...

0 views

எடுப்பதை விட கொடுப்பதே சிறந்தது
அந்த முதியோர் காப்பகத்திற்கு
ஓரு மணியார்டர் வந்தது.

அதில்
இத்துடன்
ரூபாய் ஆயிரம் அனுப்பியுள்ளேன்...

நானும்
என்னுடைய மனைவியும் இதிலுள்ள முகவரியில் இருக்கிறோம்.

நாங்கள்
ஒரு சிறிய இட்லி கடையை நடத்தி வருகிறோம் .

இருவரும்
அறுபது வயதைக் கடந்தவர்கள் .

ஒரு வேளை
நான் இறந்து விட்டால்...

என்னுடைய மனைவியைப் பார்த்துக்
கொள்ள என்று ஒருவருமே இல்லை.

எனவே
எனக்குப் பின் அவளை உங்கள் இல்லத்தில் பராமரிக்க வேண்டும்.

அதற்காக
என்று இந்தப் பணத்தை அனுப்புகிறேன்.

மாதா
மாதம் ரூபாய் 2000 அனுப்பி விடுகிறேன்,
பாதித் தொகையை உங்கள் காப்பதற்கான செலவுக்காக எடுத்துக்
கொள்ளுங்கள்,

மீதி பாதியை
என் மனைவி பெயரில் வரவு வைத்துக் கொள்ளுங்கள்.

என்றாவது ஒரு நாள் நான் அனுப்பும்
தொகை வராவிட்டால்...

அப்போது
தயவு செய்து இதில் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ள முகவரிக்கு வந்து என் மனைவியை அழைத்துச் செல்லுங்கள்.

இப்படிக்கு
மீனாள் ராமசாமி.

என்றும் எழுதி இருந்தது.

சென்னையில் உள்ள முதியோர் காப்பகத்தில் அறுபது வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் ஐம்பது பேர்கள் வரை இருக்கின்றனர்.

தொடர்ந்து
ரொம்ப நாட்களாகவே
மாதா மாதம்
இந்த தொகை காப்பகத்திற்கு வந்து கொண்டே இருந்தது.

யார் இந்த
மீனாள் ராமசாமி ?
சற்றே வித்தியாசமாக இருக்கிறதே
என்று அறிந்து கொள்ள,
காப்பக மேனேஜருக்கு, ஆவலோ அதிகரித்து வந்தது.

ஒரு நாள் நேரில் சென்று பார்த்து விட்டு வரவேண்டும்' என்று நினைத்தார்.

ஆனால்,
வேலைப் பளு காரணமாக
முடியவில்லை.

அன்று
ஞாயிற்றுக்
கிழமை...

'இன்று, கண்டிப்பாகப் பார்த்து விட்டு வரவேண்டும்' என்று முடிவு செய்து கொண்டார்.

அவருடைய
இரு சக்கர வாகனத்தில் அங்கு செல்வதற்கு இரண்டு மணி வரை நேரம் ஆனது.

சின்ன
கட்டிடம்...

வெளியில்
தகரப்
பலகையில் கூரை வேயப்
பட்டிருந்தது.

பெரிய கேஸ் அடுப்பு மற்றும் இட்லி பானை எல்லாம் இருந்தது.

எழுபது வயது இருக்கும் ஒரு முதியவர், நாற்காலியில்...