...

4 views

சிறுவன் கண்டறியும் யானையின் எடை-1
சமீபத்திய பாகுபலி திரைப்படம் காலக்கட்டம் போன்று, ஒரு ராஜாவின் அரசு சபை நடந்துக் கொண்டு இருக்கிறது, ராஜா விசித்திர னுக்கு ஒரு வித்தியாசமான யோசனை நெடு காலமாக இருந்து வந்தது அதாவது சந்தேகம் நமது யானை படைகளில் ஒரு யானை எவ்வளவு எடை இருக்கும் என்று சந்தேகம்,
ராஜா விசித்திரன் அரசு சபை நடந்தது கொண்டு இருக்கையில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று தீர்வுகள் அரசு சார்பில் மேற்கொள்ள படுகிறது..
சபை துவங்குவதற்கு முன்னரே அரசு சபையில் மந்திரிகளின் கீழ் பணியாற்றும் கணக்குயாளரின் சிவா கேசு அவரின் மகன் ஏழு வயது இருக்கும் நந்த பாலன் தன் தந்தை யிடம் நெடு நாட்களாக சபை விவாதங்கள் நேரடியாக காண வேண்டும் என்று வலியுறுத்தி தினமும் கேட்டு கொள்வான், ஆனால் இன்று தான் தந்தை சிவகேசு மகன் நந்த பாலன் யை அரசு அழைத்து வந்து சபையின் சுவர் ஓரமாக நின்று சபையின் நடவடிக்கைகளை கவணித்து வருகிறான், அமைதியாக இருக்குமாறு மகனிடம் சிவகேசு சொல்லி இருந்தார்...
அரசு சபை மேலும் தொடர்ந்து செல்லுகையில் ராஜா விசித்திரன் ஒரு அறிவிப்பு செய்கிறார், அஃதாவது ஒரு யானை யின் எடை எவ்வளவு என்று தெரிந்து கொள்ள வேண்டும் எப்படி எடை போடுவது என்று நூற்றுக்கணக்கான கூடி இருக்கும் சபை யில் தெரிவிக்கிறார், இதற்கு தகுந்த உபயம் சொல்லுங்கள் என்று மந்திரி களை பார்க்கிறார், மந்திரி கள், துணை மந்திரிகள் தனது பார்வை பூமி யை நோக்கி ஒருவரோடொருவர் குசகுசத்து கொள்ளுகிறார்கள், உடனே ராஜா விசித்திரன் யார் சொல்லுவார்கள் எதிர்பார்த்து ராஜா கேள்வி கேட்க சபையில் அமைதி நிலவுகிறது..
உடனே கணக்காளர் சிவகேசு மகன் நந்த பாலன் நான் யானையின் எடை யை சொல்லுகிறேன் என்று ஓங்கி குரல் கொடுக்கிறான். உடனே ராஜா விசித்திரன் சாபாஷ் என் சிங்கமே,என்று யார் இந்த சிறுவன் உடனே கணக்காளர் மன்னித்து விடுங்கள் மகா ராஜா என் மகன் தான் சின்ன வயசு தவறு செய்து விட்டான் மன்னித்து விடுங்கள் மகா ராஜா,
நன்றி மகனே, உனது ஆவல் அறிவு கூர்மை நான் வரவேற்கிறோம். நன்றி மகனே சபையின் அரியணை விட்டு இறங்கி வந்து சிறுவனின் தோளின் மீது கை வைத்து துணிச்சலான பையன், மகனே நீ உண்மை யாகத்தான் சொல்லுகிறாய் தவறு ஏதும் செய்ய மாட்டாய், உடனே சிவகேசு மகா ராஜா உணர்ச்சி வேகத்தில் பேசி விட்டான் சின்ன பையன் என்று சிவகேசு கண் கலங்கி கேஞ்சி கொள்ளுகிறார்,
ராஜா அறிவுடமை அனைவருக்கும் சொந்தம், சின்னவன் பெரியவன் என்று என்ன இருக்கிறது, நான் ஒரு நாள் அவகாசம் தருகிறேன், நன்றாக யோசித்து நாளை திடமான முடிவை சொல், என்று தவறு செய்து விடாதே மகனே என்று நாளை வாருங்கள் என்று கூறி விட்டு ராஜா புறப்படுகிறார்...
- தொடரும்

© G.V.KALASRIYANAND