...

1 views

வெள்ளம் பகுதிகளின் மேலே ஹெலிகாப்டர்
காவிரி நதியின் வெள்ளம் பாதிப்புகளில் சிக்கி தவிக்கும் தட்டு மால் கிராமம் மக்களின் ஒரு சிலரின் தவிப்பு, கும்பகோணம் அருகே உள்ள திருப்புறம்பியம் ஊராட்சியின் தட்டு மால் கிராமத்தின் வெள்ளம், ஊரு முழுவதும் சூழ்ந்துள்ளது,
அங்கு அம்ருதா தாயையும் அவளின் மகன் கார்த்திக் கும் இரண்டு அல்லது மூன்று நாட்களாக வெள்ளத்தில் அவர்களின் சொந்த வீட்டில் சிக்கியுள்ளனர், படிப்படியாக அவர்களின் வீடு ஒரு அறை இடிந்து விழுந்தது, அது தாத்தா காலத்து சீமை ஓடு வீடு, ஓடுகள் அனைத்தும் வெள்ளத்தில் விழுந்து அடித்து கொண்டு போகிறது, இதனைக் கூர்ந்து கவனிக்கிறான் கார்த்திக்,
வெள்ளம் படிப்படியாக குறைந்து கொண்டு இருக்க வெள்ளம் பகுதிகளின் மேலே ஹெலிகாப்டர் பறந்து வர வெள்ளத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற இதனை அறிந்த கொண்ட கார்த்திக், எஞ்சியிருக்கும் சீமை ஓட்டின் வீடு கூரை மீது ஏறி வந்து ஹெலிகாப்டருக்கு தனது அரைகை சட்டையை கழற்றி தலைக்கு மேலே சுழற்றுகிறான், ஹெலிகாப்டரும் நெருங்கி வருகிறது, இதனை அறிந்து கொண்ட கார்த்திக் கீழே இறங்கி தனது தாயை அம்ருதா வை தனது தோள்பட்டை மீது உட்கார வைத்து, தோள்பட்டை மீது கால் பாதம் வைத்து சீமை ஓட்டின் கூரை மீது ஏற்றி விடுகிறான், கார்த்திக் கும் ஏறி வந்து விடுகிறான், ஹெலிகாப்டர் இருந்து காயிற்று ஏணி போட படுகிறது.
போடப்பட்ட காயிற்று ஏணியில் தனது தாயை உட்கார வைத்து இறுகி கட்டி மேலே ஹெலிகாப்டருக்கு இழக்க படுகிறது, பிறகு கார்த்திக் கும் ஏணியில் இலகுவாக நின்று கொண்டு இறுக்கமான கட்டி தாயர் நிலையில் இருகிறேன், என்று தனது கையை நான்கு விரல்களை மூடிக்கொண்டு கட்டை விரலை காட்டி இழுங்கள் என்கிறான், கார்த்திக் ஹெலிகாப்டரை நோக்கி மேலே செல்கிறான்,
ஹெலிகாப்டரில் கார்த்திக் எகிறி குதித்து இலகுவாக உள்ளே நுழையகிறான், கார்த்திக் தனது தாயின் அருகில் போயி அமர்ந்து கொள்கிறான், தாய் கண்ணீரோடு கார்த்திக் யை அனைத்து கொள்கிறாள், ஹெலிகாப்டர் மக்கள் பாதுகாப்பு மையத்தை நோக்கி பயணிக்கிறது, கீழே வெள்ள காடாக காட்சிகள்,
சற்று நேரம் கழித்து ஹெலிகாப்டர் உள்ளே தாய் அம்ருதா கார்த்திக் மற்றும் ஹெலிகாப்டர் பைலட் யும் விமான படை வீரர்கள் மற்றும் ஏனையோர் இருக்க அனைவரும் முகங்களில் சோகத் துயரங்கள் நிறைந்த இருக்க, கண்களில் கண்ணீர் துளிகள், அவ்வமயம் கார்த்திக் தனது அம்மா நோக்கி நானும் ( ஏர்மன்) விமான படை வீரார் ஆக போகிறேன் என்று உரக்க சொல்லி விட அனைவரையும் காப்பாற்ற போகிறேன் உற்சாகமாக உரக்க சொல்லி விடுகிறான், தாய் கண்ணீரோடு தனது மார்பு யோடு தன் மகனை அனைத்து கொள்ளுகிறாள், ஏர்மன்கள் கார்த்திக்யை கூற்று கவனிக்கின்றனர்,
சற்று அமைதி நிலவ ஹெலிகாப்டரின் பைலட் ஒரு கரத்தின் நான்கு விரல்களை மூடிக்கொண்டு கட்டை விரலை காட்டி தனது கையை உயர்த்தி சபாஷ் என்று காட்டுகிறார், அதைப்போல ஏர்மன்கள் தனது கையை கார்த்திக் கு
காட்டுகின்றனர், கார்த்திக் கொஞ்சம் புன்வருவலோடு அதைப்போல தனது கையை நீட்டி காட்டுகிறான், தாயை கண்ணீரை துடைத்து கொள்ளுமாறு ஏர்மன்கள் வேண்டி கொள்கின்றனர், கார்த்திக்கின்
லட்சிற்கிற்காக பைலட் தனது ஏரோநாட்டிகல் புத்தகம் ஒன்றை கார்த்திக்கு வழங்குகிறார், ஏர்மன்கள் தனது பிஸ்கட் துண்டுகள் தாய்க்கு வழங் கின்றனர், கும்பகோணம் மக்கள் பாதுகாப்பு வளாக மையத்தில் ஹெலிகாப்டர் தரை இறங்கியது, தாயும் கார்த்திக் கும் மற்றும் ஏனையோரும் சேர்ந்து மத்திய மாநில அரசுகளுக்கும், குறிப்பாக மீட்பு படை குழுவிற்கும் நன்றி கடனாக இரு கரம் ஒன்று சேர்ந்து வணங்கி வாறு இறங்கி மக்கள் பாதுகாப்பு மையத்திற்கு செல்கின்றனர்.....
முற்றும்.....
© G.V.KALASRIYANAND