...

6 views

பொக்கிஷமான நட்பு-7
நன்றாக இருந்த அப்பா இன்று வார்ட்டில் இருக்கிறதை பார்த்து திடுக்கிட்டு மனதளவில் வருந்தினாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் தழும்பியது. கிட்ட போய் "அப்பா பிரியா வந்துருக்கே அப்பா என்ன பாருங்க அப்பா உங்களுக்கு ஒன்னும் ஆகாது பா பிளிஸ் கண்ண தொரந்து பாருங்க அப்பா..  அம்மா அப்பாவ கண்ண தோரக்க சொல்லுங்க அம்மா" என்று அழுதுக் கொண்டே அவள் தகப்பனை எழுப்பினாள். அவள் தாய் "அம்மாடி அப்பாவுக்கு டாக்டர் மயக்க ஊசி போட்டு இருக்காங்க. எல்லாம் உனக்காக தான் வெயிட் பண்ணும் மா போ டாக்டர பாரு மா." என்று சொன்னார். உடனே பிரியா மருத்துவரை சந்தித்து தன் தந்தையின் நலனை விசாரித்தாள். மருத்துவர் "நா சொல்லுரத நீங்க தைரியமா கேட்கனு" என்று சொன்னதும் "ஆ சரி கேட்குற டாக்டர்" என்று சொன்னாள் பிரியா. அதற்கு மருத்துவர் "லாரி அடிச்சதுல உங்க அப்பாவுக்கு காலும் இடுப்பும் ஒடைஞ்சிரிச்சி ஆனா ஓப்ரேஷன் பண்ண கொரைஞ்சது ஒரு வருஷம் ரெஸ்ட் எடுக்கனும்ம்ம்" என்று சொல்லி மறுபடியும் ஏதோ சொல்ல நினைத்தார். பிரியா "ம்ம்ம் சரி டாக்டர், வேற ஏதாச்சு சொல்ல இருக்கீங்களா டாக்டர்" என்று கேட்க மருத்துவரும் 
" ஆமா அது வந்து...." என்றார். பிரியா "பருவாள டாக்டர் எதுவா இருந்தாலும் சொல்லுங்க டாக்டர்" என்று சொல்ல "உங்க அப்பா லாரி அடிச்சதுல ரொம்ப அதிர்ச்சியா ஆய்ட்டாரு அதனால அவரு மன ரீதியாக ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்காரு அப்புரம்...." "அப்புரம் என்ன டாக்டார்" என்று அழுதுக் கொண்டே கேட்டாள். "அப்புரம் அப்பா வேலைக்கே போவாம இருந்த இன்னும் நல்லது ஏனா அவரு ஆர்ட் வீக்கா இருக்கு" என்று சொன்னவுடன் பிரியா கதறி அழுதாள். "எங்க அப்பாவ எப்படியாச்சும் காப்பாத்துங்க டாக்டார் ஃப்பிளிஸ் டாக்டர்" என்று அழுதுக்கொண்டே கேட்டாள். மருத்துவர் "அழுவாதிங்க மா, நா சொன்ன மாதிரி அப்பா ஒரு வருஷம் நல்ல ரெஸ்ட் பண்ணாருனா குணமாக நல்ல சான்ஸ் இருக்கு நோர்மல சிலபேரு உயிரோட இருக்க மாட்டாங்க ஆனா உங்க அப்பா இன்னும் உயிரோட இருக்காரு. ஒரு டாக்டரா நா ரொம்ப சந்தோஷப் படுறே" என்று மருத்துவர் சொன்னதும் "சரி டாக்டர் அப்பாவ நல்ல பார்த்துக்குறது என்னோட பொறுப்பு டாக்டர்" என்று சொன்னாள் "வாவ் வெரி கூட், அப்புரம் உங்க அம்மா கிட்ட நீங்க தான் எடுத்து சொல்லனோ. பாவ அவுங்க ரொம்ப பயந்துட்டாங்க அதனால தா நாங்க அப்பாக்கு மயக்க ஊசி போட்டு உங்களுக்கு வெயிட் பண்ணோ" பிரியாவும் அதற்கு "சரி டாக்டர் ரொம்ப தேங்க்ஸ்" என்று சொன்னாள். மருத்துவரை சந்தித்து பிரியா வந்தவுடன் வெளியே அவள் தோழி திவ்யாவும் அவள் பெற்றோரும் இருந்தார்கள். "அம்மாடி டாக்டர் என்ன மா சொன்னாரு? அப்பாவா எப்ப வீட்டுக்கு அனுப்புவாங்களா?" என்று கேட்டார் திருமதி செல்வி. அதற்கு பிரியா "அம்மா அது வந்து...."

தொடரும்....

பிரியா தன் அம்மாவை எவ்வாறு ஆறுதல் கூறுவாள்?
உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

#Writco story
#frienship
#family
© Dana Hephzibah