...

4 views

பொக்கிஷமான நட்பு -6
அம்மா அழுதுக் கொண்டே "அம்மாடி உங்க அப்பா அடிப்பட்டுட்டாரு
ஹோச்பிட்டல்ல ரொம்ப சீரியஸ்ஸா இருக்காரு மா..." என்று சொன்னார். அதற்கு பிரியா அதிர்ச்சியில் அப்படியே அவள் கீழே உட்கார்ந்தாள் "அய்யோ அம்மா எப்படி அம்மா? என்று அழுதுக் கொண்டே கேட்டாள். "வேலைக்கு போகும் போது ஒரு லாரி டிரைவர் அடிச்சி போட்டு ஓடிட்டாரு மா... " என்று அழுதுக் கொண்டே சொன்னார். "அம்மா பிரியா நீ சீக்கிர கெழம்பி வா அம்மா இங்க டாக்டர் லாம் என்னனுமோ சொல்லுறாங்க மா எனக்கு ஒன்னும்மே புரியல..." என்று திருமதி செல்வி சொல்ல "சரி மா நா இப்போவே கெழம்பி வரேன் மா." அவள் அம்மாவிடம் பேசி வைத்த பின் பரபரப்பாக கிளம்பி கொண்டே பிரியா தன் தோழிக்கு தொடர்பு கொண்டாள். திவ்யா அவள் அழைப்புக்கு பதில் கொடுத்த பின் அழுதுக்கொண்டே "திவ்யா...." என்றாள் பிரியா. அவளுடைய அழுகை குரலை கேட்ட திவ்யா "பிரியா ஏன் டீ ஏன்றாச்சு? ஏதாச்சும் பிரச்சனையா? என்று வினவினாள். அதற்கு பிரியா "அ.. அப் அப்.... அப்பா...." என்று தேம்பி கொண்டே இருந்தாள். "அப்பாவுக்கு என்ன ஆச்சு பிரியா? சரி சரி முதல அழுகைய நிறுத்து, கொஞ்சம் நிதானா சொல்லு செல்லோ. அப்பாவுக்கு என்ன ஆச்சு?" அப்பா அடிப்பட்டுட்டாரு திவ்யா ரொம்ப ப.. பயமா இருக்கு டீ. என எனக்கு என்ன பண்றதுனே தெரியல டீ, அம்மா க்கோள் பண்ணி சொண்ணாங்க தோ நானும் இப்போ கிளம்பிக்கிட்டு இருக்கேன்" உடனே திவ்யாவும் "சரி டீ நா அப்பா அம்மா கிட்ட சொல்லி வர சொல்லுற டீ. நானும் வரேன் டீ." என்று சொன்னாள். அதற்கு பிரியா "உன் கோலெஸ்?" என்று கேட்டாள். "பருவாள டீ நா லெக்ச்சரர் கிட்ட சொல்லிடுரே டீ." என்று சொன்னாள். "சரி டீ... ரொம்ப நன்றி டீ பாத்து வா சரியா? " "ம்ம்ம் சரி நீயும் முக்கியமா ரொம்ப அழுவாத டீ சரியா? அம்மாக்கு ஆறுதலா இருக்க வேண்டிய நீயே இப்படி அழுத அவங்க இன்னும் வேதன படுவாங்க டீ.." என்று திவ்யா சொன்னதும். "இல்ல அப்பாவ நினைச்சா தா ரொம்ப பயமா இருக்கு" என்று அழுதுக்கொண்டே சொன்னாள் "அப்பாவுக்கு ஒன்னும் ஆகாது சரியா நீ நல்ல ப்ரே பண்ணு நாங்களும் பண்ரும் சரியா? தைரியமா இரு." என்று ஆறுதல் கூறினாள் திவ்யா அதற்கு பிரியாவும் "சரி டீ கண்டிப்பா தைரியமா இருக்கே." "ம்ம்ம் சரி இப்போ நீ எங்க இருக்கே? திக்கேட் எடுத்துட்டீயா?" என்று திவ்யா கேட்க "ம்ம்ம் எடுத்துட்டேன் தோ 10 மணிக்கு பஸ் வந்துரும் வேய்ட் பண்ணிக்கிட்டு இருக்கேன்" என்று சொன்னாள் பிரியா. "ஆமாவா? சரி பாத்துப் போ. நானும் கிழம்பிக்கிட்டு இருக்கே. ஏதாச்சும் னா எனக்கு வொடெனெ க்கோள் பண்ணு பிரியா சரியா?" "ம்ம்ம் சரி திவ்யா பாத்து வெச்சுடுறே? " "ஆ சரி பிரியா பாய்" என்று சொல்லி வைத்தவுடன் பேருந்தும் வந்தது. மூன்று மணிநேர பயணத்திற்கு பின் பிரியா தன் சொந்த இடத்துக்கு வந்தடைந்தாள். பேருந்துவிட்டு இறங்கியவுடனே வாடகை கார் ஒன்றில் ஏறி மருத்துவமனைக்கு சென்றாள். சென்றடைந்தவுடனே, விரைந்து உள்ளே வார்டுக்கு ஓடினாள். வார்டுக்கு சென்றவுடன் தன் தகப்பனை பார்க்க கதவை திறந்தவுடன் அவள் அப்பாவுடைய நிலையை பார்த்து பிரமித்து நின்றாள்.

தொடரும்....
#writcostory
#friendship
#family

© Dana Hephzibah