...

12 views

மெய் தேடல் தொடங்கியதே - 2

ஜார்டின் நாட்டின் அடர்ந்த காடுகளுக்கு மத்தியில், ஸ்டெஃபி மற்றும் ஸ்டேசி என்னும் இரட்டை சகோதரிகள் தங்கள் அரச குடும்பத்துடன் ஒரு அழகான கோட்டையில் வசித்து வந்தனர்.

லார்ட் ஹாக்சன வின்டர்ஸ் நிறைய காடுகளையும் மலைகளையும் அதினுடன் இயற்கை அழகுகளையும் மிகுதியாக கொண்ட நாட்டை ஆண்டு வந்தார்.

அவர்களின் நெருங்கிய உறவினர்கள் அருகிலுள்ள அழகிய சூழல் கொண்ட மிகுவல் நகரத்தில் வாழ்ந்து வந்தனர்.

தனது மக்களின் வாழ்க்கை தரத்தை நீட்டிக்க ராஜாவும் ராணியும் நீண்ட தூர வணிக பயணங்களை மேற்கொள்வது உண்டு.

அவர்கள் இல்லாத நேரத்தில், ஸ்டெஃபி மற்றும் ஸ்டேசி ஆகியோர் தங்கள் ஊழியர்களாலும் எஜமானர்களாலும் வளர்க்கப்பட்டு வந்தனர்.

மன்னர் நியமித்த அறிஞர்களால் படிக்கவும் எழுதவும் கற்றுக் கொடுண்டனர்.

பயணத்தில் பல்வேறு இடங்களிலிருந்து நிறைய பழம்பெரும்பொருட்களை சேகரிக்கும் பழக்கம் மன்னருக்கு இருந்தது. அவைகள் எல்லாம் முன்னோர்களின் வழக்கத்தில் விலைமதிப்பற்றவை என்று பாராட்டப்படதக்கது.

தன் குழந்தைகளுக்கு அவர்களின் பிறந்தநாளில் சில பழம்பொருட்களை பரிசாக வழங்கி வந்தார்.

இப்படியாக போய் கொண்டிருந்த சூழ்நிலையில் இரட்டை சகோதரிகள் காடுகளில் சுற்றுலா சென்று திரும்பும் பொழுது பல இன்னல்களை சந்தித்தனர்.......

இரண்டு கிலோமீட்டருக்கப்பால் இருந்த காட்டிலிருந்து திரும்பும் பொழுது...

இருள் சூழ்ந்த பகுதிகளில் ஸ்டெபி சிறிது பயத்துடன் சுற்றும் மற்றும் பார்த்தாள்.

எச்சரிக்கையாக இருக்க வானத்திலும் அவ்வப்போது ஒரு பார்வை செலுத்தினாள். திடிரென ஒரு நிழல் அவளுக்கு நேராக மேலே உலாவுவதைப் பார்த்து பேய், பேய் என்று கதறி ஸ்டேஸியையும் மேல் நோக்கி பார்க்க செய்தாள்.

அதைப் பார்த்து பயந்த ஸ்டேஸி பயத்தை மறைத்துக்கொண்டு அது வெறும் கழுகுதான் என்று கூறி அவளை சமாதானப்படுத்தினாள்.

ஒரு பருந்து அல்லது கழுகின் நிழல் மோசமான ஒன்றாக மாறும் என்பதை ஸ்டேபியாள் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

பயணகலைப்பில் இருந்த ஸ்டேபி சிற்சில நொடிகள் பாதாளத்தின் குளியில் மாட்டினது போல் உணர்ந்தாள்.

பாதாளத்தில் இருப்பது போல் உணரும் பொழுது எங்கு இருக்கிறோம் என்று அவளுக்கு தெரியவில்லை

அந்த இடத்தில் பேய் இருக்க வேண்டும் என்று மட்டும் நம்பினாள்.

அவளுடைய சகோதரி ஸ்டேஸியும் உண்மையில் அதை உணர்ந்திருந்தால், அவளும் இப்போது பயந்திருந்திருப்பாள் என்று நினைத்தாள்.

இவ்வாறு ஒவ்வொரு முறையும் அவள் அமானுஷ்யங்களை பார்க்கும்பொதெல்லாம் திடுக்கிட்டு நின்றுவிட்டு எல்லாரையும் உதவிக்கு அழைத்தாள்.

அவளுடன் வந்த காவளாளிகளும் அந்த உருவங்களை பார்த்தனர். ஆனால் அவைகள் வித்தியாசமாகத் தென்பட்டாலும் மிகவும் உயரத்தில் இருந்ததனால் அதைப் பற்றி பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.

ஸ்டேபியும் தான் அரண்டதனால் தான் எல்லாம் தனக்கு பேய் மாதிரி தெரிகிறது என்று தைரியப்படுத்திக்கொண்டாள்.

ஒருநாள் தான் சிறிய விஷயத்திற்கெல்லாம் திடுக்கிடுவதை நிறுத்துவிடுவாள் என்று தனக்குள் நம்பினாள்.

அவர்கள் வந்த பாதை அருகிலுள்ள கிராமத்தை நோக்கி மலைமேட்டிலிருந்து ஊருக்குள்ளே செல்வது எல்லோருக்கும் சற்று நிம்மதியாக இருந்தது.

வளைவு...