...

17 views

என் காதலி-6
அவளை எழுப்ப முயல்கிறேன் அவள் கண்களை திறந்து பார்த்தாள்
சிறிது நேரம் கழித்து
நான் அவளிடம்
உன்னோடு பேசிய ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சி கொண்டே சுற்றினேன்
மறப்பதற்கு ஏதுமில்லை உன்னை நினைக்கும் போது வானில் பறக்கிறேன்
உன்னோடு வாழ துடிக்கிறேன் இன்று தினமும்
என்று
உன்னை திருமணம் செய்ய ஆசைப்படுகிறேன் என்று அவளிடம் கூறினேன்
அவளோ நான் கூறியதை எதையும் காதில் வாங்காமல் எதையோ பார்த்து கொண்டு இருக்கிறாள்

அவளை தொட முயல்கிறேன் ஆனால் தொடமுடியவில்லை என்னால் அப்போது தான் கவனித்தேன் அவளை தொடும் சக்தி என்னிடம் இல்லை என்று
எனக்கு என்ன ஆனது என்று குழப்பத்தில் மீண்டும்
மருத்துவமனைக்கு போகிறேன்
அங்கே என் அப்பா அம்மா கதறி அழுந்து கொண்டு இருக்கிறார்கள் எதுக்கு இப்படி அழுகிறார்கள் என்று
பார்த்தால் ஸ்டெச்சர்ல ஒரு உடல் வருகிறது
நான் ஒதுங்கி யார் என்று பார்க்கிறேன்
எனக்கு பேர்ரதிர்ச்சி
அது நான் தான்
சுக்குநுராய் உடைந்து கதறி அழுகிறேன் என் நிலை எண்ணி
டாக்டர் சொல்கிறார் அவரின் உறுப்புகள் தேவைப்படுபவர்க்கு கொடுக்க சொன்னீர்கள்
கொடுத்து விட்டோம் என்று
என் தாயின் கண்ணீரால் கதறி அழுதது அப்படியே மயங்கி விழுந்தார்
தாங்கி பிடிக்க கூடம் முடியாமல்
அழுகிறேன் விழிகளில் நீருமில்லை

எனது உடல் வீட்டிற்கு எடுத்து செல்கிறார்கள் அனைத்து பார்மாலிட்டி முடிந்து
உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் என் உடலுக்கு அஞ்சலி செலுத்தி
அனைத்தும் முடிந்து
இடுகாட்டில் என் உடல் தகனம் ஆனது
நான் தனிமையில் அழுதேன்
ஒரு வெண்ணிற உருவம் என்னிடம் வந்தது என் கவலைகள் மறந்து என்னுடன் வா என்றது
உன்னால் வாழும் உயிர்களை பார் என்றது
என் இதயம் என்னவளுக்கு பொருத்தி கொண்டு இருந்தார்கள்
கண்கள் சிறுமிகள் இருவருக்கும்
இப்படி சில உறுப்புகள் பலரும் உதவிகரமாய் உள்ளாய்
நீ இறக்கவில்லை அவர்கள் உடலில் வாழ்ந்து வருகிறாய்
என்றார்

தொடரும்......