...

7 views

கடைசியா ஒரு முறை
வணக்கம்,

நம்மில் பல பேருக்கு பிறப்பைப் பற்றின ஏக்கமும் , வருத்தமும் பலச் சமயங்களில் மனதை அரித்துக் கொண்டே தான் இருக்கும் .

அதிலும் ஒரு குடிகார அப்பன் இருந்தாலும் சாபம் தான் , இறந்து போனாலும் வேதனை தான் . அறியா வயதில் அப்பன் இறந்து விட்டான் இருந்திருந்தால் ஒரு வேளை காப்பாற்றுவானோ ? என்ற வேடிக்கையான ஏக்கம் , ஒற்றைப் பிள்ளையாய் வாழ்க்கை , அவ்வளவாக பொறுப்பிள்ளை ஆனால் , அதீத மன அழுத்தங்கள் உண்டு

அப்படி தாங்கிக் கொண்டு வாழும் ஒரு பிள்ளைப் பற்றின வேதனை எந்த தாய்மாரையும் விட்டு வைத்தது கிடையாது. அந்த வேதனையே அந்த தாயின் ஆயுட்காலத்தைக் குறைத்துக் கொண்டே தான் போகும் , அப்படிப்பட்ட ஒரு தாயின் ஆயுட்காலம் முழுவதும் அவள் எதை எதிர் நோக்கினால் என்றும் , ஒவ்வொரு தாய்மார்களின் இறுதி ஆசை என்னவாக இருக்கும் என்றும் இந்தக் கதையினை தொடர்வதன் மூலம் உணரலாம் . அவ்வாறாக ஒரு தாயினைப் பற்றியும் அவளுக்காக உறவாய் இருக்கும் அந்த ஒரே ஒரு மகனைப் பற்றியும் பேசும் கதையே இது .

ஆம் நம் கதையில் வரும் தாய் செல்லம்மா கணவரை இழந்தவள் . இளம் பருவம் முதல் தன் தாய் வீட்டில் மிகச் செல்லமாக வளர்ந்து வயது பருவத்தில் குடிகாரன் என்று தெரியாமல் , தன் தாய் தந்தையார் முடிவு செய்த திருமணத்தை முடிந்து கொண்டு , போராடி வாழ்க்கையை வாழ்ந்தவள். அக்னி சாட்சியாக நடந்த திருமணத்திற்கு அடையாளமாக ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள் . அக்குழந்தை அடி எடுத்து வைக்கும் முன்னே குடித்து குடித்து குடல் செத்து உயிர் விட்ட தன் கணவனின் இறுதி சடங்கை முடித்து வைத்து விட்டு வாழ்க்கையை தொடங்கியவள் செல்லம்மா , தன் மகனோடு அவளுடைய அந்த வாழ்க்கையில் , அவள் எப்படி எல்லாம் போராட்டத்தைச் சந்தித்தாள் அந்த படிக்காத பாமரப் பெண் என்று இனி காண்போம்

ஒரு கிழவியின் ஆயுளை இழுத்துச் செல்லும் அவளின் இறுதி ஆசை அப்படி என்னவாகத் தான் இருக்கும் என்று மிக சுவாரசியமாக இந்த கதையின் முடிவு கதையின் வாசகர்களுக்கு மிக அழகாக எடுத்துரைக்கும் .

 

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

 

ஓர் அழகான பசுமையான ஊர் கோயமுத்தூர் மாநகராட்சியில் , பெரியநாயக்கன் பாளையம் எனும் கிராமம் , அங்கே செல்லம்மாள் ஒரு சிறு பகுதியில் ஓலை குடிசையில் வாழும் ஏழைத்தாய் ஒரே ஒரு ஆண் குழந்தையை தந்து விட்டு குடிப்பழக்கத்தினால் நோய் வாய்ப்பட்டு இறந்தவன் , தன் சிறு வயதிலேயே கணவனை இழந்து தன்னந்தனியே தன் குழந்தையுடன் வாழ்ந்து வரும் அவளின் வாழ்க்கை , ஊர் பெரிய வீட்டில் சென்று வேலை பார்ப்பதன் மூலம் மீண்டும் துவங்கியது .

 

" டேய் பாண்டி அம்மா இன்னைக்கு ஊர் பெரிய வீட்டுல போய் வேலை பார்க்க போறேன் டா அம்மா வேலை பார்க்கும் போது நீ அங்க தா ஒரு ஓரமா ஒக்காந்து கடக்கணு உனக்கு பசி எடுக்கு போது அம்மா உனக்கு சாப்பாடு ஊட்டி விடுவே சரியா சொல்லற பேச்சை மதிக்காம அங்கிட்டு இங்கிட்ட ஓடி அம்மாவ சிரமப்படுத்தக் கூடாது " , 

 ம்மா .......

 

" ஏய் செல்லம்மா வந்துட்டியா சரி சரி வா , உம் புருஷ ஒழுங்கா வேல பாத்து உன்ன காப்பாத்துனா உனக்கு ஏ இந்த நிலம குடிகார பய பொறுப்பில்லாம  குடிச்சிபுட்டு போய் சேந்துட்டா " , 

 

" போனது போச்சுங்கய்யா இப்போ எம் பொழப்ப பாக்கணுமே , கையில ஒரு சின்ன புள்ளைய வச்சிருக்கே அது வயித்துக்கு ரவ கஞ்சி ஊத்தணு முல்ல , 

 

" சரி சரி அந்த தோட்டத்துல முனியாண்டி இருப்பா பாரு , அவங்கிட்ட போய் என்ன வேலை செய்யணும் னு கேளு , அவ சொல்ற வேலைய செய் பொழுது சாயல்ல வந்து உங் கூலிய வாங்கிட்டு போ " ,

 " சரிங்கய்யா நா உத்தரவு வாங்கிக்கிறேனுங்க ய்யா " , 

" அண்ணே ஐயா சொன்ன முனியாண்டி அண்ணனுங்களா நீங்க ? " ,

" ஆமா ஆத்தா , இந்தா இங்க பாரு 

புள்ளைய வச்சுக்கிட்டு ல்லா இங்க வேலைய பாக்க முடியாது , அதா அந்த மோட்டரு பம்பு செட்டு ரூமு இருக்கு பாரு அது பக்கத்துல உம் புள்ளைய குத்த வச்சுட்டு வா " 

" சரிங்க அண்ணே ந்தா சத்த நேரத்துல உக்கார வெச்சிட்டு வந்துடறே ண்ணே " ,

 
" இந்தா பாருடா பாண்டி , அம்மா வேல செய்யப் போறே கிளுகிளுப்ப ஆட்டிகிட்டு உ வாக்குல உக்காந்து இருக்கணு " ,

" எஞ் சாமி " " ம்மோ "

" அண்ணே வந்துட்டே ண்ணே சொல்லுங்கண்ணே " ,

" இந்தா பாரு ஆத்தா இங்க இருக்கிற தென்ன மட்டை எல்லாத்தையு எடுத்து அதா அங்க தெரியுது பாரு அந்த தர நல்லா வெய்ய காயுற இடத்துல கொண்டு போய் கொட்டணு " , சரியா ? , புதுசுங்குறதுனால தா இந்த வேலை நாளைக்கு எல்லாம் வந்தினா தேங்கா உரிச்சிட்டு போனோம் அப்பதான் உனக்கு கூலி சரியா " , 

" சரிங்க ண்ணே " ,

"அம்மாடி ரொம்ப நேரம் ஆச்சோ , யம்மா உச்சிமண்டைய பொலக்குதே சூரிய , தண்ணி குடிச்சிட்டு வருவோ ஆத்தி புள்ள என்ன செய்யுதோ தெரிலயே , புள்ளைக்கு கொஞ்சம் தண்ணிய குடிக்க வச்சிட்டு வருவோ " ,

" எ ராசா பாண்டி சமத்தா உக்காந்து இருக்கீங்களே , இந்தா ய்யா தண்ணி குடி டா ராசா "

"குடிச்சிடீங்களா , அம்மாவு தண்ணி குடிச்சிக்கிடுற" ,

" பாண்டி இங்கனயே உங்காந்து இருங்க அம்மா வேல பாக்க போற இன்னு சத்த நேரத்துல ஐய்யா வூட்டுல சோறு தருவாங்க , நாம போய் சாப்பிடுவோ " ,

" விரசலா வாரி போட்டுட்டு வூட்டுக்கு புள்ளைய கூட்டிட்டு போவோனோ , யம்மா ........ எப்ப கூப்பிடுவாஹ தெரிலயே , புள்ளையு பசியோட கிடக்கு "

, " ஏய் செல்லம்மா பெரிய ஊட்டுல சோறு திங்க கூப்பிடுறாய்ங்க ,
" ஆத்தே த்தோ கூப்டுடா ஹ "

போ உன் புள்ளயு கூட்டிட்டு போய் தின்னுட்டு வந்து வேலைய பாரு " ,

" சரி தாங்கண்ணே " ,

" ஏ செல்ல பாண்டி வா போய் சாப்டு வருவோ , ஐய்யா வூட்ல கூப்டுடா ஹ " .

" நாயக்கர்அம்மா ..... "

" ஏய் ந்தா வீட்டுக்கு பொழக்கால வா "  ,

" இந்தா வரேன்மா " ,

" எ பாண்டி புள்ளைக்கு பசி எடுக்கு தோ , இந்த கொஞ்ச நேரத்துல பெரிய ஊட்டுல சோறு கொடுப்பாங்க சாப்பிடலாஞ் சரியா " , " வா வா வா " , 

" ந்தே இந்தாடி தே அங்குட்டு ஓரமா வச்சிருக்கே பாரு சட்டில சோறு பக்கத்துல மிளகா வத்தலு ,  ஊறுகாயு , கொஞ்ச  வச்சிருக்கேன் தின்னுட்டு போய் வேலைய பாரு " 

" ம் .... மோவ் , .... தயங்கித் தயங்கி வார்த்தை மென்று விழுங்கி , " பழைய சோறு மட்டும் தானுங்களா " , 

" பின்ன மகராசி ராணியோ சுடச்சுட வேச்ச சோறு மணக்க மணக்க குழம்பு கேக்குதோ , இதையே தின்னு உனக்கு இது போது " , 

" ம் மோ வ் , 

" என்ன்னாடி , " பிள்ளைக்கு மட்டு மாச்சு வேற கொஞ்சமா நல்ல சோறு தாங்க மோ வ் ,

" ஏங்க இந்தாங்க இவளுக்கு பாரு நல்ல சோறு வேணுமா , இந்த சோறு போதாதா இங்கிட்டு வந்து என்னன்னு பாரு , 

" ந்தே என்ன செல்லம்மா , வந்த நாளே என்ன பிரச்சனை , 

" ஒன்னு மில்லங்க ஐயா

புள்ளைக்கு மட்டும் கொஞ்சம் நல்ல சோறு கேட்டேனுங்க , 

" நீ போய் சாப்டு நா பிள்ளைக்கு தனியா சோறு தர சொல்ற " , 

" சரிதானுங்க " .

அப்பாடா ...... ஐயா சோறு தரன்னு சொல்லிட்டாரு இப்ப தா மனசு நிறைவா இருக்கு , " ந்தா அங்க இருக்கு சட்டி நாம போய் சாப்பிடுவோம் . நாம வேகமா சாப்பிடுவோ , அப்பதா ஐயா சுடச் சோறு குடுத்ததும் பாண்டிக்கு உடனே ஊட்டி விட முடியு . " டேய் ராசா என்ன டா சோத்தயே குறுகுறுனு உத்துப் பார்த்துக் கிட்டு இருக்க " . புள்ளைக்கு பாவம் பசி போல" . 

" இருடா பாண்டி ஐயா வரட்டும் , இந்த பழைய சோறு எல்லாம் உனக்கு எதுக்கு " , 

நாயக்கர் சொன்னது போல் ஒரு தட்டில் சுடச் சுட கொஞ்சம் சோறும் குழம்பும் ஆவி பறக்க வந்தது , அவள் முன்னே , தடார் என ஒரு சத்தமும் கேட்க திடுக்கென கண் விழித்துப் பார்த்தாள், அருகில் சோறு இருந்தது , சாப்பிட மனமில்லாத செல்லம்மா மனதில் தன் மகனைப் பற்றிய நினைவுகள் மட்டுமே முழுவதும் நிறைந்து இருந்தது . ஆம் அவள் தன் வாழ்க்கை ஆரம்பித்த நாட்களோடு புலம்பிக் கொண்டிருந்தாள் வேலைக்காக வெளியூர் சென்ற தன் மகன் எப்போது வருவான் என்று .



@பூந்தையல்
© All Rights Reserved @poonthaiyal
#lesapesava #லேசாபேசவா #poonthaiyal
#கடைசியாஒருமுறை
#poonthaiyalstories