச்சரே வந்து
தமிழாசிரியரிடம் அனுமதி கேட்டு என்னை அவர்கள் வகுப்பிற்கு அழைத்துச் சென்று பற்றும் வரவும் பற்றி எனக்காக மட்டுமே விளக்கி உரைத்தார்கள்......
வங்கியின் பற்றும் வரவும் இன்று மறந்து போயிருந்தாலும்
நீங்கள் எனக்குக் கொடுத்த அன்பின் பற்றை அதனால் என் வாழ்நாளில் நான் பெற்ற மகிழ்வின் வரவை ஆயுளுக்கும் மறவேன்.....☺️🙏🏾✨


அதுமட்டுமின்றி இறுதியாக போய் வருகிறேன் என்று ஆசிரியரிடம் சொன்னபோது போய் வா... முத்துரம்யா .....தமிழ் நிழல் வலையொளியில் சந்திப்போம் என்று சொல்லி வாழ்த்தி வழியனுப்பியதில் அகம் நெகிழ்ந்தேன்......ஆனந்தமாக இருந்தது.....☺️🤩


கணக்கில் வாங்கியதை வட்டியும் முதலுமாக திருப்பித் தர வேண்டும் என்பார்கள் கொடுத்த அன்பிற்கு பதிலாக அவர்களுக்கு அன்பையே நாம் தந்தாலும் ஆயுளுக்கும் அசலைக் கூட திருப்பித் தந்துவிட முடியாது தானே அன்பில்.


#tamilnizhal