...

16 views

காதல் (LOVE)

© நாவல்
[#காதல் part 13

எவன் வந்தாளும் நாங்க பார்த்துக்கிறோம் நீ முதலில் வெளியே போடா என்று கௌதமை பார்த்து கூறினார்கள் ஜாஸ்மீனின் அண்ணன்கள்.

ஜாஸ்மீனின் அம்மா,அண்ணிகள் மற்றும் வீட்டில் உள்ள பெண்கள் அனைவரும் சேர்ந்து அவர்கள் வீட்டில் உள்ள ஆண்களிடம் நிலைமையை எடுத்து சொல்லி புரிய வைக்க முயற்சி செய்தார்கள்.

ஏற்கெனவே மதத்தை பற்றி பேசி அடுத்தவர்கள் என்ன சொல்வார்களோ என்று வெட்டி கௌரவத்தால் நம்ம வீட்டு பொண்ண இன்னைக்கு இழந்துட்டோம், எங்க வீட்டு ஆம்பளைங்க நீங்க எல்லோரும் பெரிய வீரனுங்க தான் இப்ப நம்மல கொல்ல வரது எத்தனை பேரா இருந்தாலும் நீங்களே சமாளிச்சுருவிங்க எங்களுக்கு தெரியும்.
ஆனால் அதனால என்ன பயன் இருக்க நீங்க தான் அவங்க வீட்டு பையனை சாகும்படி அடிச்சுட்டு வந்திங்க, அந்த கோபத்தில் தன்னுடைய பையனுக்கு இப்படி ஆயிருச்சுனு அந்த பையனோட அப்பா நம்மல கொல்ல ஆள் அனுப்பிருக்காரு.
நம்ம பொண்ண அவங்க யாரும் கொல்ல அவ விதி முடிஞ்சது அதனால்தான் பஸ் மோதி ஜாஸ்மீன் இறந்து போனாள் இது ஒரு விபத்து அவ்வளவு தான்.
அதனால எதுக்குமே பயன் படாத இந்த வெட்டி கௌரவத்தை விட்டுட்டு நாங்க முக்கியம் உங்க பிள்ளைகள் எதிர்காலம் முக்கியம் என்று நினைத்தால் கௌதம் சொன்னபடி நம்ம எல்லோரும் இந்த ஊரை விட்டு போயிருவோம் என்று ஜாஸ்மீன் வீட்டு பொம்பளைங்க அனைவரும் அவங்க வீட்டு ஆண்களுக்கு எடுத்து கூறினார்கள்.

சரி நாங்க ஊரை விட்டு போக தயாரா இருக்கோம் எங்க குடும்பத்துக்காக தான் இந்த முடிவு எடுத்தோம்
இப்போ நாங்க என்ன செய்யனும் என்று ஜாஸ்மீனின் அண்ணன்கள் கௌதமிடம் கேட்டனர்.

சரி உங்களுக்கு தேவையான துணிகள் அப்புறம் ஓட்டு ஐடி எல்லாம் எடுத்துட்டு சீக்கிரமா எல்லோரும் வீட்டுக்கு பின்புறம் வாங்க என்று சொல்லி விட்டு
வீட்டிற்கு முன்புறம் சென்று கதவை சாத்தி பூட்டு போட்டான் கௌதம்.

வீட்டிற்குள் அனைவரும் தயாராக கிளம்பி நிற்க
அனைவரையும் வீட்டின் பின்புறமாக கூட்டிட்டு வந்து சினிமாவில் பயன்படுத்தப்படும் ஒரு போலீஸ் வேனில் அனைவரையும் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து கிளம்பி சென்றான் கௌதம்.

இவர்கள் கிளம்பி தெருவில் இருந்து வெளியே வர அதே சமயம் மொத்த கூலிபடையை சேர்ந்த ரவுடிகளும் அந்த தெருவின் உள்ளே நுழைந்தார்கள்.

5 நிமிட இடைவெளியில் கூலிபடையிடம் சிக்காமல் அனைவரையும் போலீஸ் வேனில் பாதுகாப்பாக வெளியே கூட்டிட்டு வந்தான் கௌதம்.

ரோட்டின் வழியாகவோ,இரயில் வழியாகவோ சென்றால் கண்டிப்பாக இவர்களை பிடித்து விடுவார்கள் என்று மொத்த குடும்பமும் கப்பலில் அந்தமான் செல்வதற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் தீபக் முன்பே அவனுடைய நண்பர்கள் மூலம் செய்து விட்டான்.

கௌதம் அனைவரையும் அழைத்துக்கொண்டு துறைமுகத்திற்கு வந்து தீபக் நண்பர்களுடன் சேர்ந்து மொத்த குடும்பத்தையும் பாதுகாப்பாக கப்பலில் ஏற்றி விட்டான்.

தீபக் ஜாஸ்மீன்க்கு செய்து குடுத்த சத்தியத்தை தன்னுடைய உயிரை பனையம் வைத்து கௌதம் செய்து முடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பி தீபக்கை பார்க்க மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தான்.

ஜாஸ்மீன் இறந்ததை நினைத்து இப்போது தான் கௌதம்,தீபக் இருவரும் மனம் அழுதனர்.

சிறிது நேரம் கழித்து கீர்த்தனா எப்படி இருக்கிறாள் ஏன் என்னை பார்க்க அவள் வரவில்லை என்று தீபக் கேட்டான்.

கண் கலங்கியபடி கீர்த்தனா வீட்டில் நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தான் கௌதம்.

உன்னுடைய காதல் மதத்தால் பிரிந்தது
என்னுடைய காதல் பணத்தால் பிரிந்தது
என்று...