...

6 views

வாழ்க்கைப் பயணம்
niroshangunabalan#

தன்னை பிரிந்து சென்ற காதலியை நினைத்து
மனமுடைந்துபோன சுரேஷ் மதுப் பழக்கத்திற்கு அடிமையானது மட்டுமில்லாமல் தன்னைத்தானே வருத்திக்கொள்ளவும் ஆரம்பித்துவிடுகிறான் .இதனையெல்லாம் பார்த்து கவலைகொண்ட சுரேஷின் தாய் .சுரேஷை எங்காவது ஒரு சுற்றுளா சென்று இப்பழககங்களில் இருந்து மீண்டு வரும்படி கூறினாள்.முதலில் மறுத்த சுரேஷ் பின் சென்று வருவதாக கூறிவிட்டு இலங்கையை நோக்கி தன் பயணத்தை தொடர்ந்தான்.இலங்கை விமான நிலையத்தை வந்தடைந்த சுரேஷ் ஒரு கார் ஓட்டுநருடன் அறிமுகமாகி தன்னை தங்கும்விடுதி ஒன்றி்ல் இறக்கிவிடும்படி கூற ஓட்டுநரும் இறக்கிவிட்டு கிளம்பி விடுகிறார்.விடுதியில் ஓய்வெடுத்த சுரேஷ் .காலை விடிந்ததும் மன்னார் என்ற நகரத்தை நோக்கிச் சென்று அங்குள்ள மக்களோடு சகஜமாக பழக ஆரம்பிக்கிறான் .புதிய நண்பர்கள் மூலமாக சுரேஷின் மதுப்பழக்கம் குறையும் என நினைத்தால் அது நம் தவறான எண்ணமாகும்.புதிய
நண்பர்களின்களின் மூலமாக சுரேஷ் மதுப்பழக்கம் மட்டுமின்றி வேருசில போதைப்பழக்கத்தையும் கற்றுக் கொண்டு நாளடைவில் அதற்கும் அடிமையாகிவிட சுரேஷின் பணத்தேவையும் அதிகமானது .இதனால் வேலை செய்ய முடிவு செய்து நண்பர்ளுடன் வேலைக்குச்சென்று அதன்மூலம் கிடைக்கும் பணத்தைக்கொண்டு தன் தேவையை பூர்த்திசெய்து வந்தான் .இவ்வாறு சில வாரங்கள் கடந்தது .ஒருநாள் தன் தாயை கைபேசி மூலமாக அழைத்து தான் நாளை நாடு திரும்புவதாக கூறினான்.தன் மகன் திருந்திவிட்டான் என நினைத்த சுரேஷின் தாய் மிகவும் சந்தோஷமடைந்து .நாளை காலை தான் விமான நிலையம் வந்து விடுவதாக கூறிவிட்டு அழைப்பை துண்டித்தார்.சுரேஷ் தன் நண்பர்களிடம் விடைபெற்று சென்னை விமானநிலையத்தை வந்தடைந்தான்.மிகவும் மெலிந்து நோய்வாய் பட்டவர்களைப்போல தோற்த்தில் இருந்த சுரேஷை பார்த்து தாயார் அதிர்ந்துபோனாள்.தன் மகன் இன்னும் திருந்தவில்லை என்பதை அறிந்து கொண்ட தாயார் விமான நிலையத்திலிருந்து கோபத்துடனும் சோகத்துடனும் வீடு திரும்பினார்.தாயைக் கண்டிராத சுரேஷ் தாயை தொடர்பு கொண்டு எங்குள்ளீர்கள் என்று கேட்க தான் வரவில்லை என கூறிவிட்டு அழைப்பை துண்டித்து விடுகிறாள்.சுரேஷ் நடந்தது அறியாது டாக்ஸி புக் செய்து வீட்டை அடைகிறான்.தான் வந்ததை சற்றும் பொருட்படுத்தாத தாயைப் பார்த்து கோபம் கொண்டு வீட்டிலிருந்த கொஞ்சம் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பினான்.வெளியே சென்றவன் மிகவும் குடித்து விட்டு வீடு திரும்பினான்.இவ்வாறே பல நாட்கள் கடந்தன.தன் வீட்டின் பெயரில் கடன் வாங்கி அதனையும் குடித்து தீர்த்தான் .இந்நிலையில் மூனறு மாதங்களில் தங்களின் வீட்டினை காலி செய்ய வேண்டும் இல்லையென்றால் கடன் தொகையை முழுமையாக செலுத்த வேண்டும் என நீதிமன்றத்திலிருந்து தகவல் வந்தது. .இதனை அறிந்த சுரேஷின் உறவினர்களும் இருவரையும் கைவிட தனிமையில் தவித்தார்கள்.தன்னால்தானே நம் குடம்பத்திற்கு அவமானம் ஏற்பட்டது என்பதை புரிந்து கொண்ட சுரேஷ் ஒரு அறைக்குள் தன்னைத்தானே பூட்டிக் கொள்கிறான் இவ்வாறே இரண்டு மாதம் கழிந்த நிலையில் சுரேஷ் ஒருநாள் தன் அறையைவிட்டு வெளியே வந்து தன் தாயிடம் பேசினான் .தான் தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் ஒரு கதையாக எழுதியதாகவும் அதனை வெளியிட்டால் கிடைக்கும் பணத்தைக்கொண்டு நம் கடன் முழுவதையும் அடைத்து விடலாம் என்பதாகவும் கூறினான தாயும் நம்பினாள்.இதனைப்பற்றி தன் உறவினர்களிடம் சுரேஷின் தாயார் கூற அனைவரும் சிரித்து கேலி செய்தார்கள்.இருப்பினும் சுரேஷ் தன் நம்பிக்கையை கைவிடாது தன் கதையை பல சிக்கல்களுக்குப் பிறகு வாழ்க்கைப் பயணம் என்ற தலைப்பில் வெளியிடுகிறான் .சில நாட்களிளேயே இக்கதை மிகவும் பிரபலமானது .ஆனால் கதையின் மூலம் கிடைத்த பணமோ கடனை அடைக்க போதுமானதாக இல்லை .இருவரும் யோசனையில் அமர்ந்திருந்த போது திடிரென அழைபேசி ஒலித்தது .மிகவும் பிரபலமான திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷை அழைத்து தங்கள் கதையை திரைப்படமாக எடுக்க தங்களின் அனுமதி வேண்டுமெனகேட்டார்.மேலும் ஒத்துக்கொண்டால் தங்களின் கடனை முழுவதும் அடைப்பதாகவும் .இக்கதையில் தன்னையே நடிக்க வைப்பதாகவும் கூறினார்.சுரேஷ் தாமதமின்றி ஒத்துக்கொள்ள சுரேஷின் கதைமட்டுமல்லாமல் சுரேஷும் பிரபலமானான்.ஒதுக்கிய உறவினர்கள் மீண்டும் இணைந்தார்கள் .இழந்த மரியாதையும் திரும்பக் கிடைத்தது.பணம்தான் இவ்வுலக மக்களின் உயிராக உள்ளது என்பதை அறிந்த சுரேஷ் தன் அடுத்த கதையை 'பணம்' என்ற தலைப்பில் எழுத ஆரம்பித்தான்.........நன்றி......(காதல் தோல்வியை காதல் தோல்வியாக மட்டுமே பாருங்கள் ஏனென்றால் அது வாழ்க்கை தோல்வியல்ல.,தாய் தந்தையைத் தவிர வேருயாராலும் பிள்ளைகளை நல்வழிப்படுத்த முடியாது எனவே தாய் தந்தையை மதித்து நடக்க கற்றுக் கொள்ளுங்கள்..,பணமிருந்தால் மதிக்கும் உறவினர்கள் பணமில்லா விட்டால் திரும்பிக்கூட பார்க்கப்போவதில்லை..,எதை இழந்தாலும் உங்களுக்குள் இருக்கும் நம்பிக்கையை ஒருபோதும் இழக்காதிர்கள்)