...

5 views

யார் புத்திசாலி?
வெளிநாட்டில் ஓர் கார் விபத்து

அடிபட்ட நபருக்கு ஒரு பவுண்டு எடை அளவுக்கு
சதை பிய்ந்து விட்டது எனவும்
அதே எடை அளவுக்கு
காரை ஓட்டி வந்த டிரைவரின் உடம்பில் இருந்து சதையை எடுக்க வேண்டும் என்றும் வழக்கு தொடுக்கப்பட்டது

நீதிபதி முன் வாதம் தொடங்கினார்கள் இரு தரப்பு
வழக்கறிஞர்களும்..

அடி பட்டவரின் வக்கீல் தன் கோரிக்கையில் உறுதியாக இருந்தார்

அதாவது...
டிரைவரின் உடம்பில் இருந்து சதையை எடுக்க வேண்டும் என்பதில் ...

நீதிபதி....டிரைவரின் வக்கீலிடம் ...
"உங்கள் வாதம் என்ன ?
எதிர்ப்பு இருந்தால் தெரிவிக்கலாம்" என்றார்

டிரைவரின் வக்கீலோ...
யாரும் எதிர்பாராத விதமாக தன் முடிவைச் சொன்னார்...

" பாதிக்கப்பட்ட நபரின் கோரிக்கையை நான் முழுமையாக ஏற்கிறேன்...
என் தரப்பு டிரைவரின் உடம்பில் இருந்து.. அவர்கள் கோரிக்கை வைத்த படி ஒரு பவுண்டு சதையை எடுத்துக் கொள்ள நான் முழு மனதோடு சம்மதிக்கிறேன் "

"வேறு எதுவும் வாதிக்க நான் விரும்பவில்லை"
என்ற படி தன் தரப்பு வாதத்தை நிறைவு செய்தார்

அந்த வாதத்தைத் தொடர்ந்து
அந்த டிரைவரின் உடம்பில் இருந்து ஒரு பவுண்டு
சதையை எடுக்க உத்தரவு பிறப்பித்து வழக்கை முடித்து வைத்தார் நீதிபதி

குறித்த நாளும் வந்தது
இரு தரப்பு வக்கீல்கள் முன்னிலையில்
மருத்துவர் ஒரு பவுண்டு சதை எடுக்க ஆயத்தமானார்

உடம்பில் கத்தி வைக்கப் போன அந்த நொடியில்...

"டாக்டர்... ஒரு நிமிஷம்" என்றார்... டிரைவரின் வக்கீல்

"என்ன"? என்றார் வியப்பு கலந்த கோபத்துடன்...

வக்கீல் பேச ஆரம்பித்தார்

"டாக்டர்... என் கட்சிக்காரர் உடம்பில் இருந்து ஒரு பவுண்டு சதையை எடுக்க வேண்டும் என்பது தான் வழக்கு... தீர்ப்பும் அப்படித்தான் வந்துள்ளது...
ஆகவே... நீங்கள் தாராளமாக ஒரு பவுண்டு சதையை எடுத்துக் கொள்ளலாம்...

ஆனால்...

அப்படி எடுக்கும் போது
என் கட்சிக்காரர் உடம்பில் இருந்து ஒரு சொட்டு இரத்தம் கூட வெளியே வரக் கூடாது

ஏனெனில்...

வழக்கிலோ
தீர்ப்பிலோ
இரத்தம் குறித்து எந்த பாய்ண்ட்டும் இல்லை...
மீறி இரத்தம் வரும் படி நீங்கள் நடந்து கொண்டால்
உங்கள் மேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவேன் " என்றார்..

டிரைவர் தப்பித்தார்...

'உலகப்புகழ்பெற்ற வழக்குகள் '
நூலில் இருந்து..

© வேல்முருகன் கவிதைகள்