...

5 views

தல அஜித் அவர்களுடன் ஒரு நாள்
தல அஜித் அவர்களுடன் ஒரு நாள்


                தல அஜித் அவர்கள் எங்கள் ஊரில் படப்பிடிப்புக்கு வந்திருந்த நேரம் அவரது வாகனம் பழுதாகிவிட, அவர் பேருந்தில் பயணம் செய்ய நேரிட்டது.
நான் சொல்வது பதினைந்து வருடங்களுக்கு முன்னர் நடந்த சுவாரசியமான  சம்பவம்.                         

                   அந்த கதையை சொல்கிறேன். அது செல்போனும் செல்பியும் இல்லாத காலம்.  தல அவர்களுடன் படம் எடுக்க கூட முடியவில்லை.  ஆதலால் நீங்கள் இந்த கதையை நம்புவது கடினம் தான்.       

                   எனது பள்ளி பருவத்திலேயே ராணி காமிக்ஸ், ராணி, ஆனந்தவிகடன், குமுதம் போன்ற இதழ்களை படிக்கும் பழக்கம் இருந்தது.  வழக்கமாக "கதிரவன்" நாளிதழை தினமும் படித்ததுண்டு.  எனது பள்ளிக்கூட பையில் ஏதாவது ஒரு தமிழ் இதழ் இருக்கும்.  அதுவும் தீபாவளி மலர் மிகுந்த மகிழ்ச்சியை தரும்.         

           தினமும் பேருந்தில் இருபது கிலோமீட்டர் பயணம் செய்து நாகர்கோவிலில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் படித்தேன்.  பேருந்தில் எப்போதும் கடைசி இருக்கையில் இருப்பது எனது வழக்கம்.  அப்போது தான் யாருடைய தொந்தரவும் இல்லாமல் ராணி காமிக்ஸ் படிக்க முடியும்.                      

                    பள்ளிக்கூடம் முடிந்து  சாயங்காலம் வீட்டுக்கு செல்லும் அன்றைய பேருந்து பயணம் இன்ப அதிர்ச்சியை தரும் என நான் நினைக்கவில்லை.   ஒரு பேருந்து நிறுத்தத்தில் பயங்கர கூட்டம்.   பார்த்தால் சினிமா படப்பிடிப்பு.   எனது பேருந்தில் தல அஜித், சூர்யா மற்றும் அவரது தந்தை சிவகுமார் ஆகியோரும் ஏறி எனது முன் இருக்கையில் அமர்ந்து கொண்டனர்.

              ஆனந்தத்தின் எல்லைக்கே சென்றுவிட்டேன்.   தல அஜித் சாரும் சூர்யா சாரும் ஏதோ படப்பிடிப்பு சம்பந்தமாக பேசிக்கொண்டிருந்தனர்.  அவர்களிடம் ஆட்டோகிராப் வாங்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும் அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என விட்டு விட்டேன்.             

                   பிறகு  நான் புத்தகம் படிக்க தொடங்கினேன்.   சிவகுமார் சார் மட்டும் நான் புத்தகம் படிப்பதை கவனித்துவிட்டார்.  அன்று நான் படித்து கொண்டிருந்தது ஆனந்த விகடன் இதழில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை பற்றிய  செய்தி.                 

                     சிவகுமார் சார்  என்னிடம், "புத்தகம் படிப்பதில் ஆர்வம் உண்டா"?  என கேட்டார்.   ஆம் என்றேன் நான்.   "பெரிய ஆளாக வா" என வாழ்த்தினார்.   ஒரு நிமிடம் கண்களை மூடி அவரிடம் ஆசி வாங்கி மகிழ்ச்சியடைந்தேன்.         


         கண்களை திறந்து பார்த்தால் மணி ஏழு.  இனியும்  தூங்கினால் இரவில் தூக்கம் வராது"
என்று சொல்லி   அந்த கனவின் நினைவோடு எழும்பிவிட்டேன்.

பகல் கனவு பலிக்குமோ?

- அப்துல் ஹலீம்
© Dr. Abdul Halim