...

6 views

நிழல்_(காதல்_ யார் அவள்)
"எல்லா அழகான உண்மைகுள்ளையும் ஒரு ஆபத்தான பொய் உள்ளது"
_அஜய் மதன்

அன்று ஒரு அழகான நாள்,என்னடா அழகான நாள் என்று சொல்ரணு பாகரிங்களா,ஏன் என்றால் அவளை பார்த்த முதல் நாள், டிசம்பர் 25,மாலை 6:30,ஆமாம் அந்நேரம் தான் அவளை நான் கண்டேன் .
"தேவதைகளை பார்த்து பொறாமை படுவார்கள் ஆனால் தேவதைகளே பொறாமை படும் கொள்ளை அழகு_அவள்."
சரி கவிதைகள் போதும் கதைக்குள் போகலாம்,மாலை 6:30 அன்று நான் ஒரு பேருந்தில் அவளை பார்த்தேன் ,பார்த்ததும் மறந்துவிட்டேன்_ என்னை அல்ல அடுத்து என்ன எழுதுவது என்று_ஞாபகம் வந்துவிட்டது ,அவளிடம் சென்று நான் கேட்ட முதல் கேள்வி உமது பெயர் என்ன?
கேள்வி என்னமோ சரி தான் ஆனால் அவள் சொன்ன பதில் தான் சரியாக இல்லை,(பதில்_ யார் நீ),இந்த பதிலை கேட்டதும் நான் பேருந்தில் இருந்து இறங்கி விட்டேன் ,அவள் மேல் உள்ள கோவத்தில் அல்ல ,நான் இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டது அதனால்தான் .
"மறுநாள் அதே பேருந்தில் நானும் அதே நேரமும்_அவள் இல்லாத தருணத்தில்".
அவள் வரவில்லை ,நாட்கள் ஓடியது,இன்று அவளை மறுபடியும் பார்த்தேன் அதே பேருந்தில் ,அவள் என்னை கண்டதும் முதலில் சொன்ன வார்த்தை ஏன் இத்தனை நாளாக இந்த பேருந்தில் வரவில்லை?, அதுமட்டும் இல்லை அவள் இன்னொன்றும் சொன்னால் என்ன தெரியுமா , உங்களுக்கு எப்படி தெரியும் அதையும் நானே சொல்கிறேன் ,அவள் கேட்டது_அவள் என்னிடம் என் பெயர் என்னவென்று கேட்டாளாம் ,அதற்கு நான் யார் நீ என்று அவளிடம் கேட்டேன் என்று சொன்னால்.
இதை கேட்டதும் எனக்கு குழப்பமாக இருந்தது, ஏன் என்றால் இதை எல்லாம் நான் அவளிடம் கேட்டது ஆனால் அவள் சொல்வது அவள் என்னிடம் கேட்டாள் என்று.
என்ன நடக்கிறது என்று குழப்பமாக இருக்கிறதா,எனக்கும் அதே குழப்பம் தான் .சரி மீண்டும் சந்திப்போம் இதற்கான பதிலுடன் .__ "நிழல்_(காதல்_அவள் யார்)"__to be continued.....

_ Ajay Madhan