...

2 views

முடி திருத்தும் தொழிலாளியும் முடிந்து போன வாழ்க்கையும்...
#WritcoStoryPrompt51 # #CovidStories
பொழுது உதித்த நேரம் முதல், பொழுது முடியும் நேரம் வரை கால் கடுக்க நின்று,
கடைக்கு வருவோரிடம்,
கணிவோடு பேசி தொழில் செய்து வந்தவர்கள் தான் முடி திருத்தும் தொழிலாளர்கள்.
எண்ணி ஒரு நாளைக்கு ஐநூறு ரூபாய் அதிகபட்சம் வருமானம் ஈட்டுபவர்கள்.
பரபரப்பான காலை வேளைகளில், சிட்டுக்குருவிப்போல இருக்கும் சின்னக் குழந்தைகள் முதல், தட்டி தடுமாறி வரும் முதியோர் வரை அந்த கடை வாசலில் இடம் இருக்கும்.
இன்னொருவரின் சரீரத்தை தொட்டு வேலை செய்வதே அவனின் தினசரி வேலை.
நன்றாக சென்ற நாட்களில், அவன் குடும்பத்துக்கு சோற்றுக்கும் சாற்றுக்கும் பஞ்சமில்லை.
பெரிய ஆடம்பர வாழ்க்கை இல்லை எனினும், சராசரி வாழ்க்கைக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
திடீரென்று ஒரு செலவு வந்தாலே அவன் சமாளிக்க திணறுவான்.
ஒட்டுமொத்த வருமானமும் ஒரே நாளில் போய் விட்டால்....
ஆம்!
கொரோனா எனும் கொடிய அரக்கன், இன்றும் அந்த அரக்கனின் பெயரை நினைத்தால் கூட அவ்வளவு ஆத்திரம் வருகிறது.
ஆட்டோக்காரன், துணிதைப்பவன், மளிகை பொருள் விற்பவன், வண்டி ஓட்டுபவன் என அனைவருக்கும் சலுகை நேர வேலை செய்யும் உரிமை இருந்தது.
ஆனால் இவனுக்கு முழுவதும் நேர வேலை உரிமையும் பறிக்கப்பட்டது. ஏனெனில் இவன் தொழில் மற்றவரை தொட்டு செய்வது.
"பாலாப்போன இந்த வியாதி என் வாழ்க்கைய இப்படி ஆக்கிடுச்சே" என்ற இவன் மனக்குமுறல்களை கேட்க யாருக்கும் நேரமில்லை.
அங்குமிங்கும் சோற்றுக்கும் சாற்றுக்கும் மட்டும் ஒளிந்து ஒளிந்து வேலை செய்தான். ஆனாலும் வளர்ந்த இந்த தொழில்நுட்பம் மண்ணை வாரி போட்டது இவன் தலையில். எல்லோரும் அந்த நவீன மெஷின் வைத்து வீட்டிலேயே அந்த வேலையை செய்து கொண்டனர்.
இப்படி அவன் வாழ்க்கை ஒரு மகா நரகமாய் ஆனது. இதில் எங்கிருந்து அவன் சந்தோசத்தை தேடுவது.


© ❤நான் வாணி ❤