...

11 views

என்று தீருமோ பிரிவினை
என்று தீருமோ
இந்திய நாட்டின் தமிழத்தின் தெற்கு சீமை. தென்காசி இங்கு மூன்று போகங்களும்
அமோகமாக விளையும்.விவசாயம் தான் இவ்வூர் மக்களின் வாழ்வாதாரம்
தென்பொதிகை தென்றல் தவழ்ந்து வீசும்.எங்கு நோக்கினும் பச்சை பசேலென்று வயல்வெளிகள்.
தென்காசி அருகே தான் இரண்டு சிறு கிராமங்கள் மேலப்பாவூர் மற்றும் கீழப்பாவூர்.

கிராமம் பஞ்சாயத்தில் செயல்படக்கூடியது.ஆண்டாண்டு காலமாக நீர்த்தேக்கத்தில் இருந்து வரும் நீரை பாசனத்திற்காக இரு கிராமங்களுக்கும் பிரித்து தர வேண்டியது பஞ்சாயத்து போர்டு வேலை.

இரு கிராமத்திலும் பல ஜாதி இனத்தை சேர்ந்தவர்கள் வசிப்பதால் இங்கு தலையாய பிரச்சனையான ஜாதி சண்டை அடிக்கடி நிகழும்.

குடிதண்ணீரில் தொடங்கி
பாசன சாகுபடி தண்ணீர் பின்பு கண்ணீரில் முடியும்.

பெரும்பாலும் இரவு நேரங்களில்தான் பிரச்சனைகளும் சந்தைகளும் தொடங்கும்.

சிலநேரங்களில் ஆடுமாடுகள் வயல்வெளிகளில் மற்றவரின் வயிறு மேய்ந்து விட்டது என்று புகார் கூறினார் சண்டைகளும் பெரும்
பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுக்கும்.

பல நாட்கள் முன்னாள் தேசிய தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தும் பின்பு அதற்கான மோதல்களும் வெட்டு குத்தலில் முடியும்.

எத்தனை முறை எடுத்துக் கூறியும் சமரசம் பேசி மோதலை தவிர்க்கவும்
ஒற்றுமையாய் இருக்க வலியுறுத்தியும் இருதரப்பு கிராமத்தினரும் சிறிதுகூட அதற்கு செவிசாய்க்கவில்லை.

இரண்டு கிராமத்து மக்களும் மிகுந்த அவதி அடைந்தனர்.

அரசாங்க திட்டங்களும் சரிவர மக்களுக்கு சென்று சேரவில்லை.

மத்திய அரசு மாநில அரசின் திட்டங்களும் நிதி உதவிகளும் இருந்தும் அதை முழுமையாக பயன்படாத வண்ணம் மக்கள் தங்களது வேற்றுமையின் பிரச்சினைகளால் பாழ் ஆக்கினர்.

அரசாங்க அதிகாரிகள் எவரும் இந்த கிராமத்திற்கு வந்து திட்டங்களை நிறைவேற்ற தயங்கினர் ஏனென்றால் எப்பொழுதும் பிரச்சினைகள் கிராமத்திற்கு வந்து செல்வது உயிருக்கு ஆபத்து என்று எண்ணினர்.

கிராமத்தில் சரியான கல்வி வசதிகள்
ஆரம்ப சுகாதார நிலையங்கள்குடிநீர் தேக்க நிலையங்கள் பொதுக் கழிப்பிட வசதிகள் இவையெல்லாம் இல்லாமல் மிகுந்த பின்னடைந்த கிராமமாக கீழப்பாவூர் மேலப்பாவூர் ஆண்டாண்டு காலமாக இருந்தன.

இந்த நேரத்தில்தான் கொரோனா நோய் அச்சுறுத்தல் பரவ ஆரம்பித்தது இந்த இரண்டு கிராமத்திலும்,

மக்களுக்கு சரியான விழிப்புணர்வு இல்லை.

நோயின் கொடிய தாக்கத்தை தவிர்ப்பது என்று தெரியாமல் திணறினர். இரண்டு கிராமத்தில் இருந்தும் அனேக மக்கள் உயிர் பலியாகினர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் புதிய கலெக்டராக பொறுப்பேற்றார் செல்வி ஜெயலட்சுமி.
அவருடைய கவனிப்பிற்கு இந்த கிராமத்தின் நோய் பரவல் மற்றும் உயிர் சேதம் கொண்டுவரப்பட்டது மக்களிடையே நிலவும் ஜாதி பிரச்சனையும் சண்டை பிரச்சினைகளும் தெளிவாக எடுத்துக் கூறினார்கள்.

புதிய கலெக்டராக பொறுப்பேற்ற ஜெயலட்சுமி போர்க்கால நடவடிக்கையாக இந்த கிராமத்தை சென்று பார்வையிட்டு ஊர் பொதுமக்களிடம் பொதுக்கூட்டம் நடத்தி பேச்சுவார்த்தை நடத்தினார்.

மக்களே இங்கு இத்தனை ஆண்டு காலம் இருந்தது என்ன முன்னேற்றத்தை கண்டீர்கள்.
உங்களுடைய தாழ்வு மனப்பான்மை
கோபங்கள் ஜாதி பிரச்சனை
இவைகளால் என்ன பலனை கண்டீர்கள் .
ஏதாவது ஒரு முன்னேற்றத்தை கூறமுடியுமா உங்கள் கிராமம் செய்தது.
ஆண்டுகள் தோறும் எல்லோர் குடும்பங்களிலும் உயிர் சேதமும் பின்னடைவுதான்.
ஒரு குடும்பத்தில் ஒரு உறுப்பினர் இறந்துவிட்டால் அந்தக் குடும்பம் எவ்வளவு பெரிய சோதனைகள் பல ஆண்டுகள் சந்திக்க வேண்டியது என்று உங்கள் அனைவருக்கும் தெரியுமா?

நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து எனக்கு ஒத்துழைப்பு தந்தீர்கள் என்றால் உங்களது கிராமத்தை இன்னும் ஆறு மாத காலங்களில் நான் தமிழகத்தின் சிறந்த முன்னோடி கிராமங்களாக மாற்றி காட்டுவேன்.

ஒத்துழைப்பு தருவீர்களா.

இரு கிராம மக்களும் சிறிது சலசலப்பு பின் ஓங்கிய கரகோஷத்துடன் நாங்கள் ஒற்றுமை தருகிறோம்
நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள்
நாங்கள் அனைவரும் ஒரு குடும்பம்
இன்று முதல் எங்கள் கிராமம் வளர்ச்சியடைட்டும்.
உடனடியாக கலெக்டர் மக்களுக்கு நன்றி கூறி பொதுநல திட்டங்களை மிக விரைவாக செயல்படுத்த அனைத்து அரசு அதிகாரிகளும் அழைத்து திட்டங்களை செயல்படுத்த தொடங்கினார்.
சாலையில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவினார் இதனால் குற்றம் குறைந்தன.
சாலை வசதிகளால் பேருந்து சரி வர இயங்கின.
ஆரம்ப சுகாதர மையம் மருத்துவர்கள் செவியர்கள் மக்களை நோய்களில் இறந்து பாதுகாத்து உயிர்சேதம் குறைந்து.
கல்வி பாடசாலை வகுப்புகள் தொடங்கின ஆசிரியர் கற்றல் தொடங்கி மாணவமணிகள் கல்வி கற்றன.
நீர் பாசனம் விறியோகம் சீராக விவசாயம் மேலும் வளர்ச்சியடைந்தது.
தேசிய தலைவர் சிலைகள் பாதுகாக்கபட்டன சேதங்கள் தவிர்க்கப்பட்டன.
ஒற்றுமையான இரு கிராமத்து மக்கள் வளர்ச்சிகளை கண்டு பெருமிதம் அடைந்தனர். இத்தனை ஆண்டுகள்
நாம் இந்த சண்டைகளால் பின் தங்கி வளர்ச்சி குறைந்து உயிர்பலி யடைந்தது தான் மிச்சம் என்பதை உணர்ந்தன.
எல்லோரும் அன்பாய் இருக்க எல்லா வளமும் செல்வமும் அரசாங்க உதவிகள் திட்டங்கள் முகாம்கள் வனார்ச்சிகள் மக்களை எளிதாக சென்று பலரம் பயன்பெற்றனர்.
புதிய கலைக்ட்டர் திருமதி.ஜெயா லெஷ்மி பெரிதும் மனம் மகிழ்ச்சியடைந்தார். மக்கள் நல திட்டங்கள் செயல் பெறுவதை வரவேற்றார் கவனித்து விரிவுபடுத்தினார். ஒற்றுமை ஒங்குக.
#தண்ணீர்
© KaviSnehidan
#கிராமம்
#ஒற்றுமை
#KaviSnehidan