...

9 views

பற்றினேன் கரமென்றை
பிரிவுகளும், பிரியங்களும் என்றும் நம்மை தொடரும் தொடற் கதையே. விடியாத இப்புது விடியும் மற்றவர்களின் கண்கவியும் ஷனம்தோரும் நம்மை ஈர்க்கும் புவியிர்ப்பு விசையே!!

சுழலும் புகையும், வான் மேக நவரச ஊற்றுக்களும் பிரலாத மேக திட்டுகளும், திடலாய், திண்ணமாய், தீட்டாத ஓவியமாய் ஆழ்மனத்தின் வெளிப்பட்ட, வெளிப்படும் சிந்தனை கேர்வையாய்;சுவரெங்கும் சிக்குண்டு சிலந்தியின் நேச ரசமாய்;காதலாய், காதலனாய் யாவரும் விவரிக்க முடியாத செயலின் சிலரின் சாயலாய் நுட்ப வேலையிலும் சிதறாத சில்லு வண்டை தேடிப் பிடித்த கரமென்று;புத்தனாய் தெரிந்த முகம் நாளடைவில் பித்தனாய்;பிதற்றும் பிச்சைக்காரனாய், எத்தகைய அவன், அவன் என் அவன், அவளவன் ஆனதும் தோன்றிய நேசமும், பாசமும், பற்றும் யாவரும் வாங்காத தேநீராய் நாறிபோனது. இந்த ஆறிபோன காதல்;நாதியற்று வீதியில் நிற்கிறது விவாகரத்தை, அணைத்து தந்த பரிசுகளை எல்லாம் அனைத்தும் தந்துவிடு என்று கர்ஜிக்கிறது அவளின் போதனையில் கால அவகாசத்தை நீடித்து, நீட்டி முழங்கிறது
அவளவன் ஆனது கூட வலிக்கவில்லை விட்டு கொடுத்து போவோம் முரசு அடித்து சத்தியம் செய்தாய், இப்படி விட்டுட்டு போவாய் என்று கனா கூட காணவில்லை. எனது கடைசி கோரிக்கை நிராகரிப்பின் வலியை நீ உணர்ந்து இருக்கலாகாது. உன் புதிய அவள் உனக்கு அதை தந்து விட கூடாது என பிராத்துக்கொள். சந்திப்போம் அடுத்த வாய்தாவில் நீதி தேவதையின் முன் நீதியற்ற உன்னை...

#வரிகளுடன்_நான்