...

5 views

சபிக்கப்பட்ட நகரம்
கிறஸ்து பிறப்பதற்கு பல வருடங்களுக்கு முன்னர் இவ்வுலக மக்கள் ஒருவருக்கொருவர் மிகவும் அன்பாகவும் ஒற்றுமையாகவும் வாழ்ந்து வந்தனர் .ஒருநாள் டோக்கேயூ எனப்படும் நகரத்திற்கு புதிதாக வயதான மூதாட்டி ஒருவர் வந்தார் .அவர் மிகவும் அழுக்கான ஆடையையும் மிகவும் மோசமான முகத்தோற்றத்தையும் கொண்டிருந்தார் .அங்கிருந்த மக்கள் மூடநம்பிக்கையில் அதிக ஈடுபாடு கொண்டிருந்ததால் அந்த மூதாட்டியை சூனியக்காரி என எண்ணி அவரை தங்கள் ஊரைவிட்டு வெளியேறும்படி அடித்து விரட்டினர்.மூதாட்டியோ மிகவும் கவலையாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தார் .திடிரென மழை வந்ததால் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த மலைக்குகையில் ஓய்வெடுக்க முடிவு செய்து குகைக்குள் சென்று கீழே கிடந்த கற்களை எடுத்து தீமூட்டி குச்சிகளை சேகரித்து தீப்பந்தம் உருவாக்கி ஓய்வெடுத்தவேளையில் எங்கிருந்தோ ஒரு அலரல் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தாள் .அந்த ஊரில் இருந்த சிறுமி ஓநாய்களால் கடிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதை பார்த்து தன்னிடமிருந்த தீப்பந்தத்தைகாட்டி ஓநாய்களை விரட்டிவிட்டு அந்த சிறுமியை தூக்கினாள் சிறுமி தன்னிடமிருந்த ரொட்டித்துண்டினை மூதாட்டியிடம் கொடுத்துவிட்டு இறந்துபோனாள் .மூதாட்டியோ தனக்கு உணவுகொடுக்கதான் இந்த சிறுமி வந்திருக்கிறாள் என்பதை அறிந்ததும் மிகவும் வருந்திக் கொண்டிருந்த வேளையில் அந்த ஊர்மக்கள் சிறுமியை தேடி வந்தனர் .மூதாட்டி சிறுமியை தூக்கி வைத்திருப்பதை பார்த்து இவள்தான் கொலை செய்திருக்க வேண்டும் என தவறாக புரிந்துகொண்டு மூதாட்டி சொல்ல வருவதை கேட்காமல் சிறுமியின் சவத்தை வாங்கிவிட்டு மூதாட்டியை அடித்து துண்புறுத்தி அந்த குகைக்குள் தள்ளி உயிருடன் தீயிட்டு எரித்தனர் .இதனால் மூதாட்டியின் சாபத்திற்கு ஆளாகிய அந்த நகரமே அழிந்து விட்டது எனக் கூறிய தாத்தா தன் பேரனிடம் கதை முடிந்தது எனக்கூறினார்.பேரனுக்கு அந்த கதையின் மீது மிகவும் ஆர்வம் வந்ததால் அந்த நகரம் எங்கே உள்ளது எனக்கேட்க தாத்தாவோ இங்கிருந்து பல மயில் தூரத்தில் இருக்கிறது எனக்கூறிவிட்டு தூங்கச் சென்றார் .இவ்வாரு பதினைந்து வருடங்கள் கழிந்தது பேரனும் வளர்ந்து விட்டான்.தாத்தாவும் இறந்து விட்டார் .தாத்தா இறந்த காரணத்தால் பேரன் தனியாகவே அந்த வீட்டில் வாழ்ந்து வந்தான் .(பேரன் இனி ராஜா என்ற பெயருடன் அழைக்கப்படுவார்)ராஜா தன் பள்ளி விடுமுறையை எவ்வாறு பயன்படுத்துவது என்று யோசனை செய்துகொண்டிருந்த வேளையில் தாத்தா கூறிய கதை ஞாபகம் வந்தது .ராஜா அங்கு செல்ல முடிவு செய்து தன் இரண்டு தோழர்களிடம் அந்த கதையைக் கூறிவிட்டு மூவரும் அந்த நகரத்திற்குச் செல்ல முடிவு செய்து வீட்டில் பொய்சொல்லிவிட்டு தங்களின் பயணத்தை தொடங்க முடிவு செய்தனர் .ஒருநாள் இரவு கிளம்பி பேருந்தில் ஏறிச் சென்றனர் .இருநாள் பயணத்திற்குப்பின் மூவரும் ஒரு இடத்தில் இறங்கி அங்கிருந்த மக்களிடம் அந்த நகரத்திற்குச் செல்லக் கூடிய பாதையைக் கேட்டறிந்து வரைபடத்தையும் பெற்றுக் கொண்டு தங்களின் நடைபயணத்தை தொடங்கினர் .மூன்று நாள் நடைபயணத்திற்குப் பின் ஒருவழியாக அந்த நகரத்தை அடைந்தார்கள்.அந்நகரம் பார்ப்பதற்கு மிகவும் மோசமான நிலையிலும் மக்கள் வசிப்பதற்கு தகுதியற்றதாகவும் சூரிய வெளிச்சம் இல்லாமல் இருள் சூழ்ந்து இருப்பதையும் பார்த்து மிகவும் பயந்து தங்கள் பயணத்தை முடித்துக்கொண்டு வீடு திரும்ப முடிவு செய்து அவரவர் வீட்டிற்கு திரும்பினர்..ஒருநாள் ராஜா தன் தாத்தாவின் அறையை சுத்தம் செய்யும் போது ஒரு பழங்கால புத்தகம் இருப்பதை பார்த்து அதனை எடுத்து படிக்க தொடங்கினான் .அந்த புத்தகத்தில் அந்த நகரத்தைப் பற்றிய பல தகவல்கள் இருந்தது.மேலும் அந்த குகை முழுவதும் பல பொக்கிஷங்கள் இருப்பதாகவும் அதனை எடுக்கச் சென்றால் மரணம் நிச்சயம் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது ..இதனை தன் நண்பர்களிடம் ராஜா கூறினான் இதனைக் கேட்ட ராஜாவின் நண்பர்கள் அந்த நகரத்திற்கு மீண்டும் செல்ல ராஜாவை அழைத்தார்கள் ராஜாவோ தான் வரவில்லை எனக் கூற ராஜாவின் நண்பர்கள் அவனை அடித்துவிட்டு அவனிடமிருந்த வரைபடத்தை எடுத்துக்கொண்டு மேலும் சிலரை அழைத்துக் கொண்டு அங்கு செல்ல முடிவு செய்து கிலம்பினார்கள் .ராஜா எவ்வளவோ முயற்சி செய்தும் அவர்களை தடுத்து நிருத்த முடியவில்லை.ராஜாவின் நண்பர்கள் அன்று இரவே பயணத்தை தொடங்கினர்.ராஜா அந்த புத்தகத்தின் கடைசி பக்கத்தைப் பார்க்கும் பொழுது அதில் தாத்தா எழுதிய கடிதம் இருந்தது அதைபடித்தவன் மிகவும் மனமுடைந்துபோனான். அந்த கடிதத்தில் .ராஜாவின் அப்பாவும் அம்மாவும் இந்த புதையலைத் தேடிச் சென்று இறந்ததாகவும் அவர்கள் விபத்தில் இறக்கவில்லையென்றும் மேலும் இந்த புத்தகத்தில் எழுதப்பட்டது போல எந்த புதையலும் இல்லையெனவும் அது சாத்தானால் எழுதப்பட்ட புத்தகம் எனவும் மனிதர்களின் ஆசையைத் தூண்டி அவர்களை அந்த நகரத்திற்கு அழைத்து ,தீயிட்டு எறிக்கப்பட்ட மூதாட்டியின் ஆத்மா அனைவரையும் பழிவாங்கி தனது ஆசையை நிறைவேற்றுகிறது எனவும் இந்த புத்தகத்தை தன்னிடம் அந்த சாத்தானே கொடுத்து மனிதர்களை அங்கு அனுப்பிவைக்க வேண்டும் எனவும் கூறி தன்னை உயிருடன் விட்டுவைத்ததாகவும் எழுதியிருந்தார் .அப்போதுதான் ராஜாவிற்கு நடந்த அனைத்தும் புரிந்து தன் தாத்தாவும் அந்த நகரத்தை சேர்ந்தவர் தான் என்பதையும் அறிந்து கொள்கிறான்....அந்த நகரத்திற்கு சென்ற ராஜாவின் நண்பர்களின் நிலமை உங்கள் கற்பனையில் விடப்படுகிறது.......
(இந்த கதையில் ஏதேனும் குறை இருப்பின் உங்களின் கருத்துக்களை பதிவு செய்க )