...

5 views

பொக்கிஷமான நட்பு-10
மறுநாள் காலையிலேயே பிரியாவும் அம்மாவும் மற்றும் திவ்யாவின் குடும்பமும் மருத்துவமனைக்கு சென்றார்கள். ஆனால் மருதத்துவர்கள் பரிசோதனை செய்வதால் அவர்களை சம்மதிக்க வில்லை. அவர்கள் அங்கேயே காத்திருந்தார்கள். ஒரு மணிநேரத்திற்கு பிறகு அவர்கள் உள்ளே சென்றார்கள். "கூட் மார்னிங் அப்பா இப்ப ஒடம்பு கொஞ்சம் ஓக்கே வா பா?" என்று கேள்வி விளம்பினாள் பிரியா. "ம்ம்ம் ஓக்கே தா என்ன டாக்டர் நா சொந்தமா நடக்க கொஞ்ச நாள் ஆகும் னு சொன்னாங்க மா" என்றார் பிரியாவின் அப்பா "ஆமா பா டாக்டர் எங்கிட்ட சொன்னாங்க பா. கவல படாதீங்க பா சீக்கிரம் நடந்துறலாம் பா" என்றாள் பிரியா. "என்னங்க எப்போ வீட்டு போலாம் னு டாக்டர் சொன்னாங்களா?" என்று கேட்டார் தன் மணைவி "இன்னும் ஒரு வாரம் ஆகும் னு சொன்னாங்க மா" உடனே திருமதி செல்வி "சரிங்க இல்ல வீடு னா உங்களுக்கு இன்னும் வசதியா இருக்கும் அதா" "அதுவும் சரிதா" என்றார் அப்பா. சில நேரம் கழித்து அவர்கள் வீட்டுக்கு கிளம்பினார்கள். இப்படியே தினமும் அவர்கள் போய் திரு மோகனை சந்திப்பார்கள். ஒரு வாரம் கழித்து மருத்துவர் வீட்டுக்கு செல்வதற்கு அனுமதி கொடுத்தார். திவ்யாவின் தந்தை மகிழுந்தில் அழைத்து வந்தார். எல்லாரும் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். 
மறுநாள் திவ்யாவும் அவளின் பெற்றோரும் மாலை நேரத்தில் 
பிரியாவின் வீட்டுக்கு வந்தனர். "அப்புரம் பிரதர் சாப்ட்டீங்களா?" கேட்டார் திவ்யாவின் தந்தை "சாப்டே பிரதர். நீங்க சாப்ட்டீங்களா பிரதர்? மா பிரியா போய் அங்களுக்கு சாப்ட எதாச்சும் எடுத்துட்டு வா மா" என்றார் "இல்ல பருவாள பிரதர் மா நீ உக்காரு நாங்க உங்கள பாக்க தா வந்தோம்" என்றார் "அட இதுல என்ன இருக்கு அண்ணா இருங்க நா போய் ஏதாச்சும் எடுத்துட்டு வரே" னு சொல்லி சமையலறைக்கு சென்றார் திருமதி செல்வி. "அக்கா இருங்க நானும் வரே" என்று சொல்லி பின் சென்றார் திவ்யாவின் அம்மா. அவர்கள் இருவரும் மதிய உணவை செய்து எல்லாருக்கும் பரிமாறினார்கள். உணவை சாப்பிட்டு கொண்டே அவர்கள் பேசி மகிழ்ந்தார்கள்.  அப்படி பேசிகொண்டு இருக்கும் போது பிரியாவின்  தந்தைக்கு இருதயம் பலவீனமாக இருப்பதால் முழுமையாக வீட்டிலேயே இருக்கும் படி அவர் மனைவி, மகள் மற்றும் திவ்யாவின் பெற்றோரும் பேச தொடங்கினார்கள். முதலில் திவ்யாவின் தந்தை ஆரம்பித்தார். "சரி பிரதர் அடுத்து என்ன முடிவு பண்ணி இருக்கீங்க?" என்று கேட்டார். அதற்கு அவர் "இன்னும் கொஞ்ச நாளுதா அப்புரம் வேலைக்கு போய்றுவே" என சொல்ல "இல்ல பா நீங்க இப்படியே வீட்டுலேயே சந்தோஷமா இருங்க பா" என்றாள் பிரியா " "ஆமாங்க பிரியா சொல்லுறதும் சரிதானா நீங்க வீட்டிலேயே இருங்க நாங்க எல்லாம் இருக்கோ" என்றார் அவரின் மனைவி. "அட இத்தன வருஷமா வேல செஞ்சி தீடீர்னு வீட்டுல இருந்த எனக்கு பைத்தியமே பிடிச்சுரோ" என்றார் திரு மோகன் "இல்ல ஃப்பிரதர் நீங்க வீட்டுலியே இருந்து வாரே ஏதாவது வேல செய்ய நா ஏற்பாடு பன்றே ஃப்பிரதர்." என்றார் திரு மதன் "சரி எல்லாரு சொல்லுறீங்க உங்க விருப்பம் படி நடக்கட்டும்" என்று பதிலளித்தார் திரு. மோகன். அவர் வீட்டிலிருந்து கிடைக்கும் சம்பளமும், காப்பீடு மற்றும் சில உதவி தொகை கிடைத்தும் அவருடைய மருந்து மற்றும் சில சத்துள்ள உணவு வகைகளை வாங்குவதற்கும், சில கடன்களை கட்டுவதற்கே சரியாக இருந்தது. அவளின் அம்மா எடுக்கும் வருமானம் வீட்டு வரவு செலவுக்கே சரியாக இருந்தது. இதன் காரணமாக பிரியா வேலை செய்து கொண்டே படித்தாள். காலையில் கல்லூரிக்கு சென்று மாலையில் வேலைக்கு செல்வாள். அவளுக்கு வேலையிலும் படிப்பிலும் இருக்கிற பிஸியில் திவ்யாவிடம் பேசுவது குறைந்தது. திவ்யாவும் அவளுடைய கஷ்டத்தை புரிந்துக் கொண்டு அவளால் முடிந்த உதவியை செய்தாள். பிரியாவும் கிடைக்கும் வேலைகளை செய்து பணத்தை படிப்புக்கும் உணவுக்கும் பார்த்துக் கொள்வாள். கல்லூரி விடுமுறை நாட்களிலும் பிரியா வேலை செய்து அடுத்த செமஸ்டருக்கு பணத்தை சேமித்து வைத்துக்கொள்வாள். மீதி பணத்தை குடும்பத்துக்கு கொடுத்து உதவி செய்வாள். ஒரு செமஸ்டருக்கு அவளுக்கு 3 முதல் 4 ஆயிரம் வரை செலவாகும். இவள் இவ்வளவு கஷ்டத்திலும் படிப்பில் கவனம் செலுத்த தவறியதுயில்லை. பிரியா இப்படி இருப்பதால் அவள் கல்லூரி நண்பர்களிடம் நேர செலுத்த குறைந்தது, இதனால் அவர்கள் அவளை ஒதுக்கி வைத்தார்கள் ஆனால் அவள் எதையும் பொருட்படுத்தாமல் அவள் கல்வியில் கவனம் செலுத்தினாள். ஒரு வருடத்திற்கு பிறகு அவள் தந்தையும்  சுலபமாக நடக்க தொடங்கினார். 

தொடரும்....

#Writcostory
#frienship
#family

© Dana Hephzibah