...

8 views

பத்து நிமிட காதலி
பத்து நிமிட காதலி



இரணியல் அரண்மனை

                          கடைசியாக, மன்னர் உதய மார்த்தாண்ட வர்மா அவர்கள் ஆட்சி செய்த இரணியல் அரண்மனை  பழமையான சேரர் கால அரண்மனையாக கருதப்படுகிறது. 

                         அந்த புகழ் பெற்ற ஊரில், அந்த அரண்மனை அருகில் சில வருடங்கள் வாழ்ந்தோம்.

          மீசையுடன் காதலும் சிறிதாய் அரும்பிய வயது அது...

        அப்போதெல்லாம் வீட்டில் உறவினர்கள் வருவதுண்டு. எனது பெற்றோர் அவர்களை அறிமுகம் செய்து வைப்பர். அவர்களுடன் என் வயதுடைய ஆண் குழந்தைகள் வந்தால் விளையாடுவோம்.

               சில நேரம் பெண் குழந்தைகளும் வருவதுண்டு. சில நேரம், இது உன் மாமன் மகள் அல்லது அத்தை மகள் என அறிமுகம் செய்து வைப்பார்கள்.

       அந்த பெண்களை பார்த்தால்   வெட்கத்துடன் வீட்டில் ஒரு அறையில்  ஒளிந்து இருந்த நாட்களும் உண்டு. சில நாட்களுக்கு, வீட்டுக்கு வந்த அந்த பெண்ணைப் பற்றிய நினைவுகள் தான் மனதில் ஓடும்.அவளைப் பற்றி பகல் கனவு கண்டதும் உண்டு. அவளை காதலித்து மணமுடித்து குழந்தை பெறுவது வரை அந்த கனவு நீளும். இப்படி பல மாமன் மகள்களும் அத்தை மகள்களும்,
பல பகல் கனவுகளும்.

இப்படி வாழ்க்கை அருமையாக சென்றுக் கொண்டிருந்த போது ஒருத்தி என் மனதை கொள்ளை கொண்டுவிட்டாள்.
இன்றும் அந்த ஒருத்தியை  நினைத்தே ஏங்குகிறது மனது.

அதன் பிறகு எந்த மாமன் மகளை கண்டாலும் அத்தை மகளை கண்டாலும் பகல்   கனவு கண்டதில்லை.

                  மாமன் மகள்கள் எங்கள் வீட்டுக்கு வந்தால் இருப்பது பத்தோ பதினைந்தோ நிமிடங்கள் தான். அதனால் தான் இதற்கு பத்து நிமிட காதலி என தலைப்பு வைத்துள்ளேன்.

உங்கள் வாழ்வில் இது போல் ஏதாவது நடந்திருந்தால் கமெண்ட் செய்யுங்கள்.

- அப்துல் ஹலீம்


© Dr. Abdul Halim