காதல் (LOVE)
© நாவல்
[#காதல் part 7
ஜாஸ்மீன காப்பாற்ற என்ன வேணாலும் செய்ய தயார் என்று தீபக் கூறினான்.
நீயும் ஜாஸ்மீனும் கல்யாணம் பன்னிக்கனும் அப்போ தான் நம்ம ஜாஸ்மீன உயிரோட காப்பாற்ற முடியும் கல்யாணம் முடிஞ்ச அடுத்த நிமிடமே ரெண்டு பேரும் ஊரவிட்டே போய்யிரனும் எல்லா பிரச்சினையும் முடிக்க இதுதான் வழி என்று கௌதம் சொன்னான்.
எனக்கு சம்மதம் தான் கல்யாணம் முடிஞ்சதும் நாங்க பெங்களூர் போய்ரோம் அங்கே என்னுடைய நண்பர்கள் இருக்காங்க போலீஸ் பழக்கமும் இருக்கு ஜாஸ்மீன் குடும்பத்துல இருந்து யார் வந்தாலும் அங்கே பிரச்சினை செய்ய முடியாது நாங்க பாதுகாப்பா இருப்போம் என்று தீபக் சொல்லி விட்டு கல்யாணத்திற்கும் சம்மதித்தான்.
அதே சமயம் வெளிநாட்டில் தொழில் விஷயமாக சென்ற தீபக் அப்பா இரண்டு நாட்களில் திரும்பி வருவதாக தீபக்கிற்கு போன் செய்து தகவல் கூறினார்.
அப்பா வருவதற்குள் எங்க கல்யாணம் முடிஞ்சாகனும் இல்லன அவரோட செல்வாக்க பயன்படுத்தி ஜாஸ்மீன் குடும்பத்தையே அழிச்சுருவாரு என்று பயத்துடன் கௌதமிடம் சொன்னான் தீபக்.
சரி தீபக் நீ மருத்துவமனையில் இருக்க வேணாம் வீட்டுக்கும் போகாத ஏதாவது ஹோட்டலில் தங்கு இல்லன ஜாஸ்மீன் அண்ணன்கள் உன்ன தேடி கண்டுபிடிச்சு ஏதாவது செஞ்சுருவாங்க,
நாளைக்கு உனக்கும் ஜாஸ்மீன்க்கம் ரிஜிஸ்டர் ஆபிஸில் கல்யாணம் என்று கௌதம் கூறினான்.
தீபக்கும் சரி என்று சொல்லி விட்டு ஜாஸ்மீன எப்படி கூட்டிட்டு வரபோறிங்க என்று கேட்டான்.
அதுக்கு ஒரு வழி இருக்கு நான் அதை பார்த்துக்கிறேன் என்று சொல்லி விட்டு கீர்த்தனாவ கூட்டிட்டு ஜாஸ்மீன் வீட்டுக்கு சென்றான் கௌதம்.
ஜாஸ்மீன்னை வெளியே அனுப்ப சொல்லி அவளுடைய வீட்டில் கல் எறிந்து பிரச்சினை செய்தான் கௌதம்.
வீட்டில் உள்ள அனைவரும் வெளியே வந்து கௌதமை அடித்தனர்.
அதே சமயம் வீட்டின் பின்புறம் இருக்கும் வாசல் வழியாக உள்ளே வந்து ஜாஸ்மீன்னை அடைத்து வைத்திருந்த அறையில் இருந்து காப்பாற்றி வெளியே கூட்டிட்டு வந்து தன்னுடைய காரில் ஏற்றிக்கொண்டு பாதுகாப்பாக அங்கிருந்து சென்றாள் கீர்த்தனா.
குறிப்பிட்ட நேரத்தில் எல்லாம் சரியாக முடியவும் கௌதமும் அங்கிருந்து ஓடிவிட்டான்.
ஜாஸ்மீன்னை அழைத்து வந்து தன்னுடைய தோழி என்று பெற்றோர்களிடம் சொல்லி விட்டு தன்னுடைய அறையில் உட்கார வைத்து விட்டு நாளை உனக்கும் தீபக்கிற்கும் கல்யாணம் அதுக்காக தான் இவ்வளவு கஷ்டப்பட்டு உன்ன காப்பாற்றி கூட்டிட்டு வந்திருக்கோம் என்று கீர்த்தனா கூறினாள்.
கௌதம் தனக்காக வீட்டில் உள்ளவர்களிடம் அடி வாங்கியதை நினைத்து ஜாஸ்மீன் ரொம்பவும் வேதனையோடு அழுதாள்,
கீர்த்தனா அவளை சமாதானம் செய்து அவளுடைய காயங்களுக்கு மருந்து போட்டுவிட்டு ஓய்வு எடுக்க சொல்லி விட்டு அறையை விட்டு வெளியே வந்துவிட்டாள்.
அதே சமயம் ஜாஸ்மீன் வீட்டில் இல்லை ஓடி விட்டாள் என்று தெரிந்ததும் அவளுடைய வீட்டில் இருக்கும் அனைவரும் அவளை பார்த்த இடத்திலே வெட்டி கொல்ல கிளம்பினார்கள்.
முதலில் தீபக்கின் வீட்டிற்கு சென்று அவனை கொல்ல தேடினார்கள் தீபக்கும் இல்லை ஜாஸ்மீனும் இல்லை
என்ன செய்வது என்று புரியாமல் வெறியோடு கௌதம் வீட்டிற்கு சென்றார்கள்.
ஆனால் அவர்கள் வருவதற்கு முன்பே தன்னுடைய பெற்றோர்களை பாதுகாப்பாக வேறு ஊருக்கு அனுப்பி விட்டான் கௌதம்.
அவர்கள் அனைவரும் கொலை வெறியோடு தேடிட்டு இருந்தார்கள்.
அதே சமயம் கல்யாணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தான் கௌதம்.
மறுநாள் கல்யாணத்திற்காக ஜாஸ்மீன்னை அலங்காரம் செய்து தயார் படுத்தி கொண்டிருந்தாள் கீர்த்தனா.
(இவர்கள் வாழ்க்கையவே திருப்பி போட போகிறது விதி)
PART 8
[#காதல் part 8
ஜாஸ்மீன்,கீர்த்தனா இருவரும் கிளம்பி பாதுகாப்பாக ரிஜிஸ்டர் ஆபிஸிக்கு வந்து சேர்ந்தனர்.
கௌதமும் மாலை வாங்கிட்டு சாட்சி கையெழுத்து போட தன்னுடைய காலேஜ் நண்பர்கள் சில பேருடன் ரிஜிஸ்டர் ஆபிஸ்க்கு வந்து சேர்ந்தான்.
அனைவரும் பதற்றத்துடன் தீபக்கிற்க்காக காத்திருந்தனர்,
ஆனால் குறிப்பிட்ட நேரம் தாண்டியும் தீபக் வரவே இல்லை.
ஏதோ தப்பாக இருக்கிறது என்று கௌதமிற்கு தோன்றியது.
கீர்த்தனாவை தனியாக அழைத்து நான் போய் தீபக்க பார்த்து கையோடு கூட்டிட்டு வரேன் அது வரைக்கும் நீ ஜாஸ்மீன் கூடவே எந்தவொரு காரணத்துக்கும் ஆபிஸிக்கு வெளியே நீயும்,ஜாஸ்மீனும் வரவே கூடாது என்று சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பி சென்றான் கௌதம்.
தீபக் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்று அவன் இருந்த அறையை திறந்தான் கௌதம்.
அறைக்குள் அனைத்து பொருட்களும் உடைந்த நிலையில் கிடந்தது.
அறைக்குள் தீபக் இல்லை ஆனால் யாரையோ அடித்து தரையில் இழுத்து சென்றதுக்கு அடையாளமாக இரத்த கறைகள் தரையில் இருந்தன.
அந்த இரத்த கறையை பின் தொடர்ந்தே சென்றான் கௌதம்.
இறுதியில் அந்த இரத்த கறை அறையில் உள்ள ஜன்னல்க்கு பக்கத்தில் முடிந்தது.
வேகமாக ஓடிச்சென்று ஜன்னல்க்கு வெளியே எட்டிப்பார்த்தான் கௌதம்.
அங்கே பயங்கரமாக அடிப்பட்டு கை,கால் உடைந்து இரத்த வெள்ளத்தில் கால்வாசி உயிரோடு ஜன்னல்க்கு வெளியே தலைகீழாக கட்டி தொங்கவிட்டு சென்றிந்தார்கள் ஜாஸ்மீனின் அண்ணன்கள்.
இதை பார்த்ததும் பதறிக்கொண்டு ஹோட்டலில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்து ஆம்புலன்ஸ்யை வரவழைத்து தீபக்கை மருத்துவமனைக்கு அழைத்து சென்றான் கௌதம்.
அதே சமயம் கல்யாண நேரம் தாண்டி போகுது பையன் எப்போ தான் வருவாரு என்று ரிஜிஸ்டர் ஆபிஸில் அதிகாரி கத்த தொடங்கினார்.
அந்த ஆளுக்கு...