...

6 views

தலைமுறை இடைவெளி!
காற்று மெதுவாக வீசிக்கொண்டிருக்க,

கிச்சன் ஜன்னலை சாத்திவிட்டு,

சோபாவில் அமர்ந்து,

நாளிதழைப் புரட்டத் தொடங்கிய போது,

கதவு தட்டப்பட்டது !

சோபாவில் இருந்தபடியே
யாரென்று கேட்க,

மனம் ஒப்பவில்லை,

எனவே,

எனது,

சோம்பலை கடிந்து கொண்டு,

யாரென்று பார்க்க கதவை திறந்த போது,

அழகான பெண் ஒருத்தி
அரை போதையில்,

ஆண்டி,

இது உங்க வீடு தானே?
ஏன் கதவு திறக்க இவ்வளவு நேரம் ஆச்சு?

எனக் கேட்க,

என் கணவர் கேட்பது போல கேட்கிறாள்,

எவளோ தெரியவில்லையே?

வீடு மாறி வந்துவிட்டாளா?-என யோசித்தேன்,

என்ன ஆண்டி? வீட்டுக்காரர் இல்லையென்றால் ஒரே ஜாலிதான் இல்லையா?

என - மீண்டும் - கேட்டாள்-அந்த
அரை லூசு !

இவளுக்கு எவ்வளவு திமிர் ?
இப்படி பேச?

எனக்கு,

கோபம் -முட்டிக் -கொண்டு வர, ஏய் !!

என்னடி வேண்டும்? என்றேன்!

ம் ,

சூப்பர் !

இது கேள்வி !

என்னோட -அழகு -ஆண்டி !

நான் கல்யாணம் பண்ணிக்க உங்கள் பையன் வேண்டும் !

தருவீர்களா?

எனக் - கேட்டு - தோளில் -கை - போட்டு- பேசியவளின்,

துணிவு!

என்னை, அவமதிப்பதாகப்-பட,

இவளை - சும்மா - விட்டால் தவறு-எனத்-தோன்றியது

அடிக்கக் - கை-ஓங்கினேன் !

அந்த நொடி கைதட்டும் ஓசை - என்-கோபத்தை -திசை திருப்பவே,

படபடப்போடு, நான்-
சுற்றும் முற்றும் பார்த்தேன் ,

அதிர்ச்சியாக இருந்தது !

நாளைந்து பேர் கேமராவோடு இருந்தார்கள் !

நீங்கள் எல்லாம் யார்?
என கேட்க ,


மேடம் ! தயவு செய்து தவறாக புரிந்துகொள்ள வேண்டாம் !

இது ஒரு லைவ் ஷோ !

என்றபடி ,

என் கையைக் குலுக்கி,
என்னை ஆசுவாசப்படுத்தினர் !

இந்த காலத்து பிள்ளைகள் -
- சொல்லாமல் - கொள்ளாமல்-

என்னென்ன - வெல்லாமோ -
செய்கிறீர்கள்-என்றபடி,

வீட்டுக்குள் - அழைத்து-உபசரித்த - பொழுது-

குடிகாரியாய் நடித்த பெண்ணின் கழுத்தில் ,

என்னுடைய குடும்ப தாலி தொங்கி கொண்டி-ருந்ததைப்

பார்த்து எனக்கு ஹார்ட்டடாக்கே வந்து -விட்டது !


உங்களுக்கு கதையை படித்து
அட்டாக் வந்திருந்தால்,

தலையெழுத்தே என சகித்து -

மன்னித்து-

கமென்டில் சொல்லிவிடவும்

© s lucas