...

6 views

பதினாறும் பறந்து வரும்
ஒரு /
பள்ளிக்கூடம் பக்கமாய்,
கோடை மழைக்கு,
ஒதுங்கியது,
உப்பும், சர்க்கரையும்..:

அவ்வப்போது , யாராவது கைதவறி கொட்டிவிடுவர்,
அப்போது , இரண்டும் நெருக்கமாகும்,
அதில், ஒரு சந்தோஷம்.

அதற்கும்,ஈயோ, எறும்போ, மாப்போ" வைத்துவிடும் ஆப்பு...

இப்படியே,
போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில் வரப்பிரசாதமாய்,
சில, விழாக்கள் வரும்,

அப்போது, சுடச்சுட சந்திப்பு இலையில்,

அவனுக்கு கேசரியோ, பாயசமோ, எதுவோ ஒரு பெயர்,

இவனுக்கு, எப்போதும் ஒரே பெயர்தான்...
உப்பு.
உப்பு"க்கு நிறைய சொந்தங்காரர்கள்...
எல்லாரும் காரசாரமானவர்கள்...
கறை" வேட்டைக்காரர்கள்.

என்ன இருந்து என்ன? தேவைப்படாவிட்டால் போகும் இடம் குப்பைதான்...
நாய் கூட நக்காது...தப்பி நக்கிவிட்டு படுமே ஒரு பாடு அதைப் பார்க்கும்போது ஒரு சந்தோஷம் வரத்தான் செய்கிறது...


இரண்டுக்கும், வேற்றுமைப் பல இருந்தாலும், தனித்தனியே சொர்கம் காட்டும்
ஒரு நண்பி உண்டு.

அதன் பேர் நன்னீர்:

மழை நின்றபாடில்லை...
நசநசக்கும் மழையில், முணுமுணுக்கும் குரலில்,
ஜன்னல் வழியே தெரிந்த , ஆசிரியர் அழிக்காது விட்ட /கரும்பலகை வாசகங்களைப் வாசிக்கத் தொடங்கின...

அவன்:
கோடைமழை விவசாயிக்கு அமிழ்தம்...
கரைமீறிய மழை யாவற்கும் நஞ்சு...

இவன் :
சுத்தமான சேருமிடம் " தானே, நன்று..

அவன்:
"கூடா ஒழுக்கம் கூடவே கூடாது "...

இவன்:
அளவுக்கு மீறினால் அமிழ்தமும் நஞ்சு...

அவன்: கற்கை நன்றே..

இவன் : புல்லுக்கும் ஆங்கே...


இருவர்கள் தொணதொணப்புக் கரை வேட்டி காதில் விழவே,

ரெண்டையும்,
பள்ளிக் கூட ரொனைப் பற்றிக்கொண்டது...,
பள்ளி அடுக்களில் அடுக்கிவிடு என்று உத்தரவிட, உத்தரவு கேட்டு ... "சலசலப்பை எடுத்துக் கூறி /மாண்புமிகு முதல்வருக்கு மனு கோரினான் .

உப்பும்,
சர்க்கரையும்,
""படித்தாவது "" சொர்கம் சேரட்டுமே!!

































© s lucas