...

12 views

பொக்கிஷமான நட்பு -5
திவ்யா மலேசியாவின் தலைநகரமாகிய கோலாலம்பூரில் உள்ள (manipal university college)-யிலும் பிரியா மலாக்காவில் உள்ள (international college of Yayasan Melaka)- விலும் தங்கி அவர்களுடைய புது வாழ்க்கை பயணத்தை தொடர்ந்தார்கள். இவர்கள் வாழ்க்கையில் முதன்முறையாக இப்படி வெவ்வேறு இடங்களில் படிக்கிறார்கள் அதனால் இருவருக்கும் ரொம்ப ஏக்கமாக இருந்தது. பிரியா மாலை நேரத்தில் அவள் தங்கியிருக்கும் அறையின் வழியாக நின்று இயற்க்கையை இரசித்துக் கொண்டிருந்தாள்.

அதே வழியில் இரண்டு தோழிகள் சிரித்து மகிழ்ந்து நடந்து கொண்டிருந்தார்கள். அதை பார்த்த அவள் உள்ளே சென்று தன் தோழிக்கு தொடர்பு கொண்டாள்.
இவர்கள் தினமும் நேரில் சந்திக்க முடியாமல் இருந்தாலும் இவர்களுடைய நட்பு இப்படி தொலைப்பேசியின் உதவியுடன் நந்தவனமாய் மலர்ந்துக்கொண்டே தான் இருந்தது. தினமும் இவர்கள் காலையில் கல்லூரிக்கு போகும் வரைக்கும் இரவு தூங்கும் வரை தொலைபேசியில் அழைத்து அல்லது இணையத்தளங்களில் பேசிக்கொண்டு இருப்பார்கள்.
கல்லூரி விடுமுறை நாட்களில் சந்தித்து பல நினைவுகளை சேகரித்து கொள்வார்கள். இப்படி சந்தோஷமாக இருந்த அவர்களுடைய வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக ஒரு துயரமான சம்பவம் நடந்தது!

பிரியா வழக்கம் போல் காலையில் உட்சாற்கமாக கல்லூரிக்கு கிளம்பி கொண்டிருந்தாள், அவள் தொலைபேசியிருந்து ஒரு அழைப்பு வந்தது. அவள் தொலைபேசியை எட்டிப் பார்த்து "அய்... அம்மா" என்று சொல்லி, எடுத்து பேசினாள். " ஹாலோ அம்மா கூட் மார்னிங் செல்லம். என்ன அம்மா பண்றீங்க?" "காலை உணவு சாப்டீங்களா?" அப்பா என்ன எங்க வேலைக்கு போய்ட்டாறா?" எனக் கேள்வியாய் வினவினாள்....

தொடரும்...

அந்த துயரமான சம்பவம் என்னவாக இருக்கும்???🤔🤔🤔

பிரியாவின் அம்மா எதற்கு
காலையில் அவளை தொடர்பு கொண்டார்?

உங்கள்கருத்ததுக்களை தெரிவிக்கவும்.


#writcostory
#friendship
#family
© Dana Hephzibah