...

6 views

என் ஆசைகள் 3
இந்த பதிவுக்கு டைப் பண்ண நெனச்சப்போ எதுவுமே ஞாபகம் வரல... அவ்வளவுதான் உனக்கு ஆசையா அப்டியான்னு உள்ளுக்குள்ள கேட்டுகிட்டப்போ சின்ன வயசுல தோனுன ஆசைகள் எல்லாம் அப்டியே மனசுல வந்துட்டு போச்சு...
முன்னயே சொன்ன மாதிரி பணம் தேவை கெடயாதுல்ல...
ஆக ஆசைப்பட்டு வைப்போம்.....

எழுதி முடிச்சப்போ பாத்தேன் இதுல சின்ன வயசு ஆசைகள் எதுவும் இல்ல...

21. என்னோட வருமானத்துக்கு ஏற்ற மாதிரி ஒரு 20 பேரையாச்சும் படிக்க வேண்டும்.
(((சூர்யா அண்ணா ரசிகன் அல்லவா. அதனால் இப்படியொரு ஆசை. எல்லோரும் கடவுள்ட "நா நெனச்சது நடந்துச்சுன்னா நா உனக்கு அது பண்றேன். இது பண்றேன்னு வேண்டிக்குவாங்க. ஆனா நான் கொஞ்சம் வித்தியாசமா யாராச்சும் படிக்க வக்கிறேன்னு வேண்டிக்கு வேன்)

22. உடல் தானம் பண்ணனும். யாரை காண்டேக்ட் பண்ணனும்னு தெரியல. ஆனால் சீக்கிரம் 2 வருஷத்துல பண்ணிடுவேன்.

23. சூர்யா அண்ணாவ ஒரு தடவ மீட் பண்ணனும். ரசிகர் மன்றம் சார்பாக இல்லாமல் பர்ஸ்னலா ஒரு மீட்.

24. RAW ல வேல பாக்கனும்னு ஒரு ஆசை.கெடச்சா நல்லா இருக்கும். (Research and Analysis Wing. இந்திய உலவு அமைப்பு)

25. எனக்கு புடிச்ச கார் Scorpio.
அது வாங்கனும்.

26. அப்றம் மத்தது ஒரு Jacquar, Innova etc.

27. மிக முக்கியமானது எங்க மாவட்டத்துல உள்ள யூகலிப்டஸ் மரத்தையெல்லாம் அழிச்சுட்டு பசுமை காடுகளை உருவாக்கனும்.

28. நிறைய மரக்கன்றுகள நடனும்.

29. ஆப்பிரிக்கா போய் அங்க உள்ள கஷ்டப்படும் மக்களுக்கு உதவி பண்ணனும்.

30. அங்க உள்ள வறண்ட நிலப்பகுதிகள்ல மரங்கள் நட்டு வளர்த்து வளப்படுத்தனும்.
(பாலை வனத்தில் மரம் வளர்க்க நிறைய வழிமுறைகள் இருக்கு. அந்த நம்பிக்கையில்)

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
பின்னருள தருமங்கள் யாவும்,
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,
அன்னயாவினும் புண்ணியங் கோடி ஆங்கோர் ஏழைக்கு பகுத்தறிவித்தல்.
-பாரதி

இது #சூர்யாஅண்ணா பிறந்தநாள் #tag ட்ரெண்ட் பண்ண அன்னக்கி #நடிகர்பிரசன்னா அவர்கள் பிறந்தநாள் போஸ்ட் ரிலீஸ் பண்ணி இந்த வரிகள எழுதி சூர்யா அண்ணாவ #புண்ணியன் அப்டின்னு குறிப்பிட்டிருந்தார்.

ரொம்ப அழகா இருந்துச்சு.

உண்மை...

-ஆசைகள் தொடரும்.....

#தமிழ் #தமிழன் #eia2020withdraw #pudukkottai #tamilnadu #desire #dream #abdulkalam #abj #hope #educate #education #africa #desert #dreamcar #scorpio #actorsurya #suryaannafan #imagination #hopeishope #
© murugs