...

5 views

எது முன்னேற்றம்.....
முன்னேற்றம் என்பது என்ன ஓடிக்கொண்டே இருப்பதா????? மாறிக்கொண்டே இருப்பதா???
அப்படிப் பார்த்தால்
ஓடிக் கொண்டு இருப்பவர் எல்லாம்
முன்னேறிக் கொண்டா இருக்கின்றனர்....

இல்லவே இல்லை..... ஓடிக்கொண்டு இருப்பவர்களில் பலர் இயல்பு வாழ்க்கையின் பிடியில் சிக்கிக் கொண்டு ஏதேதோ கடமைகளுக்காகவும் காரணங்களுக்காகவும் கிடைத்ததைப் பிடித்து நடந்ததை ஏற்று நகர்கின்றனர்....
அது முன்னேற்றமா...
அது ஒருவகையில் பார்த்தால் ஏதோ ஒரு முயற்சி, போராட்டம் இவற்றிற்கிடையில் கற்கும் வாழ்க்கை பாடம்...... அது ஒருவகையில் பாதி முன்னேற்றம் தான் ஆனால் அது எப்போது முழுமையடையும் என்றால்
கற்ற பாடத்தை செயலாக்க முடிந்தால்.... முயன்றால்...... நமது முன்னேற்றம் முழுமையடையும்



முதலில் முன்னேற்றம் என்பது என்ன??? என்று பார்த்தால்
நமக்கு என்ன வேண்டும் என்பதற்கும் நாம் எங்கிருக்கிறோம் என்ற இரண்டுக்குமான தூரத்தை அடைவதற்கான எத்தனிப்பும் முயற்சியுமே முன்னேற்றம் எனப்படும்

இந்த முயற்சி சிலருக்கு காலமும் கருவியும் கூடி விரைவில் கைவசமாகும்.... இன்னும் சிலருக்கு அப்படி இல்லை ஒவ்வொரு சிறு அடியாக எடுத்து வைக்க வேண்டும்....


பலருக்கு ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாத இக்கட்டான சூழல் நிலவும்
அப்படியான நேரங்களில் சூழலை மாற்றினால் எல்லாம் மாறும் என்று எண்ணுவோம் நாம்.....


ஆனால் சூழல் மாற்றம் என்பது அவ்வளவு எளிதில் நிகழாது.... மாறாது....
ஏனெனில் ஒரு வீட்டின்/ ஒரு சமூகத்தின் சூழல் என்பது பல வருடங்களாக நிகழ்ந்து தொடர்ந்து புரையோடிப் போன பழையது..... நாம் ஒரு வார்த்தை சொன்னால் அது மாறிவிடும் அல்லது மாற்றிக் கொள்வார்கள் மாற்றி விடலாம் என்று எளிதாகச் சொல்லிவிட முடியாது.....
சொல்லிப் புரிய வைக்க முயலலாம் முடியாத போது தள்ளி நின்று வேடிக்கை தான் பார்க்க முடியும் நம் நிலைப்பாட்டில் நிலையாக நின்று கொண்டு காலத்தின் கையில் முடிவை விட்டு விட்டு!!!!


அதற்காக சூழலை மாற்ற முடியவில்லை அதனால் என் முன்னேற்றம் முழுவதும் தடைபட்டு விட்டது அவ்வளவு தான் என்றெல்லாம் புலம்பத் தேவையில்லை....
நமக்கான அடுத்த வாய்ப்புகள் என்ன என்ன செய்யலாம் என பார்க்க வேண்டும் சூழலை மாற்றினால் தான் முன்னேற முடியும் என்பதெல்லாம் ஒரு சாக்காடு!!!!
சில நேரங்களில் நாம் தான் மாற்றிக்கொள்ள வேண்டும் அதை மாற்ற முடியாத போது.....


இன்னொரு விடயமும் கூட
ஓடிக்கொண்டே இருப்பவன் தான்
முன்னேறுபவன்.... ஒரு பதவியில் இருப்பவன் தான் முன்னேறிய வன்
பல பயணங்கள் போகிறவன் முன்னேறிய வன்...... இப்படியெல்லாம் அடுத்தவர் முன்னேற்றத்தை நாம் வரையறுத்திட முடியாது..... அது அவரவர் எண்ணம் சார்ந்தது


ஆனால் உண்மையான முன்னேற்றம் என்பது உன்னை நீ தேடுவது
உண்மையைத் தேடுவது! உன் தேவை நீ அறிவது!
உன்னால் எது முடியும் என்பதை நீ தெளிவது! உனக்கு எது வேண்டும் என நீ புரிவது! அன்றாடம் அறிவை புதுப்பித்துக் கொள்வது! அகத்தெளிவோடு ஒவ்வொரு அடியையும் எடுத்து வைப்பது இதுவே இதுவே என் பார்வையில் முன்னேற்றம்.....



© தமிழ்நிழல்


#improve #tamil #thoughts
@tamilnizhal2512