...

16 views

மனம் என்பது பைத்திய எண்ணங்களின் தொகுப்பு
மனம் என்பது பைத்திய எண்ணங்களின் தொகுப்பு

- நா. முத்துக்குமார்

ஆமா ஆமா உங்கள் கூற்றை
நான் ஒத்துக் கொள்கிறேன் கவிஞரே.....
உண்மை தான் எப்படினு கேளுங்களே‌ என் முகநூல் அன்பர்களே!!!!

நேற்று இந்நேரம் என் நினைப்பில்
எது எப்படிப் போனாலும் சரி காதை சரிப்படுத்திடனும்
என்று எண்ணிக் கொண்டு
சுவர் இருந்தால்தானே சித்திரம் ஒன்றை இழந்தவளுக்கல்லவா
இன்னொன்றின் அருமை தெரியும் என்றெல்லாம்
வீர வசனம் மனதிற்குள் பேசிக்கொண்டே படுக்கைக்கு வந்தேன் பல நினைவுகள் பள்ளியைப் பிரிந்த சோகம் இருந்தாலும் இந்த எண்ணமே பிரதானமாக இருந்தது....

இன்று காது சரியானதும்
மருத்துவருக்கு மனமார நன்றி ஒன்றைச் சொல்லி விட்டு ஒரு வாரமாக அடைத்துப் போன காது நல்லா கேட்குது அடேங்கப்பா.... என ஆனந்தப்பட்டு விட்டு அப்பாடா என மன அமைதி அடைந்து விட்டு அதோடு அடுத்த வேலையை கவனிக்காமல்

இப்போது மனம் அடடா பயிற்சி நாட்கள் முடிந்துவிட்டதே
Teacher teacher னு அத்தனை முறை தொல்லை செய்வோமே ..... இனிமேல் முடியுமா ???
எத்தனை முறை என்ன கேட்டாலும் சலிப்பே இல்லாமல் சொல்வார்களே அத்தனை அலுவல்களின் போதும்
அந்த அன்பு மீண்டும் கிடைக்குமா.....
என வருந்துகிறது தலைவலிக்கும் அளவு அதையே திரும்பத் திரும்ப நினைத்து..... என்ன தான் செய்தாலும் போன நாட்கள் திரும்புமா...

திரும்பத் திரும்ப ஒன்றே கிடைத்தால் தான் அது சுவைக்குமா..... ஒருவேளை சுவைத்திருக்கலாம்...
நடந்த தீமையை மறக்கச் சொல்வது போல நல்லதாகவே இருந்தாலும் நடக்காது அதற்கு வாய்ப்பில்லை எனும் போது என்ன செய்ய முடியும்????🤷🏻‍♀️

எனவே இதற்காக வருந்தத் தேவையில்லை ஒன்றைப் பிரிந்தால் தானே மற்றொன்று கிடைக்கும்

நேற்றைய வருத்தம் அது.... இன்றைய வருத்தம் இது.... நாளைய வருத்தம் எதுவோ..... நாள்தோறும் இப்படித் தானா மனித வாழ்வே......🤔🥲😕🙁

இதெல்லாம் புத்திக்கு உரைக்கிறது
ஆனால் இந்த மனதிற்குத் தான்
அவ்வப்போது புத்தி கெட்டு விடுமே......🙁😑

அதனால் தான் ஏதோ இரண்டை அள்ளிப் போட்டுக்கொண்டு துயரப்பட்டுக் கொண்டே இருப்பதில் ஓர் ஆழ்ந்த சுகம் காண்கிறது! இதுதான் வாழ்க்கை என்றும் நம்பியும் விடுகிறது பைத்தியக்காரத்தனமாக.....🤦🏻‍♀️

மகிழ்வு என்றாலும் தலையில் தூக்கி வைக்கத் தான்
செய்கிறது அதை ஏற்கத்தான் வேண்டும் எல்லாரைப் போல அதை நான் மறுக்க மாட்டேன் ஏனெனில் சிறு பிள்ளையாய் ஒரு குட்டி விடயத்துக்கு இந்த 24,25 வயதிலும் குதூலிக்கும் மனது குழந்தை போல..... ஆனால் மகிழ்வைத்‌ தலையில் வைத்துக் கொண்டாடியது போல துக்கத்தையும் தலைக்கு மேல் தூக்கி வைத்துத் துக்கப்பட்டு துக்கப்பட்டு துவண்டு போகிறது தூக்கி வீசி எறியாமல்.....
கேட்டால் உடனே அழுகை, ஆனந்தம்
இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்காமல்
சமத்துவம் பேணுவதாய் என் சமாதானம் வேறு சொல்லிக்கொள்ளும் மனது !!!🤣🤦🏻‍♀️
ஐயோ!!! ஐயோ!!!!😕

இப்போ சொல்லுங்க
மனம் என்பது பைத்திய எண்ணங்களின் தொகுப்பு
என நா. முத்துக்குமார் சொன்னது சரிதானே!!!!!

#அகரம்_தொடங்கி_அகிலம்_வரை #தமிழ்நிழல் #தமிழ்க்கவிதைகள் #mythoughts #tamil #வாழ்க்கை #எழுத்து