...

32 views

கதை
நேற்று ஒரு நாவல் படித்தேன்
புதுமையான கருக்களம் கொண்டது
எழுத்து நடை வெகு சிறப்பாக
இருந்தது
இயற்கை அழகியல் வர்ணனைகள் அசத்தல்
காதலர்களற்ற காதல் பற்றிய கதை
அதில் வரும் பூர்ணா அபூர்வமான பெண்
துணிச்சலான செயலாற்றல் கொண்டவள்
அவளை விரும்பும் சுதிர்
அவளிடம் எதையோ இழந்து
பித்தாகி திரிகிறான்
நண்பர்களாக மட்டுமே இருக்க
இருவருக்குமான உடன்பாடு
திருமண பந்தம் என்பது
சிறை என்று கருதுகோள் கொண்டவர்கள்
இருவரும் எப்பொழுது சந்தித்தாலும் நட்பினை உறுதிப்படுத்தி வந்தனர்
பூர்ணாவின் வீட்டில் திருமணம் ஏற்பாடுகள் தீவிரம்
பிரச்சனை கலகம் மிரட்டல்
எதிர்பாராத விதமாக ஒரு நாள்
வீட்டைவிட்டு வெளியேறினாள்
அதற்கு சுதிர் சம்மதிக்கவில்லை
ஏன் வந்தாய் என்று கேட்டு
அவளை வீட்டுக்கு போ என்று அறிவுறுத்தினான்.
பூர்ணா அவன் முடிவு கேட்டு அதிர்ந்தாள். எங்கு போவதென்று புரியாமல் குழம்பிய மனதோடு நடந்தாள்.
எதிரே வந்த ஒரு ஸ்கூட்டர் அவள் மீது மோதியது.
அந்த இடத்திலேயே இறந்தாள்.
விபத்துக்கு காரணமான ஸ்கூட்டர் வேறு யாருடையது அல்ல. அது சுதிரின் ஸ்கூட்டரே. அப்பொழுது தான் கவனித்தான்
அவள் பூர்ண தான் என்பதை,
பாதையில் சடலமாய், சஞ்சல மனதோடு சுதிர் அங்கே நின்று
கண்ணீர் விட்டு கதறிஅழுது எதுவும் புரியாமல், சில நிமிடங்களில் அங்கே போலீஸ் வந்து பூர்ணாவின் சடலத்தைத் துணிப் போர்த்தி மூடியது. மனம் கனக்கிறது இன்னும், இதுதான் நான் படித்த அந்த கதையின் சுருக்கம்.

ந க துறைவன்.






© All Rights Reserved