...

7 views

அந்த பையன்
நீதிமன்றத்தில் ஒரு சின்ன பையன் ஒரு பெரிய பணக்கார மனிதனை கொலை முயற்சி செய்த குற்றத்திற்காகவும், ஒரு ஆண் குழந்தை இந்த சிறுவனால் காணவில்லை என்ற குற்றத்திற்காகவும் ஆஜர்படுத்தப்பட்டுள்ளான். பெற்றோர் இருவரும் 'இவன் ஏன் இவ்வாறு செய்தான்' என்பது தெரியாத நல்லவர்கள் போல நடிக்கிறார்கள். நீதிபதி 'ஏன் உங்கள் பையன் இவ்வாறு கொலை செய்ய முயற்சி செய்தான்? என்று பெற்றோரை பார்த்து கேட்க,‌ தந்தை நல்லவர்போல் 'எனக்கு எதுவும் தெரியாது' 'அவன் மிகவும் கெட்ட பையன் '. இவனை பெற்றதற்காக நாங்கள் வெட்கப்படுகிறோம். "இவன் எங்களது பையன் கிடையாது"என்று கூறுகிறார். அந்த சிறுவனின் அம்மா ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறாள். தந்தையையும் , தாயையும் பார்த்த சிறுவன் வேதனையுடன் அழுகிறான். நீதிபதி அந்த சிறுவனிடம் 'ஏன் இவ்வாறு செய்தாய்' என்று கேட்டார். சிறுவனும் மனதில் இருக்கும் வேதனையுடனும் கண்களில் கண்ணீரோடும் அந்த பிஞ்சு குரலில் தனது கதையை கூறுகிறான். எனது பெயர் டேவிட். எனக்கு வயது 12. எனக்கு இரண்டு தம்பிகள், ஒரு அக்கா, மற்றும் ஒரு தங்கை. தங்கை ஆறு மாத குழந்தை. டேவிட்டும் அவனது தம்பிகளும், அக்காவும் தெருவில் கிடக்கும் குப்பைகளை பொறுக்கியும் மற்றும் அதில் ஏதாவது உணவு பொட்டலம் அல்லது சிறு ரொட்டி துண்டு கிடைத்தாலும் அதனை பகிர்ந்து உண்டு வாழ்ந்து வருகின்றனர். ஏனென்றால் அப்பா, அம்மாவிற்கு பிள்ளைகளை பற்றிய கவலை கிடையாது. அப்பா, அம்மா இருவரும் குடும்ப கஷ்டம் காரணமாக போதைப் பொருட்களை விற்று அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து அவர்களின் வாழ்வை ஓட்டுகிறார்கள்.
இந்த குழந்தைகளுக்கு தேவையான உணவு, உடைகளை வாங்கி கொடுப்பது கிடையாது.
தெருவில் குப்பைத்தொட்டியில் கிடக்கும் பழைய துணிகளையே இந்த குழந்தைகள் அணிந்துள்ளனர்.
அந்த குழந்தைகள் நன்றாக உறங்கூட ஒரு அறை கிடையாது. வீட்டின் ஆங்காங்கே சிறு சிறு விரிசல்கள். மழை பெய்தால் வீடு முழுவதும் தண்ணீர் நிறைந்து விடும். வெயில் நேரத்தில் சூரிய வெளிச்சம் வீட்டின் ஓட்டைகளின் வழியே முகத்தில் வெளிச்சம் அடிக்கும். மிகவும் சிறிய அறை. டேவிட்டிக்கு அவனது தந்தை செய்யும் தொழில் பிடிக்கவில்லை. இதனால் அம்மா, அப்பாவையும் பிடிக்கவில்லை. அவனுக்கு மிகவும் பிடித்தது அவனது அக்கா மட்டுமே.
அவளின் பெயர் ஜெனி. மிகவும் அன்பானவள்! அவளுக்கு வயது 13. டேவிட்டும், அவனது தம்பிகளும், அக்காவும் எப்பொழுதும் அழுக்கான கிழிந்த உடைகளை அணிந்திருப்பார். அந்த குழந்தைகள் நல்ல உணவை உண்டது கிடையாது! நல்ல உடைகளை அணிந்து கிடையாது! அவர்கள் உறங்க வீடும் கிடையாது! இவ்வாறு பல வறுமையுடன் கஷ்டங்களுடன் , வாழ்க்கை நகர்கிறது. ஒரு பணக்கார மனிதன் எப்பொழுதும் இவர்களின் வீட்டிற்கு வருவான். மிகவும் கெட்டவன். ‌‌

அவன் ஜெனியை எப்பொழுதும் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பான். ஒருநாள் அவன் டேவிட்டின் பெற்றோரிடம் வந்து " ஜெனியை தனக்கு திருமணம் செய்து வையுங்கள்" என்று கேட்டான். சிறிதும் வெட்கம் இல்லாமல் டேவிட்டின் பெற்றோரும் ஜெனியை அந்த பணக்காரனுக்கு திருமணம் செய்து கொடுக்க ஒப்புக்கொள்கிறார்கள். அதற்காக பணமும் வாங்கிக் கொள்கிறார்கள். இருப்பினும் அவள் இன்னும் வளரட்டும் என்றும் அதுவரை பொறுத்துக் கொள்ளுங்கள் என்றும் கூறுகிறார்கள். அந்த பணக்காரனும் அதற்கு ஒத்துக்கொண்டார். இந்த விஷயம் டேவிட்க்கும், ஜெனிக்கும் பிடிக்கவில்லை. ஆனால் அவர்களால் ஒன்றும் செய்யவும் முடியவில்லை. இவ்வாறு வாழ்க்கையும் பல சிக்கல்களுடனும் நகர்கிறது. ஒருநாள் டேவிட்டும், அவனது அக்காவும் குப்பைகளை பொறுக்கிக்கொண்டிருந்த வேளையில் ஜெனியின் ஆடையின் பின்புறம் கறை இருப்பதை கண்டு வேதனையுடன் ‌ அழுகிறான். அவளிடம் அதை பற்றி கூறினான். அவளுக்கு தேவையான ‌அந்த பொருளை வாங்கக்கூட வழி இல்லை. இதனால் தான் அணிந்திருந்த சட்டையை கழற்றி ஜெனியிடம் டேவிட் கொடுத்து "இதனை பயன்படுத்திக் கொள் ஜெனி "என்று கூறினான். வறுமை நிலை. கையில் பணமும் இல்லை. பெற்றோருக்கு இந்த விஷயம் தெரியக்கூடாது. அவ்வாறு தெரிந்தால் ஜெனியை அந்த கெட்டவனுக்கு திருமணம் செய்து கொடுத்து விடுவர். இருவரும் சேர்ந்து பெற்றோருக்கு தெரியாமல் அந்த விஷயத்தை சில நாட்களே மறைக்க முடிந்தது. அம்மாவும்‌ கண்டுபிடித்து விட்டார். இதனால் பெற்றோர் இருவரும் ஜெனிக்கு திருமணம் செய்ய முடிவு செய்தனர். ஆனால் இதற்கு டேவிட் எதிர்ப்பு தெரிவித்தான். ஆத்திரமடைந்த பெற்றோர் இருவரும் டேவிட்டை வீட்டை விட்டு வெளியே துரத்தினர். வீட்டை விட்டு வெளியில் வந்த டேவிட்க்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இரண்டு, மூன்று நாட்களாக சாப்பிடவில்லை. வேலை கேட்டாலும் எவரும் வேலையும் தரவில்லை. ஏனென்றால் பார்த்தற்கு அழுக்கான ஆடைகளோடு பிச்சைக்காரன் போல் தோற்றளித்தான். மழை பெய்து கொண்டிருந்தது. டேவிட் குளிரில் தெரு ஓரத்தில் நின்றுகொண்டு இருந்தான். அப்போது அந்த வழியாக வந்த பெண்மணி அவனை கருணையுடன் பார்த்து அவளது வீட்டிற்கு அழைத்து சென்றாள். அவளின் பெயர் லிசா. அவள் ஒரு உணவு கடையில் வேலை பார்க்கிறாள். அவளுக்கு கணவன் கிடையாது. ஒரு ஆண் குழந்தை‌ மட்டுமே உள்ளது. அவள் கருப்பின இனத்தைச் சேர்ந்தவள். வாடகை வீட்டில்தான் இருக்கிறாள். தனக்கு வரும் வருமானத்தை வைத்தே தனது குழந்தையை வளர்த்து வருகிறாள். விட்டிற்கு அழைத்து சென்ற டேவிட்க்கு உணவு வழங்கினாள். சிறுவன் டேவிட்டும் நன்றாக சாப்பிட்டான். பிறகு லிசா டேவிட்டிடம் "தனது குழந்தையை பார்த்த கொள்ள எவரும் இல்லை.நீ என் குழந்தையை பார்த்து கொள்கிறாயா? என்று கேட்டாள். டேவிட்டும் ஒத்துக்கொண்டுடான். பிறகு " ஒரு குழந்தையான அந்த சிறுவனே குழந்தையை அழகாக பராமரித்தான்". மூவரின் வாழ்க்கையும் சந்தோஷமாக நகர்ந்தது. ஆனால் அதுவும் நிலைக்க வில்லை. ஒருநாள் லிசா வேலை முடிந்தும் வீடு திரும்பவில்லை. நாட்கள் நகர்ந்தன. ‌‌4 நாட்கள் நகர்ந்தும் வீடு திரும்பாததால் குழந்தையும் பசியால் அழுதது. வீட்டில் இருந்த உணவு பொருட்களும் தீர்ந்து போனது. டேவிட்க்கு என்ன செய்வது? என்று தெரியவில்லை.
வீட்டிலிருந்து வெளியே வந்தான். அங்கே ஒரு பொட்டலம் கிடந்தது. அதனை டேவிட் எடுத்து பார்த்தபோது அதில் போதைப்பொருள் இருந்தது. டேவிட்க்கு அது பிடிக்கவில்லை என்றாலும் குழந்தையின் பசியை ஆற்றுவதற்காக அதை கேட்பவர்களுக்கு அவன் விற்றான். அதன் மூலம் ‌கிடைத்த வருமானத்தை வைத்து குழந்தையின் பசியை போக்கினான். டேவிட் போதைப் பொருட்களை விற்பனை செய்வதை கண்ட ஒரு இளம் ரவுடி கும்பல் அவனிடமிருந்து அந்த போதைப் பொருட்களையும் அவன் வைத்திருந்த பணத்தையும் பிடுங்கி சென்றனர். மீண்டும் வறுமை துரத்தியது. குழந்தையும் பசியால் அழுதது. டேவிட் முடிவு செய்தான்.
குழந்தையை தனியாக தெருவில் விற்று சென்றான். யாராவது அந்த குழந்தையை எடுத்து வளர்ப்பார்கள் என்ற நம்பிக்கையில். ஆனால் குழந்தை விட்டு பிரிய மனமில்லாமல் மீண்டும் சென்று பார்த்தான். டேவிட்டை கண்டதும் குழந்தையும் அவனிடம் தவழ்ந்து சென்றது. டேவிட் கண்களில் கண்ணீரோடு குழந்தையை இறுக அணைத்து கட்டிக்கொண்டான். இதனை கண்ட குழந்தையை விற்பவன் ஒருவன் டேவிட்டிடம் சென்று இந்த குழந்தையை நல்ல இடத்தில் நான் சேர்க்கிறேன் என்று கூறினார். டேவிட் நன்றாக யோசித்து விட்டு "இவன் பசியால் அழுவதை விட எங்கேயாவது நன்றாக இருக்கட்டும் " என்று நினைத்து குழந்தையை கொடுத்து விட்டு சென்றான். டேவிட்க்கு தனது சகோதரியின் ஞாபகம் வந்ததால் அவளை பார்க்க மீண்டும் தனது வீட்டிற்கு சென்றான். இங்கு பல நாட்கள் கழித்து லிசா வீட்டிற்கு சென்றாள். தனது குழந்தையை காணவில்லை என்று அறிந்தவுடன் போலீசாரிடம் டேவிட் மீது புகார் அளித்தாள். இங்கு வீட்டிற்கு வந்த டேவிட்க்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. தனது ‌ சகோதரியை தேடினான். தனது பெற்றோரிடம் ஜெனி எங்கே? என்று கேட்டான். பெற்றோர் இருவரும் கொஞ்சம் கூட கவலை இல்லாமல் "ஜெனி இறந்து விட்டாள்"என்று கூறினார்கள். அந்த சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு அனைத்தையும் அவனது தம்பி கூறினான். "ஜெனியை அந்த கெட்டவனுக்கு திருமணம் செய்து வைத்தனர். அவள் தனது குழந்தையை பெற்றெடுக்கும் போது இறந்து போனாள். இதனை கேட்ட டேவிட் மிகவும் ஆத்திரத்துடன் அந்த பணக்காரனை பார்க்க சென்றான். ‌அவனை கண்டதும் ஆத்திரத்தில் அவனது வயிற்றில் குத்தி விட்டு ஓடி விட்டான். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் போலீஸ் அதிகாரியிடம் தகவல் தெரிவித்தனர். டேவிட்டும் புடிப்பட்டான். ஆனால் நல்ல வேலையாக அந்த பணக்கார மனிதனுக்கு ஒன்றும் ஆக வில்லை. இவ்வாறு தனது வலி நிறைந்த வாழ்க்கையை கூறி முடித்தான் அந்த சிறுவன். இதனை கேட்ட நீதிபதி கண்களில் கண்ணீரோடு அந்த சிறுவனிடம் "உனக்கு என்ன ஆசை"என்று கேட்டார். சிறுவன் டேவிட்டும் "என்னை எனக்கு புகைப்படம் எடுக்க ‌ ஆசை "என்று கூறினான். இதனை கேட்ட நீதிபதி சிரித்து விட்டு தனது தீர்ப்பையும் கூறினார். ஜெனியின் மரணத்திற்கு நீதி வழங்கும் விதமாக பெற்றோர் இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. அந்த பணக்காரனுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. டேவிட்டின் தம்பிகளும், தங்கையும் அனாதை ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டனர். பிறகு பள்ளியிலும் சேர்க்கப்பட்டனர். லிசாவின் குழந்தையும் கண்டுபிடிக்கப்பட்டு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. ‌‌ டேவிட் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டான். பிறகு ஒருநாள் டேவிட்ற்கு ஒரு போலிஸ் அதிகாரி நல்ல ஆடைகளை வாங்கி கொடுத்தார். அதை அணிந்து கொண்ட சிறுவன் டேவிட் ஒரு அறைக்கு அழைத்து செல்லப்பட்டான். டேவிட்டை அந்த போலீஸ் அதிகாரி நேராக நிமிர்ந்து நிற்க சொன்னார். டேவிட்க்கு ஒன்றும் புரியவில்லை. போலீஸ் அதிகாரி "உன்னை புகைப்படம் எடுக்கதான் என்று கூறினார்." இதனை கேட்ட டேவிட் மிகவும் சந்தோஷமாக சிரித்தான். அந்த சிறுவன் எந்த வித பிரச்சினையும் இல்லாமல் மிகவும் நிம்மதியுடன் சிரித்தான். எந்த கள்ளக்கபடமும் இல்லாத ஒரு பிஞ்சு குழந்தை முதல் முதலாக சிரித்தது அன்று தான். வாழ்க்கை ஆயிரம் கஷ்டம் கொடுத்தாலும் கலங்காமல் நம்பிக்கையுடன் நில்... என்பதை எடுத்துக் கூறும் கதை இது...
கஷ்டங்களை கொடுத்தாலும் கலங்காமல் நின்று உன் தேடலுக்கான வெற்றி எனும் கனியை பறி! உன்னால் முடியும் !