...

4 views

15) Adventures of the four friends.
.

" யாரு அவங்க . எதுக்காக அவங்களோட கண்ண நோன்டி எடுக்கனும் . " வினு .

" சொல்றேன் ‌. " என்றவர் கூற ஆரம்பித்தார் .

.

.

நான்கு வருடங்களுக்கு முன் :

*******  காலேஜ் :

அந்த college இல் இவர்களை தெரியாதவர்கள் இருக்கவே மாட்டார்கள் . சத்தியா , கீர்த்தனா , சந்தோஷ் , ஜீவா , நால்வரும் இனைபிரியா நண்பர்கள் . இந்த நால்வரும் செய்யும் அலப்பறைகள் ஏராளம் . அனைவரையும் கலாய்ப்பதே இவர்களின் அதி முக்கியமான வேலை . ஆனாலும் அவர்கள் மனம் புன்படாமல் கலாய்ப்பார்கள் . மற்றவர்களும் அதை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு தனது வேலையை பார்க்க சென்று விடுவார்கள் .

சத்தியா :

நால்வரிலும் அமைதியான ஒரு பெண் . மென்மையானவள் , அனைவரையும் நம்பி விடுவாள் . இவள் மற்றவர்களை போல் இல்லை . மற்றவர்களை விட வித்தியாசமானவள் . உயரம் கொஞ்சம் குறைவு தான் , நிறமும் மாநிறம் தான் . ஆனாலும் அழகி .

கீர்த்தனா :

கொஞ்சம் விளையாட்டு பிள்ளை . வாயாடி என்று கூறலாம் . வாயை வைத்து கொண்டு அமைதியாக இவளால் இருக்க முடியாது . எவரையாவது வம்பிழுத்துக் கொண்டே இருப்பாள் . உயரம் கொஞ்சம் அதிகம் , உயரத்திற்கு ஏற்றாற் போல் உடல்வாகு . ஆனால் பார்ப்பதற்கு கொஞ்சம் குண்டாக...