...

10 views

அன்பே தெய்வம் (சிறு கதை)
அன்பே தெய்வம்.
கூடல்நகரின் மையப்பகுதியில் வாழ்ந்தான் ராம்குமார் . கல்லூரியில் இறுதி ஆண்டு இரசாயனப் பிரிவில் படித்து வந்தான்.

படிப்பின்லே மிகவும் புத்திசாலி. அனைத்து தேர்வுகளையும் மிகவும் சிறப்புடன் எழுதி அதிக மதிப்பெண்கள் எடுப்பது அவன் நோக்கம்.

ராம் தந்தை அசோக் , தாய் கெளசல்யா இவரும் மிகுந்த தெய்வ நம்பிக்கை அதிகம் நிறைந்தவர்கள். காலை எழுந்ததும் பக்தி பாடல்கள் ஒலிக்கும்.

தாய் கௌசல்யா ஆசாரமாக குத்து விளக்கு ஏற்றி தெய்வ வழிபாடு செய்வார். அசோக் தினமும் அதிகாலை குளித்து விட்டு அருகில் இருக்கும் விளக்கு தூண் சிவன் கோவில் சென்று வழிபாடு செய்த சாப்பிடுவது வழக்கம்.

தாய் தந்தையரின் தெய்வ நம்பிக்கை ராம்குமார்கும் இருந்தது. ராம் குமார் கூறியதை திறம்பட பின்பற்றினான். தினமும் கல்லூரி செல்லும் முன் விநாயகர் அகவல் மற்றும் கந்த சஷ்டி கவசம் படிப்பது மனதிலே மிகுந்த தெய்வ நம்பிக்கை வளர்த்தது.


ராம்குமாரும் கோவில்களில் நடக்கும் உழவாரப் பணியில் மாதம்தோறும் கலந்துகொண்டு ஆலயங்கள் சென்று சுத்தம் செய்வதும் அன்னதானம் படைப்பதும் ஆர்வம் காட்டி வந்தான்.


ராம்குமார் தனது தாய் தந்தையர் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் வைத்திருந்தான்.


ரசாயன பிரிவில் அதிகம் மதிப்பெண்கள் பெற்று இளங்கலை பட்டம் பெற்றான்.
கல்வியின் மேல் இருந்த ஆர்வம் ராம்குமார் இரசாயன பிரிவில் முதுகலை பட்டம் படிக்க ஆர்வம் தந்தது .

அரசினர் கல்லூரியிலேயே எளிதாக இடமும் கிடைத்தது . புதிய .நட்புகளும் தோழமைகளும் கிடைத்தன.
புதியதாக சேர்ந்த மாணவி எலிசபத் மேரி.
ராம்குமார் அனைவருடன் மிகவும் இனிமையாகவும் அன்பாகவும் பழகினான்..


எலிசபெத் மேரியின் நட்பு மிகவும் பிடித்திருந்தது.
பாடத்திட்டங்கள் சிரமமாக இருந்தாலும் தனது தனித் திறமையால் படித்து தேர்வுகளை சிறப்பாக எழுதினான்.
ராம்குமார் படிக்கும் கல்லூரியில் முதுகலையில் இருபாலரும் சேர்ந்து படித்து வந்தனர் . கல்லூரியின் நிர்வாகம் அதிக ஒழுக்கம் காரணமாக மாணவ மாணவிகள் இடையே நட்புகளையும் பரஸ்பர பரிமாற்றங்களை தவிர்க்க விரும்பினர்.

படிப்பு...