...

8 views

யார் அவர்கள்...1
அந்த நள்ளிரவின் பின் ஜாமம்,
கடிகார பெண்டுல சப்தம் காதினுள் ஊடுறுவி கலைத்து போட்டது தூக்கத்தை,
தண்ணீர் குடிக்க எழுந்து குடித்து விட்டு மீண்டும் தூங்க நினைக்கையில்
தூக்கம் ஏனோ வரவில்லை?
திடீரென கதவு தட்டும் சப்தம் கேட்டு ஒரு சிந்தனை,
இந்நேரம் யாராக இருக்கும்?
எழுந்து சென்று கதவை திறந்தால் வெளியே ஒரு குடும்பம்
கணவன்,மனைவி, மகள் என பார்க்கவும் மதிக்கும் அளவு தோற்றம்!
என்னவென்று விசாரித்தால்
அவர்கள் வந்த பேருந்து இடம் மாறி இறக்கி விட்டதாகவும் இன்று ஒரு இரவு தங்கிக்கொள்ள இடம் தேடி இறுதியில் இங்கு வந்ததாகவும் கூறி முடிக்க,
உள்ளே வாருங்கள் என அழைத்து உபசரித்து தனி அறையில் தங்க வைத்து நானும் தூங்க சென்றேன்,
விடியற்காலை சூரியன் சுள்ளென முகக்தில் மோதி உசுப்பி விட்டது,
பால் வாங்க கடைக்கு சென்று தேநீர் தயாரித்து அவர்களுக்கு கொடுக்க அறைக்குள் சென்றால் யாரையும் காணவில்லை, பதறிப்போய் பணம் நகை, பொருள் அத்தனையும் சரிபார்த்து எதும் குறையவில்லை என தெரிந்த பின்னே அவர்களை பற்றிய சிந்தனை தீவிரமாக ஓடியது,
அவ்வேளை தொலைகாட்சியில் செய்தியாக நேற்றைய முன்னிரவில் பேருந்து கவிழ்ந்து 40 பேர் படுகாயம், ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி என நான் தேடி கொண்டு இருந்தவர்களின் புகைப்படம் என் கண் முன்னே ஓடிக்கொண்டிருந்தது!
யார் அவர்கள் என்ற கேள்விக்கு விடை கிடைத்தது,
எப்படி? ஏன் இங்கு வரவேண்டும்?

-(தொடரும்)

- சிவ ப்ரகாஷ்

#யார்அவர்கள் #சிவப்ரகாஷ்
© சிவ ப்ரகாஷ்