...

6 views

எனது வாக்குமூலம்
நாளொன்றுக்கு ஒருவர் வீதம் ஒரு வாரத்திற்கு ஏழு நபர்களை பட்டப் பகலில் மிகக் கொடூரமாக கொலை செய்த கொலையாளி நீதிமன்றத்தில் சரணடைய நாடெங்கும் ,கொலையாளியை தூக்கிலிடக் கோரி பல போராட்டங்கள் வெடிக்கிறது.இந்த கொலை வழக்கு நாடுமுழுவதும் மிகவும் பேசப்பட.இந்த விசாரணையை நேரடி ஔிபரப்பு செய்ய வேண்டுமென எழுந்த விவாதத்தால் ,நீதிமன்றமும் ஒப்புக்கொள்கிறது.விசாரணையை தொடங்கிய நீதிபதி .கொலையாளியிடம் நீங்கள் தான் கொலை செய்தீர்களா எனக் கேட்க ஆம் என்ற பதிலை கூறிய கொலையாளியிடம் இரண்டாவது கேள்வியாக எதற்காக கொலை செய்தீர்கள் என்றார் நீதிபதி.......சற்று தாமதித்த கொலையாளி பதிலை சொல்ல ஆரம்பித்தார்.......
என் பெயர் ஜானி .பெற்றோரை இழந்த நானும் என் தங்கையும் தனியாகதான் வாழ்ந்து வருகிறோம் ..எனக்கு மாலைக் கண் நோய் இருப்பதால் என்னால் சக மனிதரைப் போல இரவு ஏழு மணிக்கு பிறகு வெளியில் செல்லவோ என்னுடைய தனிப்பட்ட தேவையை பூர்த்தி செய்யவோ முடியாது .ஆகவே என்னுடைய தங்கை இரவில் எனக்கு தாயாக மாறினாள் .பகலில் நான் என் தங்கைக்கு தாயாக மாறினேன்.என்னால் முடிந்த வேலைகளை செய்து என் தங்கைக்கு திருமணம் செய்ய சிறுக சிறுக சேமித்துக் கொண்டிருந்தேன்.தங்கை மீது மிகவும் பாசம் கொண்ட நான் ஒருநாள் வேலை முடித்து வீடு திரும்பினேன் .இருவரும் இரவு உணவை முடித்து விட்டு சரியாக இரவு 10 மணிக்கு உறங்கச் சென்றோம்.அப்போது திடீரென கதவு தட்டும் சத்தம் கேட்டது.என்னால் எழுந்து செல்ல முடியாத காரணத்தால் என் தங்கை கதவை திறக்க சென்றாள் .அந்நேரம் மின்இணைப்பு துண்டிக்கப்பட சற்று சந்தேகமடைந்த நான் எனது கைபேசியை தேடி எடுத்து தங்கையிடம் கொடுத்து வீடியோ மோடில் லைட் வைத்துக் கொண்டு சென்று கதவை திற எனக்கூற அவளும் அவ்வாறே செய்துவிட்டு கதவை திறக்கச் சென்றாள்.தங்கை சென்று வெகுநேரம் ஆகியும் வராததால் நான் எழுந்து தட்டுத்தடுமாறி என் அறைக்கதவை திறக்க முயற்சிக்க அது வெளியில் தாப்பாலிடப்பட்ட நிலையில் இருக்க என் தங்கையின் அலுகுரல் மட்டுமே கேட்டது.கதவை திறக்க முயற்சி செய்த நான் தவறி கீழே விழ தலையில் அடிபட்டு மயக்கமடைந்தேன்.காலையில் விழித்தநான் அங்கிருந்த கட்டையை எடுத்து கதவை உடைத்து க் கொண்டு வெளியே சென்று பார்த்தேன் என் தங்கை மிகவும் கொடூரமாக கொலை செய்யப்பட்டுக் கிடப்பதைப் பார்த்து துடிதுடித்து உடலை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றேன்.ஏழு நபர்கள் என் தங்கையை மிகவும் கொடூரமான முறையில் கற்பளித்து கொன்று இருக்கிறார்கள் என்று மருத்துவர் கூறிய வார்த்தையை கேட்டதும் மிகவும் துடிதுடித்துப்போனேன்...காவல் துறையில் புகார் அளிக்கச் சென்றால் இந்த விசயம் வெளியே தெரிந்தால் என் தங்கைக்கு மேலும் அவமானம் ஏற்படும் என அறிந்து .என்தங்கையின் உடலுக்கு நல்ல முறையில் இறுதி சடங்கு செய்துவிட்டு .எங்காவது சென்று விடலாம் என நினைத்து வீட்டை சுத்தம் செய்த போது என் கண்களில் எனது கைபேசி தென்பட்டது.அதனை எடுத்து ஓரமாக வைத்துவிட்டு கவலையாக அமர்ந்திருந்த எனக்கு திடீரென என் தங்கை கதவை திறக்க செல்லும் போது நான் கூறியது ஞாபகம் வர கைபேசியை எடுத்து பார்க்க .என் தங்கையை கொலை செய்த ஏழு நபர்களின் முகங்களும் அபட்டமாக தெரிந்தது.எனவே எனக்குள் கொலைவெறி மூண்டது அவர்களை பலிதீர்த்தால்தான் என் தங்கையின் ஆத்மா சாந்தியடையும் என எண்ணி திட்டம் தீட்ட ஆரம்பித்தேன் பல நாட்களாக அவர்களை பகலிலேயே பின் தொடர்ந்து. சரியான நேரத்திற்காக காத்திருந்து ஏழு நபர்களையும் ஒருவர் பின் ஒருவராக கொலைசெய்தேன் எனக் கூறிவிட்டு ..ஆதாரமாக அந்த வீடியோ காப்பியை நீதிபதியிடம் கொடுத்தான்...இவன் கூறியதை நேரலையில் பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் கண்ணீர் மல்ல இவன் கூறுவதில் நியாயம் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு ஜானியை ஆதரித்து விடுதலை செய்ய வேண்டுமென போராட்டத்தை தொடங்கினர்.இதனால் ஜானி ஒருதலைவனாக உருபெற்றான்.ஆனால் ஜானியோ செய்த தவறை ஒப்புக் கொண்டு என் தங்கை இல்லாத உலகில் வாழ எனக்கு ஆசையில்லை அதனால் எனது தண்டனையை நிறைவேற்றுங்கள் எனக்கூற நீதிபதியும் தீர்பிடுகிறார் .தீர்ப்பி்ட பத்துநாட்களில் ஜானியும் தூக்கிலிடப்படுகிறான்.......தொடரும்....