...

4 views

ஒரு காலோடு( உண்மை கதை)

மாநகரத்தின் அருகாமையில் உள்ள நகராட்சி அளவிற்கு வளர்ச்சி அடைந்த நகருக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரே குடியேறிய ஒரு குடும்பம், தந்தை தலைமுறை மறைந்து மகன்கள் வாழும் நிலையில் ஒருவர் தான் ஆதி மூர்த்தி..
ஆதி மூர்த்தி கட்டிட கட்டுமான பணிகளில் ஈடுபட்டு தன் குடும்பத்தை ஓரளவு போதிய வசதிகள் உடன் வாழ்க்கை நடத்தி மகள்களுக்கு இருவருக்கும் திருமணம் செய்து முடித்து வைத்தார், காலம் கடந்து சில ஆண்டுகளில் மனைவி எதிர்பாராத விதமாக இறந்து விட்டார், பின்னர் சிறிது காலம் மீளாத துன்பம் தன்னுடன் இருக்க மிதிவண்டியில் சாலையில் சென்றுகொண்டிருந்த பொழுது மிக வேகமாக வந்த லாரி ஆதி மூர்த்தி மீது மோதி விபத்துக்குள்ளானது,
ஆதி மூர்த்தியின் துரதிஷ்டம் ஒரு கால் இழுக்க நேரிட்டது, சில மாதங்களுக்கு தனது பெண்களின் வீட்டில் இருந்து உடல்நலம் தேற்றி கொண்டார், ஆதி மூர்த்தி க்கும் மகள்களிடம் இருக்க மணம் இடம் அளிக்க வில்லை, ஆதலால் தன்னுடைய இருப்பிடத்திற்கு திரும்பினார்.
வந்த பிறகு சில தினங்களில் உட்கார்ந்து ஓட்டும் ஒரு மூன்று சக்கரம் சைக்கிள் (ட்ரை சைக்கிள்) வாங்கி கொண்டு அமர்ந்து கொண்டு இரு கைகளால் சைக்கிளை ஓட்டி ஊர் ஊராக, வீதி வீதியாக சுற்றி வியாபாரம் செய்து கொண்டார். அந்த வியாபாரம் பழைய இரும்பு, பேப்பர், கண்ணாடி பாட்டில்கள், பிளாடிக்ஸ் களை பழைமையான பழுது யான பொருட்களை வாங்கி கொண்டு பதிலாக வெங்காயம் பறிமாற்றம் செய்யும் வியாபாரம் செய்து தின தோறும் மாலை நேரத்தில் பஜார் வீதியில் மொத்த கடையில் போட்டு, பணமாக மாற்றி கொள்வார், இவ்வாறாக அவரது வாழ்க்கை பயணம் தொடர்ந்து கொண்டுயிருந்தது......

குறிப்பு:-
பார்வை யாளனாக நான் பொறுத்தவரை அவரே முதன்மை யானரவர், நான் எல்லாம் இறுதி யானவனன், ஏனெனில் ஒரு கால் இல்லை யென மனவருத்தம் இல்லாமல், ஒரு கால் இல்லாமல் தனது சொந்த காலில் நின்று வாழ்க்கை நடத்துகிறார், பிச்சை எடுக்காமல், தனது பிள்ளை மீது நம்மி இருக்காமல், அவரை பஜார் தெருக்களில் நான் பலமுறை பார்த்து யிருக்கிறார், அழுக்கு யடைந்த சட்டையை அணிந்து இருந்தாலும் எனக்கு பெருமிதமாக இருந்தது, தற்போது அவர் அவ்வளவு யாக தென்படுவதில்லை, ஏதோ ஒன்று நடந்து இருக்கலாம்.

அவருக்கு மறைமுகமாக எனது சார்பிலும், எனது நாட்டின் சார்பிலும் நன்றிகள், வாழ்த்துக்கள்
© G.V.KALASRIYANAND