...

7 views

உனக்கானவன் இவள்
❤ நான் கொண்ட காதலில் ❤
காமம் இல்லை ஆனால்
காதல் இருந்தது
அதிகாரம் இல்லை ஆனால்
அன்பு இருந்தது
ஆணவம் இல்லை ஆனால்
ஆறுதல் இருந்தது
இன்பம் இல்லை ஆனால்
இனிமை இருந்தது
ஈர்ப்பு இல்லை ஆனால்
ஈடுபாடு இருந்தது
உண்மை இல்லை ஆனால்
உணர்வு இருந்தது
ஊசல் இல்லை ஆனால்
ஊக்கம் இருந்தது
எழுத்து இல்லை ஆனால்
எண்ணம் இருந்தது
ஏமாற்றம் இல்லை ஆனால்
ஏக்கம் இருந்தது
ஐக்கியம் இல்லை ஆனால் ஐக்கியம் இருந்தது
ஒப்பனை இல்லை ஆனால் ஒற்றுமை இருந்தது
ஓய்வு இல்லை ஆனால்
ஓவியம் இருந்தது
நிஜம் இல்லை
ஆனால் நினைவு இருந்தது
பண்பு இல்லை ஆனால்
பணிவு இருந்தது
பயம் இல்லை ஆனால்
பக்தி இருந்தது
கலாச்சாரம் இல்லை ஆனால் கண்ணியம் இருந்தது
படிப்பு இல்லை ஆனால்
பண்பாடு இருந்தது
தவிப்பு இல்லை ஆனால்
தவம் இருந்தது
நீ இல்லை ஆனால்
நான் இருந்தேன்
வழக்கம் இல்லை ஆனால்
பழக்கம் இருந்தது
பகை இல்லை ஆனால்
பதட்டம் இருந்தது
ஆசை இல்லை ஆனால்
ஆத்மார்த்தம் இருந்தது
உதாசீனம் இல்லை ஆனால்
உள்ளம் இருந்தது
என்னவன் இல்லை ஆனால்
எனக்காக இருந்தது
புலம்பல் இல்லை ஆனால்
புரிதல் இருந்தது
கண்ணீர் இல்லை ஆனால்
கவிதை இருந்தது
பிரிவு இல்லை ஆனால்
பரிவு இருந்தது
பழி இல்லை ஆனால்
கோபம் இருந்தது
நேசம் இல்லை ஆனால்
பாசம் இருந்தது ❤❤❤