...

8 views

🤍இதயத்தின் ஓசை கேளாயோ 🤍
காதல், கலாட்டா நிறைந்த கதை தங்களின்
இதயத்தின் ஓசையை தட்டி எழுப்பிடும் நாயகனின் நாயகி யார்..? என்று அறியுமுன் வெவ்வேறு பாதையில் பயணிக்கும் இருவரின் உள்ளமும்
விதியின் கட்டளை படி.மீண்டும் இணைந்தார்களா...!?இல்லையா..!? அவற்றை காண்போம் 🌼🙏🤍

🤍விழிகளில் விழுந்தவள் கண் சிமிட்டி பார்க்கும்முன் மாயமாய் மறைந்துவிட்டாள்
அவளே முதல் சுவாசம் என்னுள் 🤍

🌼அத்தியாயம் ஒன்று🌼
அழகிய அதிகாலை பொழுது பூமியில் பொன்னொளி வீச செய்கிறாள்.., "பறவைகளின் க்கீச், க்கீச் சங்கீதமும் இனிய காலை வேளையில்...,சத்தம் வந்த திசையில் காதுகொடுத்தப்படியே..!நடந்தாள்.."
அந்த இதமான நாளிகையை கலைக்கும் விதமாய் அவள் முன் "பெயர் தெரியாத பல பூக்கள் ஒன்றாய் முடித்து பொக்கே போல் நீட்டிய கைகள்.., i... love... you.. என்று ஒவ்வொரு வார்த்தைகள் 'வருடும் குரலில்' உச்சரிக்க அதுவரை பூக்களை பார்த்தவள் அந்த மூன்று வார்த்தைகள் வெளியிட்டவனை கண்டதும்..,
பேச்சற்று போய்..., நின்றாள். யார் என்று
விழிகளுக்கு கேள்வியாய்..?தென்பட்டவன்"
கண்கள் சுருங்க மென்னகை புரிந்தவனை ...,
பார்த்துக்கொண்டே..!இருந்தவள் அவனோ "ஏய்.... குரங்கு... என் home work note நீதானே இப்படி பண்ணியது என்று அதட்டியவன் கண்களுக்கு" இப்போது... இந்த "முகரையே எங்கோ பார்த்தது போல் உள்ளதே.., அந்த பொக்கே(bouquet)கொடுத்தவனா...! பேசறது. என்று மறுபடியும் பார்க்க இப்போது 'தலையில் நங்கென்று கொட்டியது போன்ற வலியில் ஆ... என்று எழுந்து அமர்ந்தவள் எதிரே அவளின் தம்பி நந்தன் குரங்கு, குரங்கு ஏண்டி... என் நோட்டை கிழிச்சா...! என்று கத்தினான்...., அப்போதுதான் 'கனவில் இருந்து மீண்டவள்' "நீயா...!? "நீதானடா நல்ல கனவை spoil பண்ணியது" என்று கையில் அகப்பட்டதை எடுத்துக்கொண்டு பெட்டில் இருந்து குதித்தவள்.
அவனை துரத்த.., அவனோ அம்மா இங்க பாரு உன் பொண்ணு 'தூக்க கலகத்தில்...' என்னை அடிக்கவரா என்று ஓடிவிட.. பின்னோடு சென்றவள் அவனோ தங்கள் "அன்னையின்" பின்னே ஒழிந்து கொண்டு போக்கு காட்டியவன் "ரகுநந்தா.." வந்திடு இல்லை மிச்சம் ஒழுங்கா உள்ள நோட்டையும் கிழிச்சு விடுவேன் என்று விடாமல் அவளும் துரத்த அவனோ போடி..., " சிம்பன்சி" என்று 'பழிப்பு காட்ட....' இரு துருவங்களுக்கு மத்தியில் நின்ற அன்னை (சீதா ) கோவம் ஏற..., 'எருமை மாடுகளா....'
"இன்னும் சின்ன குழந்தை போன்று மல்லுகட்டாதடி சிற்பிகா....." என்று அதட்டியவர் , அம்மா அவன் தான் என்னை "தலையில் கொட்டினான்" அவனை அடிக்காமல் என்னையே திட்டற பாரு அவனை அடிக்காமல் விடமாட்டேன்..., மீண்டும் சண்டையை துவங்க... அட "அசடே என்று சிற்பிகாவின் காதை திருக அம்மா விடு, விடு என்று வலிப்பது போல் நடித்தாள்..." சிற்பி மணி என்ன..?தெரியுமா 7.30 தாண்டியாச்சு 'கல்லூரிக்கு' போறியா..!?இல்லையா..? என்னாது...!! மணி 8 ஆக போவுதா..! ஆஹ் என்று விரிந்த கண்களை பார்த்து இன்னும் சிறுபிள்ளை போலவே.. இருக்கிறாள். என்று எண்ணும்போது "சீதா" பிடியில் இருந்து விடுபட்டு ஓட்டமாய் ஓடியவளை கண்டதும் "டீ யை குடிச்சிட்டு போ சிற்பி மா " என்றவரின் பதிலுக்கு.., அவளின் மகனே பதில் தந்தான் அம்மா அக்கா இன்னும் "பல்லே விளக்கல" ஏன்டா காலை வேளையில் சமையல் வேலை அதிகம் என்றால்..? பற்றாதற்கு நீங்கள் பன்ற ரோதனை, வேறு உங்களுக்கு மத்திசம் பண்றதே..! எனக்கு பெரிய 'பொழப்பாபோச்சு' போ நீயும் ஸ்கூல் ரெடி ஆகு.., என்று விரட்டினார் சீதா.
சரியாக 8.30 மணிஅளவில் "அம்மா எனக்கு சாப்பாடு வேண்டாம்.., நான் 'ஆராதனா' கூட சாப்பிட்டு கொள்கிறேன்..., என்று கிளிப்பில் அடங்காத முடியை அடக்கி விட்டு" ஒரு கையில் வாட்ச்சையும், மறுகையில் பேக்குடன் கிளம்பி... "நிறத்திற்கு ஏற்றது போல் 'இளமஞ்சள்' சுடிதார் அணிந்து" தன் "ஸ்கூட்டியில்" விரைந்தாள்.
வணக்கம் 🌼🙏
தொடரும் 💐
அநபாயன் 🤍

© Ash(ஈசன் )