...

7 views

பொக்கிஷமான நட்பு -2
மேற்கல்விக்கு விண்ணப்பம் செய்து
ஒரு மாதம் கழித்து, காலை 10.00 மணிக்கு திவ்யா பிரியா வீட்டிற்கு "பிரியா பிரியா" என்று கத்திக் கொண்டே மூச்சிரைக்க ஓடி வந்தாள். அவள் அப்படி ஓடி வருவதை பார்த்த பிரியா பயந்து "திவ்யா ஏன்டீ ஏன்னாச்சு? ஏதாச்சும் புரோம்போலமா? யேன்டீ இப்படி ஓடி வர??? என்று வினாக்களாய் வினவினாள் உடனே திவ்யா "அங்க யாரோ என்ன து..து.. து... துரத்துறாங்க பிரியா... எ..என...எனக்... எனக்கு ப.. ப.... பயமா இருக்கு டீ" என்று பதற்றத்துடன் சொன்னாள். இதை கேட்ட பிரியாவுக்கு இன்னும் அச்சத்தை ஏற்படுத்தியது அவளை உள்ளே அழைத்துச் சென்று "உனக்கு ஒன்னும் இல்ல ல தா மொத தண்ணீ குடி" என்று சொல்லி "அம்மா அம்மா சீக்கிரம் இங்க வாங்க மா" என்று அவள் அம்மாவை கூப்பிட்டாள். உடனே திவ்யா பிரியாவின் கண்ணை கட்டி, வாயில் கையை வைத்து பிரியாவின் அறைக்கு இழுத்து சென்றாள். பிரியா "ஏ திவ்யா என்ன பன்றே" என்று கேட்க "ஜஸ்ட் டூ வாட் ஐ சே, பேசாம வா" என்றாள். அவர்கள் உள்ளே சென்றதும் பிரியாவின் அம்மா வந்து பார்த்து, பிரியா இல்லை என்றதும் திரும்ப சமையலறைக்கே சென்றார். திவ்யா தீடீர்னு இப்படி நடந்து கொள்வது பிரியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திவ்யா கதவை பூட்டி, அறையின் திரை துணியெல்லாம் இழுத்து மறைத்தாள். அவள் கிட்ட நெருங்கினாள். திவ்யா கிட்ட வர வர அவளின் அடுத்த கட்டத்தை நினைத்த பிரியாவின் இருதயம் படபட வென்று துடிக்க தொடங்கியது....

தொடரும்...

#writcostory
#friendship
#family
© Dana Hephzibah