...

3 views

ராட்சசனின் ரட்சகி =4
ஜானகி...,ஜானகி என்று கூப்பிட்டப்படியே உள்ளே சத்தம் கேட்க...,இங்கு "சோபாவை சுத்தம் பன்னி தட்டி போட்டுகொண்டிருந்தவள் என்னம்மா....? அப்படியே!வேலை போட்டு விட்டு உள்ளே ஓடினாள்.."
'பாப்பு' நீ இது எல்லாம் "உப்பு இருக்கா என்று சரி பாரு அப்புறம் என்ன செய்யலாம் என சொல்லு வேர்த்தப்படியே!நின்றவரின் கோலம் கண்டவள்..." அம்மா இதுபோதும் இதற்குமேல் ஒன்றும் வேண்டாம் "நீங்கள் போய் ரெடி ஆகிட்டு.., உங்க சின்னபொண்ணு, பெட்டை விட்டே எழும்பல,அவளுக்கு நீங்க 'டோஸ் விட்டால் தான் எழுந்திருப்பாம்மா! என்று கூறிவிட்டு 'பதார்த்தங்களை பார்த்துக்கொண்டு இருந்தாள்' சரிடா.., நான் போய் பேசிக்கொள்கிறேன் என்று போய்விட்டார்" இவளும் அனைத்தையும் சரி பார்த்துவிட்டு 'கிச்சன் சுத்தம் செய்து விட்டு' வெளியே சென்றவள் பாதியில் விட்ட வேலையை தொடங்கி.., அதை முடித்து விட்டு"
வீட்டை decorate பண்ண ஆரம்பித்து இறுதியாக முடியும் தருவாயில்..அவளின் "போன் ஒலி எழுப்ப முழுதாய் டிசைன் ஒர்க் முடித்துவிட்டு" ஆங்... யாரு..!? நம்பரை பார்த்தவள் ஆகாஷ் ஆஹ்..! என்ன? இந்த நேரத்தில் என்று அவனுக்கு..., "கால் பண்ண முதல் ரிங் போய் அடுத்த.., ரிங்கில் எடுத்தவன் "காதலியின் தமக்கையே..!? என்று பாட்டாய் பாடும்.., இவன் சும்மா இருக்கமாட்டான் போலவே என அட "ஆகாஷவாணி தூய தமிழ் புலம்புவது ஏன்.!? அவளும் அவனின் பாணியில் பேச....,
அதுவந்து டிரம்ப்... மேடம்.., அதான் வந்துட்டியே சொல்லு... எனவும் ஹிம்ம் நேற்றிலிருந்து பேசவே இல்லை உங்க தங்கை அதான் நிலைமை எப்படி இருக்கு என்ன சொன்னிங்களா என வினவ
நீ நேற்று பேசலையா...!? என்று முன் இரவில் அவள் பேசியது யாருடன்அப்போது என்று தங்கையை விட்டுக்கொடுக்க.., மனமின்றி"
அதுவா அசதியா இருந்துச்சுன்னு சொல்லிக்கிட்டு இருந்தாள் ஒருவேளை தூங்கிருப்பா நேற்று உங்க அப்பா
அம்மாட்ட பேசியாச்சா!?
ஜானகி கேட்டுவைத்தாள்
ஹிம்ம் ஆனால்.... என்ற இழுவையில்....,
என்னடா..! ஆனால் என்ன இன்றைக்கு வருகிறோம் என்.., "அருமைகாதலியை பொண்ணு பார்க்க சிரிப்பினுடே குதூகலம் பொங்க கூறினான்.." அதானா.. 'அப்பா'
"விருந்தினர் வரப்போறாங்க எல்லாம் தயார் பண்ணுங்க என்றார்கள் காலையில் சொல்லிவிட்டு போனது யோசனை ஓட.., அங்கு நிலவரம் என்ன.... என்றப்படி கேட்டுவைத்தான். " "ஒற்றுக்கொள்ளவில்லை" என மொட்டையாக உங்க அப்பா பேசியதால் வாருங்கள் என்று "சும்மா வார்த்தைக்கு சொல்லிவிட்டார் சிரியாமல் வெடியை பற்ற வைக்க ஜா...ன...கி என்று ஒவ்வொரு எழுதாய் அழுத்தி சொல்ல... ஹா...ஹா... சும்மா சொன்னேன் நேற்றே அப்பாவிடம் பேசிவிட்டு தான் படுக்கவே போனோம் கூற...",
மொவளே.., "டின்னு.. கைலா மாட்டுவாய் அப்புறம் இருக்கு இந்த ஆகாஷ் யாருனு... தெரியும்.
ஓஹோ அப்படியாங்க ஆபிசர்... என்று சிரித்துக்கொண்டே கட் செய்தவள். சரியாக வீட்டின் அனைத்தும் வேலைகளை முடித்துவிட்டு குளிக்க சென்றாள்." அப்போது பாத்ரூம் லேர்ந்து வெளியே வந்த அனு குளிச்சிட்டு "வெட்க சிரிப்போடு வருவதை பார்த்தவள்.., ஓஹோ.., மேடம் இப்பவே கனவு காண ஆரம்பித்து விட்டாங்களே! இந்த 'காதல் ஜோடிகளே இப்படித்தான்' என்று உள்ளே நுழைந்தாள்..., "மளமளவென்று பாத்ரூம் வந்தப்போது அனு அழகிய சித்திர பாவையாக தெரிந்தாள்.., மெல்ல நடக்க அவளின் பேச்சாள் தடை பட்டு நின்றவள் உறுத்து விழித்தாள் 'ஆயன்' வர,வர உனக்கு கொழுப்பு அதிகம் என்று கிளு கிளு வென சிரித்ததும்...,
உண்மையை சொல்லணும் என்றால் நீ அவ்வளவு அழகு தெரியுமா போயும், போயும் அந்த முரடனை கட்டிக்க போகிறாய் என்று சிம்பதி கிரியட் பண்ண..., அவளின் "மொபைலில் வெளிப்பட்ட வாய்ஸ் கேட்டதும் இவன் யாரு..? இவன்கூட பேசுற!! ஆகாஷ் பற்றி இவனுக்கு எப்படி தெரியும்..!! அடுத்து என்னதான் சொல்ல வரான் என்று பார்ப்போம் அவளிடம் செல்லாமல் பின்னோடு நிற்க."
ஹேய்.., "ஆயன் அப்படி சொல்லாத ஆகாஷ் எனக்காக என்ன வேணாலும்செய்வான் தெரியுமா..! ஹிக்கும் அன்றைக்கு அறிமுகம் செய்தப்போது பார்த்தேன் ளா என்னமோ அவரோட பொருளை புடுங்கி கொள்ளும் நபர் போலே ட்ரீட் பண்ணார்.., என்று சிரிக்க அதுவா அவனுக்கு என் மேல் ரொம்ப பாசம் அதான் நீ க்ளோசா ஆஹ் பேசியதால் கோவபட்டு நின்றான் என கூற சரி சரி யாரோ விருந்தினர் வராங்க என்று கூறினீங்களே போங்க ஏஞ்சல் என்று உரிமையோடு கூறினான்.. " ஆயன் பாருடா பொறுப்பா பேசுற ... பின்னே இருக்காதா என்று இருவரின் பேச்சுகள் சாதாரணமாக இருந்தது. இருந்தாலும்.., ஏதோ.. 'ஓர் நெருடல் ஜானகி மனதில் பட்டது' உடனே ...அனு.., ஆகாஷ் வீட்டில் இருந்து வரங்கலாம் சீக்கிரம் ரெடி ஆகு... என்று கூறிக்கொண்டே.., மொபைல் வாங்கிவிட ஆயன் என்ன அதற்குள் உன்னை பொண்ணு கேட்க வந்துட்டார்களா! என்ன?ஏஞ்சல் ஏன்? இதை சொல்லவே இல்லை என்று குறைபடுவது போல் அதில் ஓர் ஆதங்கம், ஏக்கம் ஒளிந்துள்ளதை ஜானகி நொடியில் கண்டுகொண்டாள்."
ஆமாம்..," பிரதர் இப்போ வரும் நேரம் தான் சரி அப்புறம் பேசுவா என் தங்கை என்று பட்டென்று ஆப் பண்ண, அக்கா என்ன பன்றா அனுவிற்கு முறைப்பை பதிலாக தந்துவிட்டு ஏன் டி நேற்று யாரிடம் பேசுனா அவளோ முழிக்க...,
அப்போ ஆகாஷிடம் பேசல... அப்படித்தானே என்று அவளை குற்றவாளியை கேட்பது போல் கேட்டதும் அக்கா.... ராகம் பாடினால் அதே நேரம் வாசலில் கார் வரும் சத்தம் கேட்க ஹச்சொச்சோ...வந்துட்டாங்க.சீக்கிரம் ரெடி ஆகணும் வா... என்று அவளின் "பாலின் நிறத்திற்கு ஏற்றார் போல் பான்சி சாரியை கட்டிவிட்டு தலை சாதரணமாக பின்னி விட்டு பூவை தலையில் வைத்து விட்டாள்.."
இங்கு "கூடத்தில் ராமையா ,ராஜாத்தி, ஆகாஷ் என்று மூவரும் வணக்கம் வைத்துவிட்டு உள்ளே வந்தனர். ராஜன் ரேணுகா தம்பதி வரவேற்று அமர வைத்து விட்டு.
ரேணுகா.., அனுவை காபி யை எடுத்து வரச்சொல் என்றதும்..., வேண்டாம் என்று ராமையா .., மறுத்து விட்டு நாமே எடுத்து கொள்வோம் ராஜாத்தி நீ போய் அனைவருக்கும் கொண்டுவா என்றதும் நானும் வரேன் அக்கா என்று அவர்கள் அடுப்படியை நோக்கி செல்ல பிறகு.., நீ..,என்னப்பா அப்பா பிஸ்னஸ் தானா இல்லை வேறு வேலை ராஜன் கேட்க.., இல்ல மாமா "காவல் துறை எக்ஸாம் தான் இந்த மாதம் எண்ட்ல வருகிறது.. கூறி நிறுத்த.அப்போ உங்களின் பரம்பரை தொழில் விட்டு கொடுக்காமல் அதையும் பார்த்துக்கொள்கிறீர் இந்த காலத்திலும் இப்படிப்பட்ட பிள்ளை என்று ஆகாஷை பெருமையாக பேச..,
ராஜன் அவனின் கனவு தான் முதலில் முக்கியம் பிறகுதான் இந்த தொழில் அவனுக்கு என்று அவனின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு கூற ..., அவனோ தன் தந்தையின் கனவு நான் காவல் துறை தேர்ச்சி பெற்றே ஆகவேண்டும் என்ற உத்வேகம் அதிகரிக்க கண்டிப்பா ஐயா... என்றான்ஆகாஷ். இதை பார்த்த ராஜனின் மனம் நெகிழ்ச்சி யோடு அப்பாவின் நம்பிக்கை யை காப்பாற்றும் பிள்ளை என்பது அவனின் கண்களின் ஒளியில் தெரிந்தது..
அப்போ அனுவை கடைசி வரை நல்லபடியாக காப்பாற்றும் பொறுப்பான பையனை தான் சூஸ் பண்ணிட்டா.., ஆனால்..! என் "பெரிய பொண்ணுக்கு இப்படி ஒரு பையன் கிடைச்சிட்டா என் கடமை முடிந்தது என்று எண்ணிக்கொண்டு அதை வாய்விட்டும் கூறினார்.அப்போது சரியாக சுவரில் இருந்த பல்லி சத்தமிட்டது எல்லாம் கடவுள் துணை இருப்பார்" உங்க பெரிய பெண்ணுக்கும் நல்லவரன்ஆஹ் அமைஞ்சிடும் என்றும் ராமையா கூறினார் இவ்வாறு மூவரும் ஆண்கள் பேசிக்கொள்ள.., அதற்குள் ரேணுகா ஸ்வீட்டையும், காரத்தையும்எடுத்துக்கொண்டு வர ராஜாத்தி அனைவருக்கும் டீ போட்டுகொண்டு வந்தார்
தொடரும் 🌼🙏
அநபாயன் 🤍
© Ash(ஈசன் )